Showing posts with label வாழ்த்துகள் பா. Show all posts
Showing posts with label வாழ்த்துகள் பா. Show all posts

Tuesday, 28 April 2020

சின்ன சாலி ஆச்சி..

சித்திரை திங்களில் குழிபிறையில்  தானதருமங்கள் செய்து புகழோடு வாழ்ந்த  ஆதினம் அண்ணாமலை ஐயா வீட்டில்  பிறந்த திருவினாள்...

 நம்  குழிபிறை பெரிய சாலியாச்சியின் பெயருமிட்டார்கள்..

 பெரியசாலியாச்சி போல் உள்ளமும் குணமும் கொண்ட எங்கள் சின்ன சாலியாச்சி ...
பூலாங்குறிச்சி சேது ஐயாவின் செல்லமாய் வளர்ந்த இளையமகளாம் அப்பச்சி வார்த்தைக்கு மறுப்பேதும் கூறாத நன்மொழியாள் ...

அப்பசியின் சொல்லுக்கு இனங்க முதுகலைபட்டமும் பெற்று அப்பச்சியை மகிழ்வித்த மாதரசி.. 

மலேயாவில் இருந்த அப்பச்சிக்கு இங்கு பங்குசந்தையில் முதலிடுசெய்ய பேருதவியாய் நின்ற சித்திரப்பாவை... 

1992 ளில் தெக்கூரில்  ககலைத்தந்தை கரு.முத்து.தினா பங்காளி குடும்பத்தில் கரு.கண வீட்டில் வந்து வாழ்ந்து வரும் பதுமை..

வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று மனதில் பட்டதை சொல்லிடும் எங்கள் சாலியாச்சி.. 

அம்பிகையின் மீது அளவற்ற காதலுடன் அவள் புகழ்பாடுவதை கடமையாய் கொண்ட பைங்கொடியாள்.. 

இல்லதார் உயர்வடைய தன் ஆசைகள் திறமைகளில் கவனம் செலுத்தாது தன்னையே அற்பணித்த இல்லதை கட்டிகாத்து வரும் வாழ்வரசி..  

 உற்றார்கள் கை  தளர்தியபோதும் உறுதியாய் மகளின் திருமணத்தை இனிதே முடித்த பொன்மயிலாள்.. 

மற்றார் கையை எதிர்நோக்காது உள்ளதை வைத்து இன்பமாய் வாழ்ந்திட கற்றுக்கொடுத்த நன்மொழியாள்..

 நின்மடியில் யான் உதிக்க என்ன தவம் செய்தேன்..

---- Rm.N.Ramu.