Wednesday, 29 October 2014

யாழ்


யாழ் : 

அழிந்து போன தமிழனின் பழந்தமிழ் இசைக்கருவிகளுள் இதுவும் ஒன்று . இந்த யாழ் இந்த யாழ் பற்றி நம் தமிழ் குடிமக்கள் காப்பியங்களான சிலம்பும் மேகலையிலும் பல எண்ணற்ற செய்திகள் உள்ளன . இதுமட்டும் இல்லாது திருக்குறளிலும்,சீவகசிந்தாமணி ,கலித்தொகை, பரிபாடல் , போன்ற நூல்களும் இது பற்றி உறைகின்றனர்

யாழின் அமைப்பு

யாழ் ஒரு மீட்டி வாசிக்கக்கூடிய நரம்புக்கருவி. இதன் இசையொலி பெருக்கி (resonator) தணக்கு எனும் மரத்தால் செய்யப்பட்டது. இது படகு வடிவமாய் இருக்கும். மேலே தோலால் மூடப்பட்டிருக்கும். இந்தத் தோலுக்குப் போர்வைத்தோல் என்று பெயர். போர்வைத்தோலின் நடுவிலுள்ள மெல்லிய குச்சியின் வழியாக நரம்புகள் கிளம்பி மேலே உள்ள தண்டியுடன் பிணைக்கப்பட்டிருக்கும். சில யாழ்களில் மாடகம் அல்லது முறுக்காணிகள் இருந்தன. அத்தகைய யாழ்களில் நரம்புகள் தண்டியின் துவாரங்களின் வழியாகச் சென்று முறுக்காணிகளில் சுற்றப்பட்டிருக்கும். சிலவற்றில் நரம்புக்கட்டு அல்லது வார்க்கட்டு தண்டியில் வரிசையாகக் காணப்படும். வார்க்கட்டுகளை மேலும் கீழுமாக நகர்த்தி நரம்புகளைச் சுருதி கூட்டினர்.

சங்க நூல்கள் யாழின் உறுப்புகளாக;

பத்தல் ,வறுவாய் ,யாப்பு ,பச்சை ,போர்வை ,துரப்பமை ஆணி ,உந்து ,நரம்பு, கவைக்கடை,மருப்பு ,துவவு

ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றன.. 



இந்த யாழிலும் பல வகைகள் உள்ளன . அவற்றில் சில வகைகள்

வில்யாழ்(21 நரம்புகளை உடையது)
பேரியாழ் (21 நரம்புகளை உடையது)
மகரயாழ் (17 அல்லது 19 நரம்புகளை உடையது)
சகோடயாழ் (16 நரம்புகளை உடையது)
கீசக யாழ் (14 நரம்புகளை உடையது)
செங்கோட்டியாழ் (7 நரம்புகளை உடையது)
சீறியாழ் (7 நரம்புகளை உடையது)
மகர வேல்கொடி யாழ்
மகர யாழ் / காமன் கொடி யாழ்
மகர யாழ் / வர்ணர் ஊர்தி யாழ்


இவற்றைவிட நாரதயாழ், தும்புருயாழ், மருத்துவயாழ், ஆதியாழ் (100 நரம்புகளை உடையது)
மகர யாழ் யவன தேசத்திலிருந்து எடுத்துவரப்பட்டதாகக் கூறப்படுகிறது

யாழ் இசைத்து பாணர்கள் இறைவனையும் மன்னர்களையும் வேண்டி பாடுவார் . இலங்கையில் யாழ்பாணம் என்ற ஒரு நகரம் உண்டு அதற்கு அப்பெயர் வர காரணம் . இதுவும் ஒன்று . யாழ் இசைத்து பாடும் பாணர்கள் அதிகம் இங்கு வாழ்ந்தனர். யாழ் + பாணர் = யாழ்பாணர் என்ற பெயர் மருவி யாழ்பாணம் என்றானது . இன்று பாணர்களும் மறைத்து போயினர் . சில அருங்காட்சியகங்களில் இந்த யாழ் இசை கருவியை காண முடியும் . இந்த யாழை மீட்டு பண் அமைத்து பாட பாணர்களும் இல்லை இந்த இசைக்கருவி கிபி 9 ஆம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்தது . அதற்கு பின் இதன் புழக்கம் மெல்ல மங்கத் தொடங்கி இன்று மறைத்து விட்டது .


                                                         - ஆ.தெக்கூர் கண.இராம.நா.இராமநாதன்

No comments:

Post a Comment