Thursday 17 September 2020

கம்பராமாயணமும் நாகேசுவரன் கோவில் குறுஞ்சிற்பமும் 18


#Earlychola #Chola_miniatures  #panels #Ramayana #kamba_ramayana #comparison #nageswaran_temple #kumbakonam
Viradha was a Gandharva and was known as Tumburu, who served Kubera. He took a fancy for Rambha, the celestial nymph and failed in his duties. Kubera cursed him and it was by his curse that Tumburu turned into an ogre.Rama together with Sita saw in that forest full of wild animals a dreadful man-eating ogre of terrific voice. This fellow seems to have had an appetite that could never be appeased and carried ‘a store of food’ – bodies of animals that he killed – on his lance. Kamban, who is very fond of the gothic, soars high in his flight of imagination. And, here is his description of the very same lance of Viradha. ettodu ettu madha maa kari,’ sixteen elephants, ‘iratti arimaa’ thirty-two lions, ‘vatta vengaN aaLi padhinaaru’ and sixteen Yali – the legendary animal with the body of a lion and the trunk of an elephant – ‘kitta ittu idai kidandhana serindhadhu or kai thotta muththalai ayil’ were tied closely – like a string of flowers! – on his lance that he carried in one hand. From the continuing description, we understand that Viradha had used a python to string all the animals to his lance, as if he had decorated it with a string of flowers! And he carried them ever so lightly, in one hand.
#கம்பராமாயணம் #ஆரணிய_காண்டம்
 #விராதன்வதைப்படலம் 

அரசர் மணிமுடி, வானவர் விமானம், வாடத்துக் கோள்கள் ஆகியவற்றைப் பாம்புக் கயிற்றால் கட்டி, சன்னவீரம் என்னும் அணிகலனாக மார்பில் அணிந்திருந்தான் 11
இந்திரனின் யானையினுடைய நெற்றி ஓடையைத் தோள்வளையாக அணிந்திருந்தான் 12
காளிமை, கொடுமை, பாதகம், விடம், கனல் தாங்கி வரும் எமன் போல வந்தான் 13
புலி, யானை – தோல் உடுத்திக்கொண்டு, மலைப்பாம்பைக் கச்சாக இழுத்துக் கட்டிக்கொண்டு வந்தான் 14
சங்குகளைக் கங்கணமாகக் கையில் கட்டிக்கொண்டிருந்தான் 15
வானிலும் மண்ணிலும் இருப்பது போல நடந்து வந்தான் 16
பூதங்கள் எல்லாம் ஓருருவம் கொண்டது போன்ற வலிமை படைத்தவன் அவன் 17
இராம இலக்குவர் முன் விராதன் இவ்வாறு வந்து தோன்றினான் 18
நில் நில் என்று சொல்லிக்கொண்டு தின்னுவதற்காகச் சீதையை ஒரு கையால் தூக்கினான் 19
பன்னகாதிபர் பணா மணி பறித்து, அவை பகுத்
தென்ன, வானவர் விமானம் இடையிட்டு அரவிடைத்
துன்னு கோளினொடு தாரகை, தொடுத்த துழனிச்
சன்னவீரம் இடை மின்னு தட மார்பினொடுமே. 11

பம்பு செக்கர், எரி, ஒக்கும் மயிர் பக்கம் எரிய,
கும்பம் உற்ற உயர் நெற்றியின் விசித்து, ஒளி குலாம்
உம்பருக்கு அரசன் மால் கரியின் ஓடை, எயிறு ஒண்
கிம்புரிப் பெரிய தோள்வளையொடும் கிளரவே. 12

தங்கு திண் கரிய காளிமை தழைந்து தவழ,
பொங்கு வெங் கொடுமை என்பது புழுங்கி எழ, மா
மங்கு பாதகம், விடம், கனல், வயங்கு திமிரக்
கங்குல், பூசி வருகின்ற கலி காலம் எனவே,   13

செற்ற வாள் உழுவை வன் செறி அதள் திருகுறச்
சுற்றி, வாரண உரித் தொகுதி நீவி தொடர,
கொற்றம் மேவு திசை யானையின் மணிக் குலமுடைக்
கற்றை மாசுணம் விரித்து வரி, கச்சு ஒளிரவே. 14

செங் கண் அங்க அரவின் பொரு இல் செம் மணி விராய்,
வெங் கண் அங்கவலயங்களும், இலங்க விரவிச்
சங்கு அணங்கிய சலஞ்சலம் அலம்பு தவளக்
கங்கணங்களும், இலங்கிய கரம் பிறழவே,     15

முந்து வெள்ளிமலை பொன்னின் மலையொடு முரண,
பந்து முந்து கழல் பாடுபட ஊடு படர்வோன்,
வந்து மண்ணினிடையோன் எனினும், வானினிடையோர்
சிந்தையுள்ளும் விழியுள்ளும் உளன் என்ற திறலோன்.     16

பூதம் அத்தனையும் ஓர் வடிவு கொண்டு, புதிது என்று
ஓத ஒத்த உருவத்தன்; உரும் ஒத்த குரலன்;
காதலித்து அயன் அளித்த கடை இட்ட கணிதப்
பாத லக்கம் மதவெற்பு அவை படைத்த வலியான்.   17
சார வந்து, அயல் விலங்கினன் - மரங்கள் தறையில்
பேர, வன் கிரி பிளந்து உக, வளர்ந்து இகல் பெறா
வீர வெஞ் சிலையினோர் எதிர், விராதன் எனும் அக்
கோர வெங் கண் உரும் ஏறு அன கொடுந் தொழிலினான். 18

'நில்லும், நில்லும்' என வந்து, நிணம் உண்ட நெடு வெண்
பல்லும், வல் எயிறும், மின்னு பகு வாய் முழை திறந்து,
அல்லி புல்லும் அலர் அன்னம் அனையாளை, ஒரு கை,
சொல்லும் எல்லையில், முகந்து உயர் விசும்பு தொடர,    19

----Ramu.Rm.N

No comments: