நாகலாபுரம் வேத நாராயண சுவாமி கோயில்
தமிழக எல்லையோரத்தில் ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு சிறு கிராமம். தமிழகம் பறிகொடுத்த எல்லை பகுதியில் இந்த நாகலாபுரமும் ஒன்று. திருமால் மச்சவடிவில் ஸ்ரீதேவி பூதேவி சமயதராக இத்தலத்தில் காட்சிதருவது இத்தலத்தின் சிறப்பாகும். இங்கு எழுந்தருளி இருக்கும்
எம்பெருமானின் திருப்பெயர் :: வேத நாராயணப் பெருமாள்
தாயார் திருப்பெயர் :: வேதவல்லித்தாயர்
ஆலய அமைப்பு ::
இந்த திருகோவில் விஜய நகர மன்னர் கிருஷ் தேவராயரால் நிறுவப்பட்ட ஆலயமாக சொல்லப்படுகிறது. திருகோவிலில் தமிழ் கல்வெட்டுகள் அதிகமாக காணப்படுகிறது .தெலுங்கு கல்வெட்டுகளும் அங்காங்கே காணப்படுகின்றன. கிருஷ்ணதேவராயன் தன் தாயார் நினைவாக இந்த கோவிலையும் ஊரையும் உருவாக்கி தனது தாயாரின் பெயரான நாகலா தேவி எனபதனையே நாகலாபுரம் என்று சூட்டினார் . இக்கோயிலின் சிறப்பு வேத நாராயணப் பெருமாள் மேற்கு திருக்காட்சி நல்குகின்றார். வேதவல்லி தாயார் கிழக்கு நோக்கி அருளுகிறார். திருக்கோயில் நான்கு புறமும் ராஜகோபுரம் மிகவும் பிரம்மாண்டமான காட்சி தருகிறது. அதனையடுத்து ஆலயத்தின் இரண்டாம் பிரகார ராஜ கோபுரத்தை கடந்தால் ஆலயத்தின் கொடிமரம் , பலிபீடம் , கருடாழ்வார் மேற்கு நோக்கி அருளுகிறார்கள் .அதனை தொடர்ந்து மூன்றாவது ராஜ கோபுரத்தை கடந்தால் ஷேத்தரபாலகர் மற்றும் தும்பிக்கையாழ்வார் அர்த்த மண்டப முகப்பில் அருளுகிறார்கள் மற்றும் உள்ளே பணித்தால் ஜெயன் விஜயன் காட்சி தருகிறார்கள். இவர்களை கடந்தால் உள்ளே கருவறையில் சங்கு சக்கரம் அபய வரத ஹஸ்தத்துடன் மச்சவடியில் வேத நாராயணர் ஸ்ரீதேவி பூதேவி சமயதராக காட்சிதருகிறார் . மேலும் ஆலயத்தின் இரண்டாம் பிறகாரத்தில் பிரம்மோற்சவ வாகனங்கள் வருசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்றும் தென்கிழக்கு மூலையில் பக்த ஆஞ்சநேயர் திருக்காட்சி தருகிறார். மற்றும் ஆலயத்தின் வடமேற்கு மூலையில் வேதவல்லி தாயார் அருளாட்சி நல்குகின்றார். மேலும் இங்கு லக்ஷ்மி நரசிம்மர் , வீர ஆஞ்சநேயர் , பக்தஆஞ்சநேயர் , இராமர் லட்சுமணன் சீதை தனி சன்னதி கொண்டு அருளுகின்றனர்.
தல வரலாறு::
மச்ச அவதாரம் திருமாலின் தசாவதாரங்களில் முதன்மையான அவதாரமாகும். கோமுகன் என்னும் அசுரன் பிரம்மனிடம் இருந்து நான்கு வேதங்களைத் திருடி மீன் வடிவில் கடலுக்கு அடியில் சென்று ஒளிந்து வைத்து கொண்டான் . அசுரனை கண்டுப்பிடித்த திருமால் மச்சவடிவில் அவராதம் செய்து கடலுக்கு அடியில் அசுரனை வதைத்து வேதங்களை மீட்டு பிரம்மாவிடம் ஒப்படைத்தார் என்று மச்ச புராணம் சொல்லுகின்றது.
நான்கு வேதங்களை மீட்டு பிரம்மாவிற்கு இத்தலத்தில் கொடுத்தன் காரணமாக இங்கு அருளும் பெருமாளின் திருப்பெயர் வேத நாராயணப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறது.
ஆலயப் பெருவிழா ::
1. இத்திருக்கோயில் பிரம்மோற்சவம் சித்திரை மாதத்தில் பத்து நாட்கள் மிகவும் சிறப்பாக நிகழ்கிறது .
2. பங்குனி மாதம் வளர்பிறையில் ( சுக்லபட்சம் ) மூன்று நாட்கள் துவாதசி திரயோதசி சதுர்த்தி ஆகிய திதிகளில் மாலையில் சூரியன் பெருமாளை வழிபடுவதாக ஐதிகம். முதல் நாள் சூரியனின் ஒளிக்கதிர் பெருமாளின் பாதத்தை தொட்டு வழிபடுகின்றார் .அதை தொடர்ந்து இரண்டாம் நாள் சூரியன் பெருமாளின் திருமார்பை வழிபடுகின்றனர் .மூன்றாம் நாள் பெருமாளின் தலைப்பகுதியை ஒளிக் கதிர்களால் வழிபடுவது சிறப்பு. அதனை தொடர்ந்து பங்குனி உத்திர நாளில் இரவு தெப்பத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
3.மார்கழியில் வைகுண்ட ஏகாதசி விழா
4. தைமாதப் பிறப்பு ( மகர சங்கராந்தி ) மற்றும் ரதசப்தமி
5.தெலுங்கு வருடப்பிறப்பு .
பூசை நேரம் ::
இத்திருக்கோயில் நித்திய பூசையானது ஆறு காலமும் தொய்வின்றி சிறப்பாக நிகழ்கிறது. காலையில் 6.00 முதல் மதியம் 1.00 வரையும் மாலை 4.00 முதல் இரவு 8.00 திறந்திருக்கும். வேத நாராயண பெருமாளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் காலையில் 8.00மணியளவில் சிறப்பாக திருமஞ்சனம் நிகழ்கிறது. மற்றும் வேதவல்லி தாயாருக்கு வெள்ளி கிழமை காலை 8.00 மணிக்கு நிகழ்கிறது. இத்திருக்கோயில் திருமலைத் திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாடில் செயல்படுகிறது. தற்போது ஆலயத்தின் பராமரிப்பு பணி நிகழ்ந்து வருகிறது .
------ஆ.தெக்கூர் லெனா.கண.இராம.நா.இராமநாதன்
ஆலய விமானம் |
ஸ்ரீ தேவி பூதேவி சமயத வேத நாராயண சுவாமி சுதை சிற்பம் |

அறநிலையத்துறை அறிவுப்பு பலகை |
ஆலய தோற்றம் |
ஆடல் மகளிர் கிழக்கு ராஜகோபுர வாயிலில் |
சிற்ப வேலைப்பாடு ஆலய வாயில் படியின் முகப்பில் |
ஆலயத்தின் தோற்றம் |
ஆலயத்தின் கோபுரத்தின் திருமகள் புடைப்பு சிறப்பும் தமிழக அறநிலையத்துறைக்கு நிகராகவே பராமரிப்பு வேலையை செய்கின்றன |
சிதைந்தைத நிலையில் விமானத்தின் மேல் தளத்தில் உள்ள நவகரக சக்கரம் |
தல வரலாறு::
மச்ச அவதாரம் திருமாலின் தசாவதாரங்களில் முதன்மையான அவதாரமாகும். கோமுகன் என்னும் அசுரன் பிரம்மனிடம் இருந்து நான்கு வேதங்களைத் திருடி மீன் வடிவில் கடலுக்கு அடியில் சென்று ஒளிந்து வைத்து கொண்டான் . அசுரனை கண்டுப்பிடித்த திருமால் மச்சவடிவில் அவராதம் செய்து கடலுக்கு அடியில் அசுரனை வதைத்து வேதங்களை மீட்டு பிரம்மாவிடம் ஒப்படைத்தார் என்று மச்ச புராணம் சொல்லுகின்றது.
நான்கு வேதங்களை மீட்டு பிரம்மாவிற்கு இத்தலத்தில் கொடுத்தன் காரணமாக இங்கு அருளும் பெருமாளின் திருப்பெயர் வேத நாராயணப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறது.
பலிபீடம் கொடிமரம் மற்றும் கருடாழ்வார் |
பெருமாள் சன்னதிக்கு |
திருச்சுற்று |
ஆலயப் பெருவிழா ::
1. இத்திருக்கோயில் பிரம்மோற்சவம் சித்திரை மாதத்தில் பத்து நாட்கள் மிகவும் சிறப்பாக நிகழ்கிறது .
2. பங்குனி மாதம் வளர்பிறையில் ( சுக்லபட்சம் ) மூன்று நாட்கள் துவாதசி திரயோதசி சதுர்த்தி ஆகிய திதிகளில் மாலையில் சூரியன் பெருமாளை வழிபடுவதாக ஐதிகம். முதல் நாள் சூரியனின் ஒளிக்கதிர் பெருமாளின் பாதத்தை தொட்டு வழிபடுகின்றார் .அதை தொடர்ந்து இரண்டாம் நாள் சூரியன் பெருமாளின் திருமார்பை வழிபடுகின்றனர் .மூன்றாம் நாள் பெருமாளின் தலைப்பகுதியை ஒளிக் கதிர்களால் வழிபடுவது சிறப்பு. அதனை தொடர்ந்து பங்குனி உத்திர நாளில் இரவு தெப்பத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
யானைகளின் சிற்பம் ஆலயத்தின் வடகிழக்கு பகுதி திருச்சுற்றில் |
ஆலயத்தின் தென்பகுதி திருச்சுற்று |
3.மார்கழியில் வைகுண்ட ஏகாதசி விழா
4. தைமாதப் பிறப்பு ( மகர சங்கராந்தி ) மற்றும் ரதசப்தமி
5.தெலுங்கு வருடப்பிறப்பு .
வேதவல்லி தாயார் சன்னதி |
தெற்கு ராஜகோபுரம் அடைக்கப்பட்ட நிலையில் |
பூசை நேரம் ::
இத்திருக்கோயில் நித்திய பூசையானது ஆறு காலமும் தொய்வின்றி சிறப்பாக நிகழ்கிறது. காலையில் 6.00 முதல் மதியம் 1.00 வரையும் மாலை 4.00 முதல் இரவு 8.00 திறந்திருக்கும். வேத நாராயண பெருமாளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் காலையில் 8.00மணியளவில் சிறப்பாக திருமஞ்சனம் நிகழ்கிறது. மற்றும் வேதவல்லி தாயாருக்கு வெள்ளி கிழமை காலை 8.00 மணிக்கு நிகழ்கிறது. இத்திருக்கோயில் திருமலைத் திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாடில் செயல்படுகிறது. தற்போது ஆலயத்தின் பராமரிப்பு பணி நிகழ்ந்து வருகிறது .
------ஆ.தெக்கூர் லெனா.கண.இராம.நா.இராமநாதன்
No comments:
Post a Comment