Sunday, 26 October 2014

நம் தமிழ்

நம் தமிழ் அன்னையின் அணிமணிகள் இவைகளே அணிந்து சிறப்பாக காட்சி தருகிறாள்
நம் தமிழ் அன்னையின் அணிமணிகளாகவும் தமிழின் பெருங்காப்பியமாகவும் விளங்குகிறது . இந்த காப்பியங்கள் எல்லாமே அணிமணிகள் பெயரை கொண்டே விளங்குகிறது. பாண்டிய மன்னன் சங்கமன் வைத்து எம்  தமிழ் அன்னையை போற்றி புகழ் பாடினான்.

சிலப்பதிகாரம்(சிலம்பு - கால்களில் அணியும் அணிகலன்)
மணிமேகலை (மேகலை -ஆடை நழுவாமலிருக்க மகளிர் இடுப்பில் அணியும் அணி)
குண்டலகேசி - (குண்டலம் என்பது மகளிர் அணியும் காதுவளையம்) குண்டலமும் கூந்தல் அழகும் கொண்டவள் குண்டலகேசி
வளையாபதி - வளையல் அணிந்த பெண் வளையாபதி
சீவகசிந்தாமணி - சிந்தாமணி என்பது அரசன் முடியில் (கிரீடத்தில்) பதிக்கப்படும் மணிக்கல்.




வாழ்க தமிழ் !! வாழ்க தமிழன்னை !! வாழ்க தமிழ் குலம் !!




கீழுள்ள இந்த பாடல் இலங்கை , மலேசிய , சிங்கை போன்ற நாடுகளில் இந்த பாடலே தமிழ்த்தாய் வாழ்த்தாக உள்ளது . இந்த பாடல் நாம் இன்று பாடும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை விட மிகவும் சொற்சுவையும் பொருட்சுவையுடையதாக உள்ளது .

காதொளிரும் குண்டலமும்,கைக்குவளை
-யாபதியும்,கருணை மார்பின்
மீதொளிர்சிந் தாமணியும், மெல்லிடையில்
மேகலையும், சிலம்பார் இன்பப்
போதொளிர்பூந் தாமரையும், பொன்முடிசூ
ளாமணியும் பொலியச் சூடி,
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
தாங்கு தமிழ் நீடு வாழ்க !
நால்வரிசை அமுதிருக்க, நம்மாழ்வார்
மொழியிருக்கச் சேக்கி ழாரின்
பால்வடிசெந் தமிழிருக்கக் கம்பச்சித்
திரமிருக்கப் பகலே போன்று
ஞாலத்தி லறம்விளங்கும் நாயனார்
குறளிருக்க, நமது நற்றாய்,
காலத்தை வென்றோங்கும் கற்பகம்போற்
கனிபெருகக் கண்டி லோமோ !
                                                  -சுத்தானந்த பாரதியார்

இந்த பாடல் மிகவும் சிறப்பாககவும் தமிழ் மொழியின் உள்ள காப்பியங்கள் புலவர்கள் போன்றவைகைகளையும் தமிழ் அன்னையை பற்றியும் சிறப்பாக கூறுகிறது இந்த பாடல் 

No comments:

Post a Comment