Thursday, 30 October 2014

என் முதல் கட்டுரை

முகநூல்( www.facebook.com/nnagarathar ) நகரத்தார் பக்கத்திற்காகவும் அந்த பக்கத்தின் வலைபக்கதிர்காகவும்   சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான் எழுதிய முதல் கட்டுரை . இந்த கட்டுரை எமக்கும்  நிறைய செய்திகளையும் நகரத்தார்களின்  செல்வசெழிப்பையும் எமக்கும் தெரியப்படுத்தியது . இத்தனை நகைகள் இவற்றின் தனித்துவமான பெயர்கள் இவைகளில் அழகான தமிழ் பெயர்கள் போன்றவைகள் இவற்றை இன்றும் நகரத்தார்கள் இவ்வாரே தமிழ் பெயர்கள் கொண்டே அழைகின்றனர்.





செட்டிநாட்டு நகைகள் ஒருதொகுப்பு :

நமது செட்டிநாட்டு பகுதிகளில் நாம் பயன்படுத்து சில நகைகளின் பெயர்களும் அதை பற்றியும் இங்கு நாம் பார்போம் . வைர நகைகளும் தங்க நகைகளும் நமவர்களில் இருபாலரும் அணியகுடியவையே .
முதலில் நம் ஆண்கள் அணியும் நகைகளை பற்றி பார்போம்
அரும்புதடை - மோதிரம்
சங்கிலி
குருமாத்து - கைசங்கிலி
கால்மோதிரம் - ஆண்கள் அணியும் மிஞ்சி ( மெட்டி )
தண்டை - காலில் அணியப்படும் வெள்ளியால் செய்த ஒருவித வளையம்
கௌரி சங்கம் - கௌரி சங்கம் என்பது ஒரு உருத்திராட்ச மாலையாகும். இந்த கௌரிசங்கத்தில் உருத்திராட்சங்களை ஒன்றுடன் ஒன்றாக இணைக்கும் இணைப்புகள், தொங்கட்டான் (பெண்டன்ட்) போன்றவை தங்கத்தில் அமைக்கப்படுகிறது. இந்தத் தொங்கட்டானில் ரிசபாருடர் எனும் ரிசப வாகனத்தில் சிவசக்தி சமேதராக அமர்ந்திருக்கும் வடிவம் பொறிக்கப்பட்டிருக்கும்
நட்சத்திர தோடு - இது சிறு பிள்ளை களுக்கு அணிவிகபடும் நகை ஆகும் . எதில் சில்லர் வைரக் கற்கள் அல்லது வெள்ளை பூகற்கள் பதித்து வைத்திருப்பர் . இது ஆண் / பெண் இரு குழந்தைகளுக்கும் அணியபெரும் நகையாகும்

நமது ஆச்சிகள் பயன்படுத்து / பயன்படுத்திய சில நகைகளின் பெயர்களை அதை பற்றியும் இங்கு பார்போம்.
கழுத்திரு - இது செட்டிநாட்டு அணிகலன்களுள் ஒன்றாகும். நகரத்தார் தாலி என்றும் அழைக்கப்படுகிறது. திருமணம் அல்லது சாந்திக் கல்யாண (சஷ்டியப்த பூர்த்தி) நாளன்று மணமகனால் மணமகளுக்கு அணிவிக்கப்படும் ஒரு வகையான கழுத்து அணிகலன் ஆகும்.
கண்டசரம் - வைரகற்கள் பதிக்கப்பட்ட கழுத்தை ஒட்டி அணிவிக்கப்படும் ஒரு வகையான கழுத்து அணிகலன் .
மங்களச்சரம் - தாலி மற்றும் தாலி சங்கிலி முழுவதும் வைரகற்கள் பதிக்கப்பட்ட ஒரு வகை அணிகலன் .
பூச்சரம் - இது பூ வேலைப்பாடுகலுடன் கூடிய தங்கச்சங்கிலி முழுவதும் வைரகற்கள் பதிக்கப்பட்ட ஒரு வகை அணிகலன் .
முத்து மாலை - இது தங்கச்சங்கிலியில் முழுவதும் உயர்ரக முத்துகலால் கோர்க்கபட்ட மாலை . இது ஒரு வகை கழுத்து அணிகலன் .
பாசிமாலை - இது தங்கச்சங்கிலியில் கருகுமணி என்று அழைக்கப்படும் பாசி மணிகளால் கோர்க்கபட்ட மாலை . இது ஒரு வகை கழுத்து அணிகலன் .
வைரக்காப்பு - இது தங்கத்தால் ஆன வளையலின் வெளிப் பகுதிகளில் வைரக்கற்கள் கொண்டு பதிக்கப்பட்ட ஒரு வகையான கையில் அணியகுடிய அணிகலன் .
நெளிகாப்பு - இது தங்கத்தால் ஆன வளையைல் போன்ற அமைப்பில் நெளி நெளி யாக வளைந்து காணப்படும் . இது சாதாரணமாக வீட்டில் உள்ளபோது அணிந்து கொள்ளப்படும் நகைகளில் ஒன்று .
கல்லுக்காப்பு - இது தங்கத்தால் ஆன வளையைல் போன்ற அமைப்பில் வெளிப்புறத்தில் வண்ணக்கற்கள் பதிகபட்டிருகும் .ஒரு வகையான கையில் அணியகுடிய அணிகலன் . ( நீலகல்லுக்காப்பு , சிவப்புகல்லுக்காப்பு , பச்சைகல்லுக்காப்பு )
முத்துக்காப்பு - இது தங்கத்தால் ஆன வளையைல் போன்ற அமைப்பில் வெளிப்புறத்தில் உயர்ரக முத்து பதிகபட்டிருகும் .
பாசிக்காப்பு - இது தங்கத்தால் ஆன வளையைல் போன்ற அமைப்பில் வெளிப்புறத்தில் கருகுமணி என்று அழைக்கப்படும் பாசி பதிகபட்டிருகும் .
வைரத்தோடு - தங்கத்தால் செய்த தோட்டில் முழுவது வைரக்கற்கள் பதிகபட்டிருகும் . ( இதில் ஏழு கல்லு , பதிமுனு கல்லு பதித்தது என்று கணக்குகள் உள்ளன )
வெள்ளகல்லு தோடு - தங்கத்தால் செய்த தோட்டில் வெள்ளை கற்கள் பதிகபடிருகும் . இது சாதரணமாக வீட்டில் உள்ளபோது அணியப்படும் நகையாகும்
பாசித்தோடு - தங்கத்தால் செய்த தோட்டில் இடையில் கருகுமணி பதிகபட்டிருகும் . இதுவும் சாதரணமாக வீட்டில் உள்ளபோது அணியப்படும் நகையாகும்


முத்துத்தோடு - தங்கத்தால் செய்த தோட்டில் இடையில் உயர்ரக முத்து பதிகபட்டிருகும் .
முத்துமோதிரம் / முத்து அரும்புதடை - தங்கத்தால் ஆன அரும்புதடையில் முத்து பதிக்கபட்டிருகும் .
அரும்புதடை - வைரவேட்டு வரிகள் அல்லது பூ நெளிகள் கொண்டு செய்யபட்டிருக்கும் . இதில் யனை முடி பதிக்க பட்டிருக்கும் . இரண்டு வரி அமைப்புகள் கொண்டிருக்கும் . இது கை விரல்களில் அணியப்படும் ஆபரணம் ஆகும் .
மிஞ்சி - இது வெள்ளியால் செய்த ஆபரணம் ஆகும்
( மெட்டி ). கால் விரல்களில் அணியகுடிய ஒன்று . இதில் ஒரு தனி சிறப்பு என்னவென்றால் நம் ஆச்சிகள் மட்டும் கால் விரல்களில் மூன்று வலயங்கள் அணிதிருபர்கள்
இரட்டவடசங்கிலி - இது இரண்டு சங்கிலிகள் ஒன்றோடு ஒன்று சிறிது இடைவெளி விட்டு பினைகபட்டிருக்கு இதில் தாலியை கோர்த்து அணிவர்
ஒற்றை வட சங்கிலி - இது சாதாரணமான தங்க சங்கில்லியாகும் . எதில் தாலியை கோர்த்து அணிவர்
மாங்கா மாலை - இது தங்கத்தால் செய்யப்பட்ட ஒன்று . இது மங்காய் வடிவில் சிறிதாக இருக்கும் . சங்கிலியின் இடையில் சிறு மாங்காய் வடிவ அமைப்புகள் கொர்கபட்டிருகும்


முற்காலத்தில் நமது ஆச்சிகள் தலையில் குத்தும் கொண்டை உசி , உக்கு , சேலையில் குத்த கூடிய உக்குகள் கூட தங்கத்தில் பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது . மற்றும் செட்டியார்கள் தங்கள் சட்டையில் குத்திக் இருந்த பதக்கம் போன்றவைகை வைரம் , சிவப்பு கற்கள் ,நவரத்தினம் போன்ற கற்கள் கொண்ட பாதகங்களை பயன்படுத்தினர் .

செட்டிநாட்டின் தனிச்சிறப்பு ஆச்சிகள் முன்பு காலில் சிலம்பு , கொலுசுகள் போன்றவைகளை அணிய மாட்டார்கள் . திருமணத்திற்கும் முன்பு அணிவர் . திருமணத்திற்கும் பின் முன்பு அணியமாட்டார்கள் . பின் பிள்ளைகள் பிறந்த உடன் இவற்றை தவிர்த்து வந்தனர் . தற்போது சிலர் இவற்றை இன்று அணிகின்றனர் . பலர் கொலுசுகளை அணிவதில்லை . இதற்கும் காரணம் நகரத்தார்கள் கண்ணகியின் வழிவந்தவர்கள் . கார்சிலம்பால் கண்ணகி கோவலனை இழந்ததன் நினைவாக கொலுசு , சிலம்பு போன்றவைகளை ஆச்சிகள் திருமணத்திற்கும் பின் அணிவதில்லை .

. நமது வழக்கத்தில் கட்டயமாக பெண் பிள்ளைக்கு திருமணத்தின் பொது கட்டாயமாக வைரைத் தோடும் அதற்கு மாற்று தோடும் தருவர் .அதே போன்று மணமகனுக்கு வைர மோதிரமுன் வழங்குவது கட்டயமாக உள்ளது . இதை நகைகளில் கணக்கு எடுத்தது கொள்ளபடமார்கள்
ஒருநகை என்றால் பெண்ணுக்கு கன்டசரம் மட்டு கொடுப்பார்கள்
இரண்டு நகை என்றால் பெண்ணுக்கு கன்டசரமும் வைரக்காப்பும் தருவார்கள் அல்லது பூச்சரமும் கன்டசரமும் தருவார்கள் ( கன்டசரம், பூச்சரம் , வைரக்காப்பு , மங்களச்சரம் இவைகளில் எதேனும் இரண்டு தருவார்கள் )
முன்று நகை என்றால் பெண்ணுக்கு கன்டசரம் ,மங்களச்சரம் வைரக்காப்பும் தருவார்கள் அல்லது (கன்டசரம், பூச்சரம் , வைரக்காப்பு , மங்களச்சரம் இவைகளில் எதேனும் மூன்றை தருவார்கள் )

                                                            - ஆ.தெக்கூர் கண. இராம. நா. இராமநாதன்


Wednesday, 29 October 2014

யாழ்


யாழ் : 

அழிந்து போன தமிழனின் பழந்தமிழ் இசைக்கருவிகளுள் இதுவும் ஒன்று . இந்த யாழ் இந்த யாழ் பற்றி நம் தமிழ் குடிமக்கள் காப்பியங்களான சிலம்பும் மேகலையிலும் பல எண்ணற்ற செய்திகள் உள்ளன . இதுமட்டும் இல்லாது திருக்குறளிலும்,சீவகசிந்தாமணி ,கலித்தொகை, பரிபாடல் , போன்ற நூல்களும் இது பற்றி உறைகின்றனர்

யாழின் அமைப்பு

யாழ் ஒரு மீட்டி வாசிக்கக்கூடிய நரம்புக்கருவி. இதன் இசையொலி பெருக்கி (resonator) தணக்கு எனும் மரத்தால் செய்யப்பட்டது. இது படகு வடிவமாய் இருக்கும். மேலே தோலால் மூடப்பட்டிருக்கும். இந்தத் தோலுக்குப் போர்வைத்தோல் என்று பெயர். போர்வைத்தோலின் நடுவிலுள்ள மெல்லிய குச்சியின் வழியாக நரம்புகள் கிளம்பி மேலே உள்ள தண்டியுடன் பிணைக்கப்பட்டிருக்கும். சில யாழ்களில் மாடகம் அல்லது முறுக்காணிகள் இருந்தன. அத்தகைய யாழ்களில் நரம்புகள் தண்டியின் துவாரங்களின் வழியாகச் சென்று முறுக்காணிகளில் சுற்றப்பட்டிருக்கும். சிலவற்றில் நரம்புக்கட்டு அல்லது வார்க்கட்டு தண்டியில் வரிசையாகக் காணப்படும். வார்க்கட்டுகளை மேலும் கீழுமாக நகர்த்தி நரம்புகளைச் சுருதி கூட்டினர்.

சங்க நூல்கள் யாழின் உறுப்புகளாக;

பத்தல் ,வறுவாய் ,யாப்பு ,பச்சை ,போர்வை ,துரப்பமை ஆணி ,உந்து ,நரம்பு, கவைக்கடை,மருப்பு ,துவவு

ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றன.. 



இந்த யாழிலும் பல வகைகள் உள்ளன . அவற்றில் சில வகைகள்

வில்யாழ்(21 நரம்புகளை உடையது)
பேரியாழ் (21 நரம்புகளை உடையது)
மகரயாழ் (17 அல்லது 19 நரம்புகளை உடையது)
சகோடயாழ் (16 நரம்புகளை உடையது)
கீசக யாழ் (14 நரம்புகளை உடையது)
செங்கோட்டியாழ் (7 நரம்புகளை உடையது)
சீறியாழ் (7 நரம்புகளை உடையது)
மகர வேல்கொடி யாழ்
மகர யாழ் / காமன் கொடி யாழ்
மகர யாழ் / வர்ணர் ஊர்தி யாழ்


இவற்றைவிட நாரதயாழ், தும்புருயாழ், மருத்துவயாழ், ஆதியாழ் (100 நரம்புகளை உடையது)
மகர யாழ் யவன தேசத்திலிருந்து எடுத்துவரப்பட்டதாகக் கூறப்படுகிறது

யாழ் இசைத்து பாணர்கள் இறைவனையும் மன்னர்களையும் வேண்டி பாடுவார் . இலங்கையில் யாழ்பாணம் என்ற ஒரு நகரம் உண்டு அதற்கு அப்பெயர் வர காரணம் . இதுவும் ஒன்று . யாழ் இசைத்து பாடும் பாணர்கள் அதிகம் இங்கு வாழ்ந்தனர். யாழ் + பாணர் = யாழ்பாணர் என்ற பெயர் மருவி யாழ்பாணம் என்றானது . இன்று பாணர்களும் மறைத்து போயினர் . சில அருங்காட்சியகங்களில் இந்த யாழ் இசை கருவியை காண முடியும் . இந்த யாழை மீட்டு பண் அமைத்து பாட பாணர்களும் இல்லை இந்த இசைக்கருவி கிபி 9 ஆம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்தது . அதற்கு பின் இதன் புழக்கம் மெல்ல மங்கத் தொடங்கி இன்று மறைத்து விட்டது .


                                                         - ஆ.தெக்கூர் கண.இராம.நா.இராமநாதன்

Tuesday, 28 October 2014

இன்றைய நீர்நிலைகளின் (கண்மாய்கள் ) நிலை

தமிழகத்தில் கனமழையால் ஏரிகள் குளங்கள் நிரம்பி வழிகின்றன என்று கூறுகின்றனர் . சற்று சிந்திக்க வேண்டும் . நம் தமிழகத்தில் பாதிக்கும் மேற்பட்ட ஏரிகள் குளங்கள் துர்வாராமல் அப்படியே விட்டுவிட்டு மண் மூடி மைதானாக மாறியது . சில கம்மாய்கள் குட்டையாகவும் மாறியது . இன்று அந்த குட்டையாக மாறியுள்ள கம்மாய்கள் நிரம்பியது என்று நாம் நிம்மதி கொள்ளமுடியாது . காரணம் இவற்றில் தேங்கும் நீர் ஓரிரு மாதங்கள் தான் தாகுப்பிடிக்கும் . நாம் வறட்சியையும் போதியளவு மழை இல்லாத காலத்தில் நாம் நம் நீர் தேக்கங்களை ஆழப்படுத்தி தூர்வாரி வைத்திருந்தால் நாம் நம் மழைநீரை வீணாக்காமல் சேமித்திருக்கலாம் . இன்று நாம் நீர்நிலைகள் கரையோரமாக உள்ள பகுதிகளை குப்பைதொட்டியாக மாற்றாமல் பாத்துக்க வேண்டும் . நீர்நிலைகள் வெறும் நீர் தேக்கங்கள் மட்டும் அல்ல. இந்த நீர்நிலைகள் எல்லாம் வெறும் மழைநீர் வடிகால்கள் அல்ல என்பதை என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும் .நீரிநிலைகள் இந்த உலகின் உணவுச் சங்கிலியின் முக்கியமான ஒரு பங்கு வகிக்கிறது . இன்று நீர் நிலைகள் இல்லை என்றால் அதில் வாழும் நுண்னுயிர்கள் இல்லை அவற்றை உணவாக உண்ணும் பூச்சிகள் இல்லை , அந்த பூச்சிகள் நம்பி உள்ள தவளை , மீன்கள் இல்லை இவற்றை உணவாக உண்ணும் பாம்பு கழுகு போன்ற உயிரினங்கள் உணவு ??? இப்படி நம் உலகின் உணவு சங்கிலியில் ஒன்றை ஒன்று சார்ந்து தான் உள்ளோம் . இந்த சுழற்சியில் ஒன்று பாதிக்கபட்டால் பாதிப்பு அனைவருக்கும் தான் .இந்த உணவு சங்கலியை பாதுகாக்கும் பொறுப்பு நாம் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக இருக்கவேண்டும். வெறும் மரம் நட்டால் மட்டும் போதாது . அந்த மரத்தால் நமக்கு கிடைக்கும் மழையை சேமிப்பது எப்படி ??? சற்று சிந்தியுங்கள் ???? நமக்கு இந்த இயற்கை அன்னையை பாதுகாக்க உரிமைமட்டும் தான் உண்டு அந்த இயற்கை அன்னையை சேதப்படுத்தி அழிக்க நமக்கு உரிமை இல்லை . அப்படி செய்தால் அழிவு நமக்கும் நம் சங்கதிகளுக்கும் தான் . இயற்கையை பாத்துக்காஅரசைமட்டும் தான் நம்பி இருக்கவேண்டும் என்பதில்லை நாமும் நம் கடமையை இயற்கை அளித்த கோடையை நாம் நம்மால் முடிந்ததை செய்யவேண்டும்.

பிள்ளையார்பட்டி குளம்

ஊரணி

                                                                                                                                                                இன்று குடிக்கும் நீரை கூட காசு கொடுத்து வாங்கும் அவலநிலையில் உள்ளோம். அன்று நம் தமிழகத்தில் பெய்யாதா மழையா இன்று பெய்துவிட்டது . இதை நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் மழைநீர் நீரை நாம் சேமிப்பு செய்து நிலத்தின் நீர்மட்டத்தை பாதுகாப்போம் அன்று கட்டாய மழைநீர் சேமிப்பு திட்டத்தை அரசு கட்டாயமாகியது அன்று நாம் பெயரளவில் இதை நாமும் செய்தோம் .இன்று பல வீடுகளில் மாலை நீர் சேமிப்பு தொட்டிகள் இல்லாமல் செய்து விட்டோம் . சில வீடுகளில் சிறப்பாக இந்த முறையை பராமரித்து மழைநீரை சேமித்தும் வருகின்றனர் .



காஞ்சிபுரம் , திருவள்ளூர் , சென்னை ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும் 1200 நீரி தேக்கம் ஏரிகள் இருந்தன அவற்றை எல்லாம் பிளாட்டு போட்டு ஏரிகளுக்கும் மூடுவிழா நடத்திவிட்டு இன்று எங்கள் நகருக்குள் வெள்ளம் வந்துவிட்டது . பாம்பு மீன் தவளைகள் நீரில் அடித்துக்கொண்டு வீடுகளுக்கும் முன் வருகின்றன என்று புலம்பி என்ன பயன் . அன்று தெரிந்து வினை விதைத்தீர்களோ தெரியாமல் விதைத்தீர்களோ இன்று அவற்றைஅறுவடை அறுவடை செய்தே ஆகவேண்டும் . புலம்பி பயனில்லை . அன்று அமைத்து வைத்த ஏரிகளை நீரி தேக்கங்களாகவும் வடிகால்களாக விளங்கின அவற்றின் மீது வீட்டை கட்டி குடியேறினால் யார் என்ன செய்ய முடியும் ???? 1200 ஏரிகள் இருந்த இந்த மூன்று மாவட்டத்தில் இவற்றை பாதுகாத்து வைக்காமல் அவற்றை இன்று நாம் இழந்து விட்டோம் .இன்று சென்னைக்குள் இருக்கும் ஏரிகளை விரல்விட்டு எண்ணி விடலாம்

சிந்திப்போம் செயல்படுவோம்

Sunday, 26 October 2014

நம் தமிழ்

நம் தமிழ் அன்னையின் அணிமணிகள் இவைகளே அணிந்து சிறப்பாக காட்சி தருகிறாள்
நம் தமிழ் அன்னையின் அணிமணிகளாகவும் தமிழின் பெருங்காப்பியமாகவும் விளங்குகிறது . இந்த காப்பியங்கள் எல்லாமே அணிமணிகள் பெயரை கொண்டே விளங்குகிறது. பாண்டிய மன்னன் சங்கமன் வைத்து எம்  தமிழ் அன்னையை போற்றி புகழ் பாடினான்.

சிலப்பதிகாரம்(சிலம்பு - கால்களில் அணியும் அணிகலன்)
மணிமேகலை (மேகலை -ஆடை நழுவாமலிருக்க மகளிர் இடுப்பில் அணியும் அணி)
குண்டலகேசி - (குண்டலம் என்பது மகளிர் அணியும் காதுவளையம்) குண்டலமும் கூந்தல் அழகும் கொண்டவள் குண்டலகேசி
வளையாபதி - வளையல் அணிந்த பெண் வளையாபதி
சீவகசிந்தாமணி - சிந்தாமணி என்பது அரசன் முடியில் (கிரீடத்தில்) பதிக்கப்படும் மணிக்கல்.




வாழ்க தமிழ் !! வாழ்க தமிழன்னை !! வாழ்க தமிழ் குலம் !!




கீழுள்ள இந்த பாடல் இலங்கை , மலேசிய , சிங்கை போன்ற நாடுகளில் இந்த பாடலே தமிழ்த்தாய் வாழ்த்தாக உள்ளது . இந்த பாடல் நாம் இன்று பாடும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை விட மிகவும் சொற்சுவையும் பொருட்சுவையுடையதாக உள்ளது .

காதொளிரும் குண்டலமும்,கைக்குவளை
-யாபதியும்,கருணை மார்பின்
மீதொளிர்சிந் தாமணியும், மெல்லிடையில்
மேகலையும், சிலம்பார் இன்பப்
போதொளிர்பூந் தாமரையும், பொன்முடிசூ
ளாமணியும் பொலியச் சூடி,
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
தாங்கு தமிழ் நீடு வாழ்க !
நால்வரிசை அமுதிருக்க, நம்மாழ்வார்
மொழியிருக்கச் சேக்கி ழாரின்
பால்வடிசெந் தமிழிருக்கக் கம்பச்சித்
திரமிருக்கப் பகலே போன்று
ஞாலத்தி லறம்விளங்கும் நாயனார்
குறளிருக்க, நமது நற்றாய்,
காலத்தை வென்றோங்கும் கற்பகம்போற்
கனிபெருகக் கண்டி லோமோ !
                                                  -சுத்தானந்த பாரதியார்

இந்த பாடல் மிகவும் சிறப்பாககவும் தமிழ் மொழியின் உள்ள காப்பியங்கள் புலவர்கள் போன்றவைகைகளையும் தமிழ் அன்னையை பற்றியும் சிறப்பாக கூறுகிறது இந்த பாடல் 

Friday, 24 October 2014

என் கற்பக விநாயகர்



ஆரியர்களும் வடநாட்டவர்கள் கொண்டுவந்த கணபதிக்கோ நான்கு கரங்கள் எங்கள் தமிழர்கள் கொண்டாடி தொழுத விநாயகருக்கோ இரண்டே கரங்கள் எங்கள் கற்பகக்தருவிற்கும்  என் முதல் வணக்கங்கள் உலகின் மிகப்பழம்பெரும் கணபதி எங்கள் கற்பகவிநாயகரே பிள்ளையார்பட்டி கற்பகம் அல்ல அல்ல குறையாத வரங்களை தரும் வள்ளல்

கற்பகக் தெய்வத்தின் மீது என் முதல் கவிப்பா





               அண்ட சராசரதிற்கு முழுமுதற் பொருளே 
               ஆற்றங்கரை ஓரத்திலும் இருப்போனே 
               இன்னல்களை போக்க வல்லவனே 
               ஈடு இணை இல்ல முதற்பொருளே 
               உலகிற்கு திருமுறைகளை தந்தவனே 
               ஊழ்வினை போக்க வல்லவனே 
               எலியையும் வாகனமாய் கொண்டோனே 
               ஏழைமை போக்கும் எளியோனே 
               ஐம்புலன்களையும் அடக்கி வாழ்த்திட அருள்போனே 
               ஒன்பது கோள்களையும் அடக்கி அல்பவனே
               ஓம் கார பிரணவத்தின் வடிவானவனே  
               ஒளவையை தும்பிக்கையால் கயிலையில் விட்டோனே 



                                                               - ஆ.தெக்கூர் கண.இராம.நா.இராமு