மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கே உரிய தனித்துவமான அனிமணிகள் பலஉள்ளன அவற்றுல் தனித்துவமாக திருமலைநாயக்க மன்னர் நீலநாயக பதக்கமென்ற ஒரு பதக்கமும் செய்து கொடுத்திருக்கிறார். இது பட்டை தீட்டாத பெரிய பெரிய நீலக்கற்கள் பொதிந்த பதக்கம். உலகத்திலுள்ள நீலக்கற்களுக்கே நாயகமான கற்கள் போல இப்பதக்கத்திலுள்ளவை அறிதான
கற்களாக கருதப்படுகின்றது.
இப்பதக்கத்திலுள்ள நீலக்கற்கள்
தோன்றுகின்றன. இவை உருவமும்
பளபளப்பும், அழகும், கவர்ச்சியும், பொலிவும் கொண்டவை. ஏழாம் எட்வர்டு இளவரசர் ஒருமுறை இந்தியாவுக்கு வந்திருந்தபோது மதுரைக்கோயில் பார்க்கவும் தமிழகம்bவந்தார். மதுரையில் அவர் கோவிலையும் கோவிலிலுள்ள ஆபரணங்களையும் பார்த்து மகிழ்ந்தார் இந்த நீல நாயகப் பதக்கம்பார்த்து அப்படியே சொக்கிப்
போனார். பதக்கத்திலுள்ள பெரிய
நீலக்கற்களின் பருமனையும், பட்டையிடாத நிலையிலும் கற்களின் அடிப்பக்கம் திறவையாயிராமல் தகடு பொருத்தி மறைத்திருந்தும் அதன் வனப்பும், எந்தப்பக்கமாகப் பார்த்தாலும் பரவும் பளபளப்பும், ஒளியும் ஊடுருவித்
தெரிவதையுங் கண்டு ஆபரணங்களிலேயே இது மிகமேலான தெனப் பாராட்டி, அவ்வளவிலும் அமையாது தம் தாயாரான
விக்டோரியா மகாராணியார்
பார்த்து மகிழ்வதற்காக இலண்டனுக்கும்
கொண்டு சென்று திரும்பக்கோயில்
கொண்டு வந்து சேர்ப்பித்தாரெனச்
சொல்லப்படுகிறது . அதனால் இப்பதக்கம் 'LondonReturned Gem' என்றும் அழைக்கப்படுகின்றது
மிக தனித்துவமான ஆபரணங்களில் இதுவும் ஒன்று. எந்த பக்கம் பார்த்தாலும் பளபளப்பும், ஒளியும் ஊடுறுவி பளிச்சிடும் இந்த பதக்கத்தில் பத்து பெரிய நீல கற்கள், இரண்டு மாணிக்கம், ஒரு கோமேதம், நான்கு முத்துக்கள் கொண்டு செய்யப்பட்டுள்ளது. இதன் எடை தோராயமாக 30 பவும் இருக்கும் (21 தோலா).தோலா / தோலாத் - தோலா + தங்கம் = தோலாத் தங்கம். மிகவிலை மதிப்புடைய தங்கத்தை விற்பனைக்கு வைக்கும்போது கிராம், சவரன், பவுன், தோலா, பிஸ்கட் என்று எடையை ஆதாரமாகக்கொண்டு வகைப்படுத்துவார்கள். அதன்படி ஒரு தோலா என்பது 11.600 கிராம் எடையுள்ளத் தங்கமாகும். இன்றும் ஆந்திரப் பகுதிகளில் தங்கத்தை தோலா எடையில்தான் குறிப்பிடுகிற வழக்கம் இன்றளவும் உள்ளது.
நீலநாயக பதக்கம் மன்னர் திருமலை நாயக்கமன்னர் கோவிலுக்கு கொடையாக அளித்தது இது உள்ளங்கை அளவு வட்டமான ஒருவகை பதக்கம். இது அரசமரபினருக்கே உரிய ஒருவகை அணிகலன் . இந்த பதக்கம் சன்னவீரத்துடன் நீட்ச்சியாகவே பார்க்கமுடிகின்றது.
சன்னவீரம் என்பது போர் கடவுள்கள், போர் வீரர்கள் மட்டும் அணியும் ஒருவகை வீரச்சங்கிலியாகும். இதனை நாம் பல்லவர், சோழர் கால சிற்பங்களில் இன்றும் காணலாம். இங்கு எடுத்துக்காட்டாக சில குறிப்பிட்டதக்க சன்னவீரத்தின் படங்களை தொகுத்துகாட்டப்பட்டுள்ளது.
இந்த தொகுப்பில் கி.பி4ஆம் நூற்றாண்டை சேர்ந்த ரோமானிய காலத்திய தங்க உடல் சங்கிலி ஒன்று ஹோக்ஸ்னே ஹோர்டில்1992 ஆண்டு கிடைத்துள்ளது. இது தற்போது லண்டனில் உள்ள V&A அருங்காட்சியகத்தில் உள்ளது.சஃபோல்க்கில் என்ற ஒரு உலோகக் கண்டுபிடிப்பாளரால் கண்டுபிடிக்கப்பட்டது இது அமேதிஸ்ட் மற்றும் கார்னெட்டுகள் கொண்டு மையத்தில் பதக்கம் செய்யபட்டுள்ளது மேலும் நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட நான்கு சிங்கத் தலைகளால் அலங்கரிக்கப்பட்ட சங்கிலி முனையங்கள் அந்த பதக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த வகையான உடல் சங்கிலிகள் ரோமானிய கலையில் தோன்றும் அவர்களின் கடவுளரான வீனஸ் அல்லது நிம்ஃப்கள் ஆகியோருடன் தொடர்புடையதாக பார்க்கபடுகின்றது. மேலும் இது மரியாதைக்குரிய உயர் பதவியில் இருந்த இருப்பாலர்களும் அணிந்துள்ளனர். இது சன்னவீரத்துடன் ஓத்த ஒரு நகையாக நாம் பார்க்கமுடிகின்றது.
மதுரையில் உள்ளது போல மற்றுமோர் நீலநாயக பதக்கம் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான அரங்கநாதசுவாமி கோயிலில் உள்ள ஸ்ரீ பெரிய பிராட்டியாரின் நாயகனான நம்பெருமாள்( உற்சவர் ) மற்றவர்களை விட உயர்ந்தவர் என வேறுபடுத்தி காட்ட அவருக்கு மட்டுமே உரித்தானவும் மற்றவர்களிடம் இல்லாத உயரிய பல அஸாதாரண ராஜ போக உபசாரங்கள் செய்யப்படுகின்றது. ஸ்ரீ நம்பெருமாள் மற்ற தேவதாந்திரங்களை விட உயர்ந்தவர் என உலகிற்கு பறை சாற்றும் விதமாக நம்பெருமாளிடம் மட்டுமே இருக்ககூடிய ஒப்பு உயர்வு பெற்றதான, ஸ்ரீநம்பெருமாள் திருமார்பில் திருமகளின் வாசஸ்தலமான பெரிய பிராட்டியார் வீற்றிருக்கும் ஸ்ரீவத்சம் ( திருமரு ) உறைவிடத்தின் அருகில் நம்பெருமாள் திருமார்பில்,சந்தனத்தோடு, குங்ககுமப்பூ, பச்சை கற்பூரம், சேர்த்து,மை போல் அரைத்து,அந்த சந்தன பரலையை தன் திருமார்பில் தரித்து கொண்டு அதன்மேல் நீல நாயகத்தை அனுதினமும் சாத்திக்கொண்டு சேவைசாதிக்கின்றது. இந்த நீல நாயக பதக்கம் மதுரை மற்றும் திருவரங்கத்திற்கே உரிய தனித்துவமான நகைகள். தற்காலத்தில் நம்பெருமாளை பார்த்து மற்ற எம்பெருமாள் கோவில்களிலும் பெருமாளுக்கு அணிந்திருந்தாலும் இந்த பழைய நகையின் வடிவழகிற்கு ஈடாகாது. மேலும் வைணவத்தில் இந்த நீலநாயாக பதக்கத்திற்கு கௌஸ்துபம் என்று மற்றொரு பெயரும் உண்டு. கவுஸ்துபம் என்பது ஒரு வகை ஆபரணத்தை குறிக்கிறது, இது பஞ்சராத்ரா, பத்மசம்ஹிதை மற்றும் வைகானஸ-ஆகாமங்கள் திருமாளுடன் தொடர்புடைய ஒரு முக்கியமான அணிகலனாக இதனை சொல்கிகின்றன. கௌஸ்துபமணி என்பது ஐந்து ரத்தினங்களால் (முத்து, மரகதம், மாணிக்கம் , நீலம் மற்றும் வைரம்) வகைப்படுத்தப்படும் ஒரு சிறப்பு நகையாகும், இது ஐந்து மொத்த கூறுகள் அல்லது பஞ்சபூதங்களை (பூமி, நீர், நெருப்பு, காற்று, ஈதர்) குறிக்கும். சமுத்திரமாஞ்சனாவின் புராணத்தின் படி
தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தைப் பெறுவதற்காக பாற்கடலை ( சமுத்திர மதனம் ) கடைநதனர். அப்போது, பதினான்கு நகைகள் ( இரத்தினங்கள் ) கடலில் இருந்து வெளிப்பட்டன. வெளிவந்த முதல் சில பொக்கிஷங்களில் கௌஸ்துபமும் ஒன்று இது ஒரு "சிறந்த இரத்தினம், தாமரைபோன்ற வடிவுடைய மாணிக்கம்" என்று விவரிக்கப்படுகின்றது . இது ஐந்து ரத்தினங்களைக் கொண்ட ஆபரணமாக குறிப்பிடப்படுகிறது, இது ஒரு பதக்கமாகவோ அல்லது விஷ்ணுவின் நீண்ட வனமாலையையும் அவரின் திருமார்பில் அலங்கரிக்கும் ஒரு சிறப்பு அம்சமாக அறியப்படுகிறது. அனைத்து இரத்தினங்களிலும் மிக அற்புதமான இரத்தினம் என்று நம்பப்படுகிறது மேலும் இது தெய்வீக அதிகாரத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.அதன் நீட்ச்சியாகவே இதனை அரசர்களுடனும் போர்வீரர்களுடன் தொடர்புபடுத்தி பார்க்கமுடிகின்றது.
-- இராமு இராமநாதன் RM N
No comments:
Post a Comment