Saturday 6 June 2020

கம்பராமாயணமும் நாகேசுவரன் கோவில் குறுஞ்சிற்பமும் 15

#கம்பராமாயணம் #அயோத்தியா_காண்டம் #குகப்_படலம்

குகனை நாவாய் கொணருமாறு இராமன் பணித்தல் (26)
குகன் நாவாய் கொணர, மூவரும் கங்கையைக் கடத்தல் ( 33,34,35,36 )
நாள் முதற்கு அமைந்த யாவும் நயந்தனன் இயற்றி, நாமத்
தோள் முதற்கு அமைந்த வில்லான், மறையவர் தொடரப் போனான்,
ஆள் முதற்கு அமைந்த கேண்மை அன்பனை நோக்கி, 'ஐய!
கோள் முதற்கு அமைந்த நாவாய் கொணருதி விரைவின்' என்றான். 

சிந்தனை உணர்கிற்பான் சென்றனன், விரைவோடும்;
தந்தனன் நெடு நாவாய்; தாமரை நயனத்தான்
அந்தணர்தமை எல்லாம், 'அருளுதிர் விடை' என்னா,
இந்துவின் நுதலாளோடு இளவலொடு இனிது ஏறா. 33

'விடு, நனி கடிது' என்றான்; மெய் உயிர் அனையானும்,
முடுகினன், நெடு நாவாய்; முரி திரை நெடு நீர்வாய்;
கடிதினின், மட அன்னக் கதிஅது செல, நின்றார்
இடர் உற, மறையோரும் எரி உறு மெழுகு ஆனார். 34

பால் உடை மொழியாளும், பகலவன் அனையானும்,
சேலுடை நெடு நல் நீர் சிந்தினர், விளையாட;
தோலுடை நிமிர் கோலின் துழவிட, எழு நாவாய்,
காலுடை நெடு ஞெண்டின், சென்றது கடிது அம்மா! 35

சாந்து அணி புளினத்தின் தட முலை உயர் கங்கை,
காந்து இன மணி மின்ன, கடி கமழ் கமலத்தின்
சேந்து ஒளி விரியும் தெண் திரை எனும் நிமிர் கையால்,
ஏந்தினள்; ஒரு தானே ஏற்றினள்; இனிது அப்பால். 36
#Chola_miniatures  #panels #Ramayana #kamba_ramayana #comparison #nageswaran_temple #kumbakonam

The next morning Rama expressed his intention to cross the River Ganga. In a short while, Guha got a beautiful boat constructed. Rama, Lakshmana and Sita were all set to leave. 
Guha assists them to cross the river ganga to reach dhandakarnya . While crossing the river lord rama narrates the Holiness of ganga to sita ana Lakshman.

--Ramu.Rm.N

 

No comments:

Post a Comment