Wednesday 26 August 2020

கதை சொல்லும் செட்டிநாட்டுச் சுதைகள்

 

தமிழ்நாட்டில்,  புதுக்கோட்டை மாவட்டத்தில் சில பகுதிகளையும் சிவகங்கை மாவட்டத்தில்  காரைக்குடியைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கிய 76 ஊர்களை உள்ளடக்கிய பகுதியை  செட்டிநாடு  என்றழைக்கப்படும் பகுதியாகும், இப்பகுதியில் உள்ள பாரம்பரியமான வீடுகள் செட்டிநாட்டு வீடுகள் என்று அழைக்கப்படுகிறது. 18ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டு தொடக்கம் வரை கட்டப்பெற்ற நகரத்தார்களின் செட்டிநாட்டு வீடுகளின் கட்டிடக் கலை உலகப் புகழ்பெற்றவை. இவ்வீடுகள் அனைத்துமே மிக உயரமான தளம் அமைக்கப்பட்டுக் கட்டப்பட்டிருக்கின்றன. உலகளாவிய பாரம்பர்யங்களின் தாக்கங்களினால் நகரத்தார்கள் தங்கள் கட்டிடக்கலையையும் மேம்படுத்தினர். நகர்ப்புறத் திட்டமிடல், நீர் மேலாண்மை, தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு மற்றும் கலை படைப்பாற்றல் ஆகியவை துல்லியமாகத் திட்டமிடப்பட்டு எல்லா செட்டிநாட்டு கிராமங்களிலும் வீடுகள் அமைக்கப்பட்டவை.செட்டிநாட்டு வீடுகள் திராவிடக் கட்டிடக்கலை பாணியுடன் இந்தோ இஸ்லாமிக், இந்தோ ஆர்சனிக்  வேலைப்பாடுகளும் இனைந்து அழகு பொலிபவை. செட்டிநாட்டில் வீடுகள் பெரும்பாலும் முகப்பு முதல் வீதியிலிருந்து பின் கதவுகள் இரண்டாவது வீதிக்கு அமையும் இவ்வளவு நீளமாக கட்டப்பட்ட வீடுகள் அகலமும்  விரிந்து நிறைந்ததாகவே இருக்கும் இவ்வளவு பெரிய வீடுகள் கட்டி வாழ தொடங்கியது சென்ற நூற்றாண்டு இறுதியில் கிபி 1850 முதல் 1900 எனலாம் செட்டிநாட்டில் இவ்வாறு வீடுகள் கட்டிய காலத்தை மூன்று கட்டங்களாக பிரிக்க முடியும்.
 19 நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் பெரும்பாலும் முழுக்க முழுக்க திராவிட கட்டக்கலையே ஒத்தே அமைக்கப்படன. இவ்வீடுகளில் மேற்புறத்தில் திருமகளை காட்டு வழக்கம் தோன்றியது.சென்ற நூற்றாண்டின் இறுதியில் வீடுகள் கட்டுவது தொடங்கப்பட்டாலும் பெருமளவில் வீடுகள் கட்டப்பட்ட காலம் என்பது 1900 முதல் 1920 வரையிலான முதல் உலகப்போரை ஒட்டிய பல நகரத்தார் குடும்பங்களுக்கு வெளிநாட்டு தொடர்பு குறைந்ததால் 1920 முதல் 1940 வரை வீடுகள் கட்டப்பட்டன என்றாலும் முந்தைய காலகட்டத்தை விட எண்ணிக்கை குறைவாகவே இருந்தன.  
முதல் இரண்டு காலகட்டங்களில் கட்டப்பட்ட வீடுகள் நகரத்தார்களின் கட்டிககலை பாணி வீடுகள் என்று சொல்லலாம் நகரத்தார் பாணி வீடுகள் அமைப்பு பெரும்பாலும் முகப்பு, வளவு, கல்யாணகொட்டகை, இரண்டாம் கட்டு, மூன்றாம் கட்டு, அடுப்படி, போஜனஹால், சாலை, கட்டுத்தரை, தோட்டம்  முறையாக வடிவமைப்பை கொண்டிருக்கும்.இவ்வீடுகளில் கவனிக்கத்தக்க வேண்டியது சுண்ணாம்பு கலவை, கருப்பட்டி, கடுக்காய்களை செக்கில் அரைத்து முட்டை வெள்ளைக்கரு கலந்த கலவையை கொண்டு சுவர் பூச்சு அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாதிரியான வீட்டின் ஒழுங்கமைப்புகள் இந்தக் கட்டுக்கோப்பான சமூகத்தின் கட்டமைப்பைக்  கண்ணாடியாகப் பிரதிபலிக்கிறது. தெற்காசிய நாடுகளுடமும் ஐரோப்பிய வணிகத் தொடர்பு ஏற்பட்டதன் பயனாக 1900 பின் கட்டப்பட்ட வீடுகள்  தெற்காசியா மற்றும் ஐரோப்பிய தாக்கத்தை தன்னகத்தே உள்வாங்க துவங்கியது அதன் வெளிப்பாடாக வேலைப்பாடுகள் அமைந்த பர்மா தேக்கு கதவுகள் ஜன்னல்கள் பெல்ஜியம் கண்ணாடி பதித்த கதவுகள், இத்தாலிய மார்பில், கூரையில் பூ வேலைப்பாடுகள், கொத்து விளக்குகள், என வீட்டை அழகுபடுத்தினர். 
வீடுகளின் நுழைவாயில்களில் மேற்புறதில் காப்பாய் கடவுளர்களின் சிலை வைக்கப்பட்டிருப்பதும் இக்காலகட்டத்தில் மெல்ல மாற்றம் பெருகின்ற அவற்றுடன் மேலைநாட்டவர்கள், கந்தர்வர்ள், சேடிப்பெண்கள், பட்சிகள், விலங்குகள் என்றும் ரவிவர்மா பாணியில் இறைவனின் உருவங்களை சுதையால் சமைத்தல் என்பது நகரத்தார் கட்டிடக்கலையின் தனித்துவமாக பார்க்கமுடிகின்றது மற்றும் செட்டிநாட்டு வீடுகளின் நுழைவுவாயிலே நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கதவுகளிலும், அதனைத் தாங்கி நிற்கும் நிலைகளிலும் நேர்த்தியான சிற்பங்கள் பார்ப்பவர்களை வியப்படையச் செய்பவை. 16- 17 ஆம் நூற்றாண்டின் நாயக்கர் காலச் சிற்பக்கலை அமைப்புகளே செட்டிநாட்டின் கம்மார்களின் கலைத்திறன்களுக்கும் முன்மாதிரியாக அமைந்து உருவாக்கப்பட்டவை. 1940 க்குப் பிறகு மிகப்பெரிய அளவில் வீடுகள் கட்டும் போக்கு மாறி சிறிய அளவில் காலத்திற்கு ஏற்ப நவீன பங்களா முறைகளிலும் வீடுகள் கட்டும் பழக்கம் நகரத்தார் மத்தியில் தோன்றியது இவ்வகை வீடுகளை நகரத்தார்கள் அமைப்பதற்கு எழுவங்கோட்டை என்ற பகுதியையில் பெருமளவில் இருந்த கட்டுமான தொழிலாளர்களையும் கம்மாளர்களையே பெரும்பாலும்  பயன்படுத்தி வடிவமைத்துள்ளனர்.

 நகரத்தார்களுக்கு வீடுகள் என்பது அந்தஸ்தின் அடையாளமாகக் கருதப்பட்டது கல்யாணம் சடங்கு போன்றவற்றில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்ததாலும் அதனை தங்கள் வீடுகளிலேயே நடத்த விரும்பியதாலும் நிறைய பேர் கலந்துகொள்ளும் வகையில் பெரிய விருந்துகள் நடத்தும் வகையில் தனித்தனியாக கட்டுகளையும் கொண்ட பெரிய வீடுகளைக் கட்டினர். நகரத்தார்கள் இவ்வளவு பெரிய வீடுகளை கட்டியதற்கான காரணங்கள்  ஒன்று கூட்டு குடும்ப அமைப்பின் ஒவ்வொரு புள்ளியும் தனித்தனியே வாழ்விடங்களையும் அவற்றை நிறைவு செய்யும் வண்ணம் வீடுகள் அமைந்தன. இரண்டாவதாக பருவநிலை மாறுதல்கள் அனைத்திற்கும் எற்றமுறையில் வெவ்வேறு பகுதிகளை கொண்டதாக வீடுகள் வடிவமைப்பு திகழ்கிறது  சிலப்பதிகாரத்தில் கூதிர்பள்ளி, வேனிற்பள்ளி என தனித்தனியாக பள்ளிகளை குறிப்பிடப் பெறுகின்றனர் இந்த பெரிய வீடுகளிலும் வளவு வீடு கூதிர் பள்ளியாகவும் சுற்றுப் பத்திகளும் பட்டா சாலைகளும் வேனிற் பள்ளியாகவும் பயன்படுகின்றன. இவ்வீடுகள் நகரத்தார் சமூகத்தின் கவுரவமாகவுன் பாரம்பரியமாகவும் கருதப்படுகிறது. இவ்வீடுகள் நகரத்தார்கள் வாழ்ந்த கூட்டு வாழ்க்கைக்கு மிகப்பெரிய சான்றாக அமையும்.

 வீடுகளும் சுதைச் சிற்பமும்

இன்று நகரத்தார் வீடுகளை பலரும் வியந்து பார்க்கின்றனர் ஆனால் பெரும்பாலானவர்கள் பார்க்க தவறுவது வீட்டின் முகப்பு பகுதியில் அலங்காரத்திற்காக அமைக்கப்பட்ட சுதைச் சிற்பம் தொகுப்புகளை சற்றே பாராமுகமாய் இன்று பெரும்பான்மையானவர்கள் கடந்து சென்று விடுகின்றனர்.இந்த சுதை சிற்பம் தொகுப்பு நமக்கு பலதரப்பட்ட செய்திகளையும் எடுத்தியம்பும் இந்த சுதைச் சிற்பங்கள் நகரத்தார்களின் வாழ்வியல், சமுகவாழ்வியல், வணிகத் தொடர்பு, போன்ற செய்திகளை நாம் இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும். செட்டிநாட்டு சுதைச் சிற்பங்களை ஐரோப்பிய தாக்கத்திற்கு முன் பின் என பிரித்து பார்க்க முடியும்.

ஐரோப்பிய தாக்கத்திற்கு முன் இருந்த சுதை சிற்பம் தொகுப்புகள் என்பது  நாயக்கர்கள் மற்றும் தஞ்சை  மராட்டியர்களின் காலகட்டத்தில்  பயன்பாட்டில் இருந்த முறையை ஒன்றிணைத்து செட்டிநாடு காணப்பட்ட சில காட்சிகளைப் இணைத்து உருவாக்கப்பட்ட ஒருவகையான சுதைச் சிற்பம் அமைப்பையே பயன்படுத்தியுள்ளனர். சுதைச் சிற்பங்களை உருவாக்கும் போது உட்புறத்தில் கம்பியை பயன்படுத்தி அதன் மீது சாந்து பூசி உருவங்களை உருவாக்கும் பாணியை முதன் முதலில் துவங்கியது செட்டிநாட்டு பகுதியில் தான். அதற்கு முன்பு இருந்த தஞ்சை மராத்தியர்கள் மற்றும் நாயக்கர் பாணியில் இவ்வாறு உட்புறத்தில் கம்பிகள் பயன்படுத்தும் வழக்கம் இல்லை.முற்காலத்தில் சிற்பத் தொகுதியில் காட்டப்பட்டவை யானையுடன் கூடிய திருமகளின் வடிவங்களே மேலும் இந்த திருமகளோடு சேடி பெண்களை காட்டும் வழக்கமும் இருந்துள்ளது.சில வீடுகளில் சேடிப் பெண்கள் மட்டுமில்லாது அரசன் அரசியர், காவலர்கள், நாட்டிய மகளிர், பறவைகளின் வரிசை  போன்ற உருவங்களும் காட்டப்பட்டிருக்கின்றன. இதில் அரசன், அரசி, காவலர்களின் உருவங்களில் பெரும்பாலும்  மராத்தியர்களின் பாணியில் அமைந்து இருக்கின்றன நடன மங்கையர்கள் சேடிப் பெண்கள் போன்ற உருவங்கள் நாயக்கர் பாணியிலும் தஞ்சைமராத்திய சாயலிலும் அமைந்துள்ளன. இக்காலகட்டத்தில் தான் மெல்ல கந்தர்வர்களை சுதையாக காட்டும் வழக்கம் தலை எடுக்கின்றது என்பதனையும் நாம் செட்டி நாட்டில் உள்ள பழமையான சுதைச் சிற்பங்களை பார்க்கும்போது நம்மால் உணர முடிகிறது.
 நகரத்தார் வீடுகளில் பெரும்பாலும் முகப்பு பகுதியில் திருமகளின் வடிவமைக்கப்பட்டிருக்கும் திருமகள் வடிவம் பலதரப்பட்ட செய்திகளையும் தாங்கி நிற்கின்றது ஒர் அமைப்பு. திருமகள் உருவம் வளமையின் அடையாளம் இது சைவ வைணவத்தில் மட்டும் ஏற்றகொண்ட ஒரு உருவக அல்லை. திருமகள் செல்வத்தின் குறியீடாக இன்று பார்க்கப்பட்டாலும் இந்திய சமயங்களான சமணம் பவுத்தம் ஆசீவகம் போன்ற எல்லா சமயத்திலும் வளத்தின் குறியீடுகாவே பார்க்கப்படுகின்றது. திருமகள் உருவம் என்பது தொல்பழங்கால  தாய்தெய்வம் / குத்துகல் வழிபாட்டில் இருந்து வந்த ஒன்று அதன் வெளிப்பாடகவே வளமையின் அடையாளமாக நம் வீடுகளில் முகப்பு பகுதிகளில் வைக்கப்பட்டு இருக்க வேண்டும். 1850 முதல் 1910  காலகட்டத்திற்குள் சமைத்த வடிவங்களில்  பெரும்பாலும் திருமகளை சுற்றி திருவாச்சி காட்டும் வழக்கும் காணப்படுகின்றது சில இடங்களில் மண்டபம் காட்டும் வழக்கமும் இருந்துள்ளது. திருமகளின் உருவம் பெரும்பாலும் நாயக்க பாணியிலும் அல்லது மராத்திய பாணியிலும் அமைக்கப்பட்டிருந்தாலும் அந்த திருமகள் உருவங்களில் பயன்படுத்தப்பட்ட நகைகள் செட்டிநாட்டு பாணியிலும் அமைந்திருந்தன உடனிருக்கும் சேடிப் பெண்கள்  அதாவது சாமரம் வீசும் பணிப்பெண்கள் செட்டிநாட்டிப்  பெண்களின்  உடைபானியில் அமைக்கப்பட்டனர்.
 1910பின் செட்டிநாட்டு பகுதியின் வீடுகளில் கட்டுமானத்தில் ஐரோப்பிய தாக்கத்தினை மெல்ல உள்வாங்கத் துவங்கியதும் சுதைச் சிற்பங்களும்  மெல்ல ஐரோப்பிய தாக்கத்தை உள் வாங்குகின்றன அதன் வெளிப்பாடாக மாடங்களில் ஆங்காங்கே ஆண், பெண், ராஜா, ராணி, கோமாளிகள், ஐரோப்பியர்கள், விலங்குகளின் முகங்களை காட்டும் வழக்கம் ஏற்படுகின்றது. வாயிலின் மேற்புறத்தில் இரட்டை உருவங்களாக சிங்கம், குதிரைக, யாளி, மான்கள்,காவலாளி போன்ற பலவகையான இரட்டை உருவங்களை காட்டும் பழக்கம் இக்காலகட்டத்தில் இருந்தே துவங்குகின்றன அதற்குமுன் சேடிப் பெண்கள் அல்லது இரட்டை நடனமங்கையர்களை மட்டுமே காட்டும் வழக்கமிருந்தது. இக்காலகட்டத்தில் நகரத்தார்கள் தாங்கள் கொண்டு விற்கச் சென்ற தேசத்தில் கண்ட காட்சிகளை எல்லாம் செட்டிநாட்டு பகுதியை சேர்ந்த கம்மாளர்களை கொண்டு மிக நேர்த்தியா இங்கு காட்ட முற்படுகின்றனர். மேலும் மேல் மடங்களில்  இராமன், வேனுகோபாலர், தாயும்குழந்தையும், ஐரோப்பிய ஆண்கள், பெண்கள், நாயுடன் கூடிய காவலர்கள் போன்ற உருவங்களையும் காட்சி படுத்துகின்றனர். பூ மாரி பொழியும் கந்தர்வர்கள், மாலை ஏந்தும் கந்தர்வர்கள் என்று இந்த கந்தவர்களின் பலவிதமான உருவங்களை காட்டத் துவங்குகின்றனர் இக்காலகட்டத்தில் கந்தர்வர்கள் காட்டும் வழக்கம் நன்கு வளர்ச்சியுற்று இருந்தது என்பதனை 1910முதல்1915களுக்கு பின் கட்டிய வீடுகளில் நம்மால் காண முடிகின்றன.

1920 களுக்கு பின் செட்டிநாட்டு சுதை சிற்பங்கள் முழுக்க முழுக்க ரவிவர்மா ஒவிய பாணியையும் சேர்த்து உள்வாங்கி செரித்து அமைகின்றனர். இக்காலகட்டத்தில் வீட்டின் முகப்பு பகுதியில் பலதரப்பட்ட இறையுருவங்கள் காட்டும் வழக்கம் உருவாகியது. ரவிவர்மா ஓவியத்தாக்கம் சுதைச் சிற்பங்களில் உட்புகும் முன்பு திருமகள் உருவம் அமர்ந்த நிலையிலேயே காட்டப்பட்டது அதன் பின் தான் திருமகள் நின்றவடில் காட்டும் சுதைசிற்பங்களில் காடும் வழக்கம் தோன்றியது. பல செட்டிநாட்டு வீடுகளின் முகப்பில் ரவிவர்மா ஓவியங்கள் சுதைகளாக சமைக்கப்பட்டன குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சண்முகர், பிள்ளையார், கஜேந்திர மோக்‌ஷம், வேணுகோபாலர், ருக்மணி சத்தியபாமா சமயத கிருஷ்னர், அல்லி அர்சுனன்  திருமகள், கலைமகள், மீனாட்சி திருக்கல்யாணம், ரிஷபாருடர், யசோதா கண்ணன், பார்வதியுடன் பாலமுருகன், போன்ற உருவங்கள் சமைக்கப்படன. சில வீடுகளில் மேல்புறத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் இலச்சினையும் சுதையில் காட்டியிருகின்றனர். அதோடு வீட்டில் இருபுறமும் மாடங்கள் அமைக்கு வழக்கமும் அக்காலத்தில் இருந்துள்ளது அந்த மாடங்களில் ஆங்காங்கே கிளிகள், புறாக்கள், பறவைகள் போன்ற உருவங்களை சுதையில் நம்மால் காணமுடிகின்றன சில வீடுகளின் மாடங்கள் அமைப்பதற்கு பதிலாக மேற்புறத்தில் சுதையால் இரதங்கள் செய்து நிறுத்தும் வழக்கமும் இருந்து வந்துள்ளன. இந்த இரதங்கள் தத்ரூபமாக செட்டிநாட்டு வெள்ளி இரதங்களில் காணப்படும் அங்கங்களை ஒன்று விடாமல் அப்படியே  காட்டியிருகின்றனர் இதனை உருவாக்கி செட்டிநாட்டு கம்மாளர்கள். இக்காலகட்டத்தில் சமைக்கப்பட்ட சுதைகளில் ரவிவர்மா ஓவியபாணியை ஒத்து அமையத் துவங்கியதன்  காரணமாக மெல்ல இங்கு நம்வசம் இருந்து தொன்மையான சுதைகள் அமைக்கும் பாணி மறையத் துவங்கியது என்பது வருத்தாமான செய்தியே.
1935களுக்கு பின் கட்டப்பட்ட வீடுகளில் பெரும்பான்மையான வீடுகள் அளவு சுருங்க துவங்கியதும் சில வீடுகளில் முகப்பில் சிறிய அளவில் திருமகள், இயற்கை காட்சிகள், தோரணங்கள், திரைச்சீலைகள் என்றும் சுதைகளின் பயப்பாட்டின் தாக்கம் குறைய துவங்கியது வேறு விதமான பரிமாற்றத்தை நோக்கி நரகத்துவங்கியது. அது சுந்ததிர போராட்ட காலகட்டம் என்பதால் சிலர் தங்களின் சுதந்திர போராட்ட உணர்வை காட்டும் விதமாகவும் வீடுகளின் முகப்பில் பாரதமாதா, காந்தி, நேரு, நேத்தாஜி, போன்ற உருவங்கள்  சுதைகளாக சமைத்து  தங்களின் எண்ணங்களையும் சுதந்திர சுதேசிய உணர்வையும் வெளிப்படுத்தினர். மற்றும் ஒரு சுவையான செய்தி செட்டிநாட்டு கிராமங்களில் ஒவ்வொரு ஊருக்கு என்று ஒரு தனித்துவம் உண்டு அதாவது சுதைசிற்பங்கள், கதவுகள்,  கதவுகளின் வர்ணம், மாடங்கள் என்று  எதாவது ஒரு அமைப்பு எல்லா வீடுகளிலும் பொதுவாக அமைப்படும். எடுத்துகாட்டாக குருவிக்கொண்டான்பட்டியில் பெரும்பாலான வீடுகளின் முகப்பு பகுதில் இரட்டை சிங்கம் கர்சனை செய்யும் தோரனையில் நிறுத்தப்பட்டிருக்கும் இது அந்த பகுதியில் மட்டும் சற்று அதிகமாக காணமுடியும்.
நாம் சுதைகள் தானே என்று  கடந்துசெல்கின்றோம் இந்த சுதைகளும் தங்கள் வசம் பல தரப்பட்ட தகவல்களை வைத்துள்ளது. செட்டிநாட்டு வீடுகளில்  உட்புறத்தில் உள்ள தூண்கள், கதவுகள், விளக்குகள், அலங்கார பொருட்கள்  மட்டும் நகரத்தார்களின் வரலாற்றை எடுத்துக்கூறாது அழகுக்காக வீடுகளில் வெளிப்புறத்திலும் வாயில்களில்  சுவற்றிலும் நிறுவப்பட்ட சுதைகளும்  சமகாலத்தின் வாழ்வியல் முறைகளையும் வரலாற்றையும் எடுத்து சொல்லக்கூடிய அளவுக்கு தன்வசம் பலதரப்பட்ட செய்திகளை தாங்கி நிற்கின்றன இவை கூறும் செய்திகளை கேட்கவும் அந்த அழகியலை ரசனையோடு  ஏறெடுத்து பார்க்கத்தான் இன்று  ஆட்கள் மிகக் குறைவாக உள்ளனர். பராமரிப்பற்றும் இயற்கையின் கால சூழ்நிலை காரணமாகவும் பல சுதைகள் தனது கதைகளை கட்டியம் கூறாமல் தனது வாழ்நாளை முடித்துக் கொண்டன என்பது வேதனைக்குரிய செய்தி. எஞ்சியுள்ள சுதைச் சிற்பங்களையாவது மீட்டுருவாக்கம் செய்து அவை சொல்லும் செய்திகளை கேட்க செவிமடுத்து ஆவணப்படுத்துவோம்.

கோயில்களும் நகரத்தார் அமைத்த சுதைகளும் 

 கி.பி 7ஆம் நூற்றாண்டு முதல் பல்லவர், சோழர், பாண்டியர், நாயக்கர், விஜயநகரர், மராத்தியர், சேதுபதிகள்,  சிவகங்கை மன்னர்கள் என்று அரச மரபினர்கள் எண்ணற்ற கோயில்களை கட்டியும் புனரமைத்து வந்துள்ளனர் அவை இன்று கலைச் சின்னங்களாகவும்  பண்பாட்டு சின்னங்களாகவும் இருக்கின்றன. அவர்கள் காலத்துக்கு பின்னர் மன்னர் பின்னோர் மரபினர் என்று காப்பியங்கள் சொல்லும் நகரத்தார்கள் அப்பணியை ஏற்று  குமரி முதல் வேங்கடம் வரை என பாடல் பெற்ற பல திருத்தலங்களில் உள்ள பழம்பெரும் கோவில்களைப் புதுப்பித்தலும் அவ்வாறு புண்ணிய தலங்களில் பலவற்றை திருப்பணி செய்து பராமரித்தலும் இறைபணியை தம் குலப்ணியாக ஏற்றனர்.  நகரத்தார்கள் சீரிய பக்தியால் தமிழக கோவில்களை பலமுறை பழுது பார்க்கப்பட்டுள்ளன. எனவே தான் " கோவில் பழுதானால் கூப்பிடு செட்டியாரை" என்பது தமிழகத்தில் பல்வேறு பகுதியில் வழங்கப்படும் ஒர் பழமொழியாகும்.

 நகரத்தார்கள் பாண்டிய நாட்டில் குடியேறிய கி.பி 8 ஆம் நூற்றாண்டில் இருந்தே கோயில் திருப்பணிகள் ஈடுபட்டனர் என செவிவழிச் செய்தியாக கூறுகின்றனர் இதற்கு எந்தவித சான்றுகளும் தற்சமயம் இல்லை என்றாலும் கி.பி 16 ஆம் நூற்றாண்டிலிருந்தே கோவில்கள் திருப்பணி, ஊரணி அமைத்தல் போன்ற சமயப் பணிகளில் ஈடுபட்தற்கான கல்வெட்டு சான்றுகள் ஏராளம் கிடைக்கின்றன எனினும் கி.பி 18 முதல் 20 ஆம் நூற்றாண்டுகளில் செய்ய நகரத்தார் செய்த திருப்பணி காலவாரியாக  ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. நகரத்தார்கள்  ஊர்களில் ஒன்றாக அரியக்குடியில் அமைந்துள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் 1818ஆம் ஆண்டு திருப்பணி முடிந்து முதல் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இக்கோயிலே முதன் முதலில் நகரத்தார்கள் கற்றளியாக எடுத்ததாக சொல்லபடுகின்றது. இரண்டாவதாக 1820 ஆம் ஆண்டு உ.சிறுவயல் பொன்னழகி அம்மன் கோயிலின் திருப்பணிகள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 நகரத்தார் கோவில்களும் சிற்பங்களும் செட்டிநாட்டு  கம்மாளர்களால்  உருவாக்கப்பட்டவை இவர்கள் பிள்ளையார்பட்டி, அருணாசலபுரம், தேவகோட்டை, எழுவன்கோட்டை,  வைரவன்பட்டி போன்ற ஊர்களை பூர்வீகமாகக் கொண்டவர்கள். நகரத்தார் கோயில்களில் காணப்படும் சிற்பங்கள் வாஸ்து சாஸ்திரம், மயமதம், மானசாரம், சகளாதிகாரம், காசியப சிற்பசாஸ்திரம், சாரஸ்வதிய சித்திர தர்மசாஸ்திரம், பிராமிய சித்ர கர்ம சாஸ்திரம், ஸ்ரீ தத்துவநிதி ஆகிய சிற்ப நூல்களில் கூறுகின்ற இலக்கணப்படி காணப்படுகின்றன. நகரக்கோயில்கள் காமிகாகமம், காரணாகமம் ஆகிய ஆகம முறைப்படி கோயில்களில் சிற்பங்களை பெரும் சிற்பிகள் துணையோடு அமைக்கப்பட்டது. நகரத்தார்கள் நம்நாட்டில் கங்கைக் கரை வரை என பல பகுதிகளையும் வாணிபம் காரணமாக சுற்றிப்பார்த்து பல்வேறு கோயில்கள் அமைப்புகளையும் கூர்ந்து நோக்கியும் பல்லவர், சோழர், பாண்டியர், நாயக்கர் கால சிற்பங்களில் குறைகளை விடுத்து நிறைகளை ஏற்றுக் கொண்டு தனக்கென தனி பாணியை வகுத்துக் கொண்டனர் கோயில்களை அமைத்தனர்.
சோழர் காலத்துக்கு முன்பு வரை இறைவிக்கு என தனி சன்னதி இல்லை பொ.பி 11ஆம் நூற்றாண்டிலிருந்து இறைவிக்கு காமகோட்டம் அமைக்கும் வழக்கம் துவங்குகின்றது இதன் தொடர்ச்சியாக பிற்கால சோழர்கள்  இறைவனுக்கும் இறைவிக்கும் தனித்தனி ஆலயங்கள் அமைக்கப்பட்டன. இறைவன் கோயிலுக்கு இடப்புறம் இறைவி கோயில் அமையும் ஆனால் சிவன் சக்தி ஆகிய இருவரையும் ஒரே ஆலயத்தில் பக்கம் பக்கமாக வீற்றிருக்க செய்தவர்கள் நகரத்தார்கள் என சிற்பக்கலை வல்லுனர் டாக்டர் வை. கணபதி ஸ்தபதி ஐயா அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இவ்வாறே நகரத்தார்கள் அமைத்த கோயிலில் மேடை மீது கிழக்கு நோக்கிய சிவபெருமான் சன்னதியும் தெற்கு  நோக்கிய இறைவியின் சன்னதியும் அமைந்திருக்கும். இதே பாணியே  நகரத்தார்கள் வாழும் ஊர்களில் கட்டப்பட்ட நகர கோயில்களும் பின்பற்றி அமைத்துள்ளது.
 கோவில் அமைப்பில் பள்ளப்பத்தி முறை என்பது நகரத்தார்க்கே உரிய தனித்துவமான பாணியாகும். கருவறை தளத்தை உயரத்தி நிலைக் கோபுர உயரத்திற்கு சமமாக கருவறைப் விமானங்களையும் அமைத்தனர். இக்கோவில் அமைப்பு என்பது  கோவிலில் நுழையும் போது கொடிமரம், நந்தி, பலிபீடம், முகமண்டபம், பள்ளப்பிரகாரம், திருச்சுற்று மாளிகை, மாளிகைபத்தி,  பரிவார ஆலயங்கள், வாகன அறையி,  உற்சவர் அறை, கருவூலம், யாகசாலை, வியஞ்சன மண்டபம், மடைப்பள்ளி, மலர் மேடை, கோவில் கிணறு, அலங்கார மண்டபம், மேல் சுற்று பிரகாரத்தில் மகா மண்டபம், அம்மன் சன்னதி, வைரவர் சன்னதி, பள்ளியறை, நடராஜர் சபை, அர்த்த மண்டபம், கருவறை என நகரத்தார் கோவில் அமைப்பு இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கும். இறைவனுக்கு  முன்பாக அர்த்த மண்டபத்தில் ஐம்பொன்னால் செய்த கண்ணாடி படிமமும் நந்தியும் அமைக்கும் வழக்கம் நகரத்தார்கள் காலத்தில் கொண்டுவரப்பட்டுதே இறைவனுக்கு செய்யும் சோடச உபசாரங்கள் கண்ணாடியும் ஒன்று. கண்ணாடி சக்தியாகவும்  அதன் ஒளியில் சிவனும் இருப்பதால் இதனை ஆராதிப்பவர்களும் தரிசிப்பவர்களுக்கும் ஞானத்தை அடைவார்கள் என சொல்லப்படுகின்றது.
கோயிலில் காணப்படும் தூண் வகைகளை வைத்தே இது எந்த பாணியில் கட்டப்பட்ட கோயில் என்று கூறலாம் கல்தூண்கள்  கால், பாதம், கலசம், தாடி, குடம், பத்மம், பலகை, போதிகை என எட்டு பகுதிகளை கொண்டது. தூணை உத்திரத்துடன் இணைக்கும் பகுதியில் போதிகை எனப்படும். நகரத்தார்களின் கட்டிடபாணியில் பொதிகையில் கீழ் ஒரு சிங்கத்தின் சிற்பம் கூடுதலாகக் காட்டப்படும். சித்திரக்கால், அணியொட்டிகால்,  கர்ணக்கால் என்று மூன்று வகையான தூண்களை நகரத்தார் புனரமைத்த கோயில்களில் காணலாம். மேலும் போதிகையில் உள்ள பூமுனை ஒரே கல்லில் செதுக்காமல் தனியாக செய்து காடி கொடுத்து கையால் திருகி பொருத்துமாறு அமைந்துள்ளமை நகரத்தார்களின் கலைக்கு ஒர் எடுத்துக்காட்டு. இவ்வாறே நகரத்தார்கள் புனர்நிர்மாண செய்த கோயில்களில் இவற்றுள் ஏதேனும் ஒரு அமைப்பை நம்மால் காணமுடியும்.

கோயில்களும் நகரத்தார்கள் செய்த சுதை வேலைப்பாடுகள்

நகரத்தார் வீடுகளைப் போல கோயில் திருப்பணியின் போது  இங்கும் அமைக்கப்பட்ட சுதை வேலைப்பாடுகள் கால வாரியாக நம்மால் பிரித்து காணமுடியும். கோவில் சுதை தொகுப்பில்  நகரத்தார்களின் தனித்துவம் என்று குறிப்பிட வேண்டுமென்றால் ஆலய விமானங்கள், கோபுரம் போன்றவற்றில் காணப்படும் பாரஹாரர்களுக்கு ( சுமைதாங்கிகள் )  தலைப்பாகைகள், முண்டாசுகட்டு, சட்டை, பதக்கங்கள், ஐரோப்பியகாவலர்கள் போன்ற தோற்றத்திலும் குறவன் குறத்தி வேடுவர்கள் போன்ற உருவில் சுமைதாங்கிகள் காட்டப்படும் வழக்கம் இருந்துள்ளது. அத்தோடு அவர்களுக்கு அருகில் பறவைகளை காட்டும் வழக்கமும் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் கோபுரத்தின் கர்ணக்கூடு பகுதிகளில் கந்தர்வர்கள், குழந்தைகள், அரசன், அரசி முகங்கள் காட்டுதல், ஆலயத்தின் மதில்சுவற்றில் நாக்கு பகுதியின் மையத்தில் பெரும்பாலும் ரவிவர்மா பாணியில் வள்ளி தெய்வானையுடனான சண்முகர், சயனகோலத்தில் திருமால் , வாசுதேவர், ஆலமர்செல்வன், இராமர் பட்டாபிஷேகம் போன்றவையும் காட்சிகள் பெரும்பாலும் காணமுடியுகின்றது.
ராஜகோபுரங்களில் இரட்டை குதிரை வீரன், பிரிட்டிஷ் சிப்பாய்கள், சேடிப்பெண்கள், பிரிட்டிஷ் உடையுடுத்திய மக்கள், பாரதமாதா, சுதந்திர போராட்ட தியாகிகள், போன்ற உருவங்களை நம்மால் காணமுடியும் அத்தோடு  குறிப்பிடத்தக்க ஒன்று என்றால் இறைவனும் இறைவியும் ரிஷபத்தில் இருப்பவர்களாக காட்டப்படும். செட்டிநாட்டில் மட்டும் சுதைகளில் அம்மாள் ரிஷபம் மாற்றும் ரிஷபமாக காட்டும் வழக்கம் இருக்கின்றது. ரவிவர்மா சமைத்த இறையுருவங்களை முப்பரிமாணத்தில் மிக நேர்த்தியாக காண வேண்டுமாயின் அவற்றை செட்டிநாட்டு பகுதியில் உள்ள வீடுகளிலும் கோவில் கோபுரங்களில் நம்மால் இன்றுவரை காணமுடியுகின்றது அவ்வாறு மிக நேர்த்தியாக வேலைப்பாடுகள் நிறைந்த கோபுரங்கள் செட்டிநாட்டு பகுதிகளில் பல இடங்களில் காணமுடியும். எடுத்துக்காட்டாக குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அரியக்குடி பெருமாள் கோவில் ராஜகோபுரம், ஆத்தங்குடி, பட்டமங்கலம், குருவிக்கொண்டான்பட்டி சிவன் கோயில்கள் ராஜகோபுரம் மிக சிறந்த வேலைப்பாடுகள் நிறைந்தவை. மிதிலைப்பட்டி சிவன்கோலில் ராஜகோபுரத்தில் மிக அழகாகவும் நேர்த்தியாக ரவிவர்மா பாணியின்  அமைந்த சுதைகள் நிறைந்து காணப்படுகிறது. நகரத்தார்கள் திருப்பணி செய்த பல கோவில்களிலும் செட்டிநாட்டு கலைப்பாணி சுதைகள் நம்மால் இன்றுவரை காணமுடிகிறது. திருவையாறு ஐய்யாரப்பர் கோவில், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலிசுவதிருக்கோயில், திருவிற்குடி வீரட்டானேசுவரர் திருக்கோயில் போன்றவை மிகச்சிறந்த சான்றுகளாகும். 
செட்டிநாட்டில் நகரக்கோவிலின் முகப்பு பகுதிகளில் பெரும்பாலும் இரட்டை யானையும் பாகனும் காட்டுவர், அதோடு  அம்மன் சன்னதி நுழைவாயிலில் லலிதா தர்பார் காட்சியும் இறைவனின் சன்னதி வாயிலில் மீனாட்சி திருமணம் அல்லது இடபாருடர் காட்டும் வழக்கம் உள்ளது. அத்தோடு கோவிலின் நான்கு மூலைகளிலும் உள்ள பூதகணங்கள் மற்றும் காளையின் உருங்கள் மிகவும் உயிரோட்டமாகவே செட்டிநாட்டின் கம்மாளர்கள் வடிவமைத்துள்ளார். 
இதுபோல் கருப்பர் கோவில்களிலும்  சுதையால் செய்யப்பட்ட பெரியளவிலான குதிரைகள், யானைகள், பூதகணங்கள் மிகவும் உயிரோட்டமாகவும் காட்சியளிக்கும் இவற்றுள் எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டும் என்றால் கத்தப்பட்டு தொட்டியத்து கருப்பர் ஆலயத்தில் உள்ள உயரமான குதிரைகள், காரைக்குடி பொய்சொல்லா மெய்யர் ஆலய புரவிகளும் பூதகணங்களும், இராங்கியம் கருப்பர் கோவிலின் முகப்பில் உள்ள ஆக்ரோஷமான அனுமன் மற்றும் குதிரையை தாங்கி நிற்கும் பூதகணங்கள்  மிகச்சிறந்த சான்றுகள். இப்படி 20 ஆம்  நூற்றாண்டின் முற்பகுதியில்  நகரத்தார்களின் திருப்பணியில் செய்யப்பட்ட சுதை வேலைப்பாடுகள் மிக நேர்த்தியாகவை  இவை இன்றும்வரை  செட்டிநாட்டு கம்மாளர்களின் திறமைக்கு கட்டியம் கூறுபவையாகவே இருக்கின்றது.

இன்று நாம் பலரும் திருத்தலங்களுக்கு  செல்வதனை கடமையாக கொண்டுள்ளோம் அப்படி செல்லும்போது பலரும் இறைவனைக் கண்டால் போதும் என்ற மனநிலையில் நேராக மூலவரையும் பரிவார தெய்வங்களையும் தரிசித்து அவசரகதியில் ஆலய ஆலயத்தை விட்டு வெளியேறி தத்தம் வேலைகளுக்கு சென்று விடுகின்றோம். ஆனால் ஆலயங்கள் என்பவை அன்று முதல் இன்று வரை மக்களின் வாழ்வியலின் பிரதிபலிப்பாகவே பார்க்க முடிகின்றது. 
நாம் கடந்து வந்த சமுகவாழ்வியலின் பரிமாணத்தையே  ஆலயத்தில் உள்ள உலோகதிருமேணிகள், சிற்பங்கள், வாகனங்கள், சுதைகள் போன்றவை பார்க்கும் போது நமக்கு புரியவரும். ஆலயத்தில் உள்ள சுதைகளும், சிற்பங்களும் அத்தலப்பெருமை, புராணம், அச்சூழலியல், மக்களின் வாழ்வியல் போன்றவற்றை நமக்கு எடுத்துச் சொல்லும் அத்தோடு இவை நம் கண்ணுக்கு விருந்தாகவும் மனதுக்கு அமைதியையும் தரும். இக்காலகட்டத்திலும் செய்யப்படும் சுதை வேலைப்பாடு என்பது நகரத்தார்களின் பாணியிலேயே அமைகின்றன சுதைகளின் உட்புறத் கூடுகளை உட்புறத்தில் கம்பிகளை கொடுத்தே இன்றளவும் சுதைகள் செய்யப்படுகின்றன ஆனால் மூலப் பொருளாக  சிமெண்ட்டை தற்காலத்தில் பயன்படுத்துகின்றனர். முதலாம்  20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சுதைகளில் ஏற்பட்ட ரவிவர்மாவின் தாக்கம்  என்பது இன்றளவும் சுதைகளில் மேற்கத்திய பாணியின் சாய்லோடு கோலோச்சிக் கொண்டுடிருகின்றது.

வேணும் மலையாளத் தொட்டியத்துக் கருப்பர் துணை
--தெக்கூர்.இராம.நா.இராமு இராமநாதன்

செட்டிநாடும் நகரத்தார் அணிமணிகளும்

தங்கத்தின் மீதான நமது ஆர்வம், 5000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகத்தின்போதே மக்கள் மத்தியில் தொடங்கியவிட்டது. தங்க நகையின் வரலாறு நாட்டின் வரலாற்றையும் செழுமையையும் எடுத்துரைக்கிறது. கலாச்சாரம், வரலாறு மற்றும் அதன் அழகியலின் பளிச்சென்ற வெளிப்பாடே தங்க நகை. இலக்கியம், பழங்கதைகள், புனைவுகள் மற்றும் கட்டுரைகளை ஆதாரமாகக் கொண்ட இவை பாரம்பரியத்தின் சான்றாக விளங்கும் இதற்கு உலகில் ஈடுஇணையே இல்லை.சிந்து சமவெளி நாகரிகம்,ஹரப்பா மொகந்தஜாரோ நாகரிகம் அகழ்வாய்வுகளில் பொன்னால் செய்த நகைகள் கிடைத்துள்ளன.தங்கத் தகட்டிலான நெற்றியில் அணியும் ஆபரணத்தின் தாக்கத்தைக்  கொண்டிருக்கிறது.  மொஹஞ்சதாரோவின் வீழ்ச்சிக்குப் பிறகு, இந்திய நகை மிகவும் பயன்பாடு மென்மையானதாகவும் நுணுக்கமானதாகவும் மாறியிருந்திருக்கின்றது. சங்க காலத்தின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் தங்கம் விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் முத்துக்களைப் பயன்படுத்திய தமிழ் சமூகத்தைப் பற்றிக் கூறுகிறது. இதனை அடிப்பயாக கொண்டு பார்க்கும்போது தமிழர் அழகியலில் அணிகலங்களுக்கு  ஒரு முக்கிய இடமுண்டு. பண்டைய காலம்தொட்டு நகைகளை ஆக்குவதும் அணிவதும் தமிழர் பண்பாட்டில் ஒரு முக்கிய. அம்சமாக  இருந்துவந்துள்ளது. பொன்னாலும் நவமணிகளாலும் (வைரம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், வைடூரியம், நீலம், கோமெதகம், முத்து, பவளம்) ஆன அணிகலன்களே தமிழருள் மதிப்பு பெற்றவை. "அம்மதிப்பு பணமதிப்பு (பொருள் மதிப்பு) மனமதிப்பு என இரண்டாகும்."  இத்தகைய தமிழர்களால் ஆக்கப்பட்ட அணியப்பட்ட அணிகலன்களைத் தமிழர் அணிகலன்கள் எனக் குறிக்கலாம். அவ்வகையில் தமிழ் சமூகத்தின் அங்கமான ஒவ்வொரு குமுகாகங்களும் தங்களுக்கு என்று தனித்துவமான சில அணி மணிகளை பயன்பாட்டில் கொண்டு இருந்துள்ளனர். இக்கட்டுரையில் நகரத்தார் சமுகத்தில் பயன்பாட்டில் இருந்த அணிகலன்கள் பற்றி சற்று விரிவாக பார்போம்.

நகரத்தார்கள் சோழ நாட்டின் காவிரிபூம்பட்டினம் நகரத்தை  பூர்வீகமாக கொண்ட வணிகர்க்குழு.பின்னர் சில காரணங்களால்  பாண்டிய நாட்டினெல்லை பகுதியில் சுற்றிய 96 கிராமங்களில் குடியேறினர். இவை. தமிழ்நாட்டின் தற்போதைய சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 76 ஊர்களை பூர்வீகமாகக் கொண்டு நகரத்தார்கள் வாழும் இந்த பகுதி செட்டிநாடு என்று இன்று  அழைக்கபடுகின்றது. வணிகத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டவர்கள். லேவாதெவி தொழிலில் அதிக முனைப்போடு 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை இருந்தனர். சைவமும் தமிழும் தழைத்து இனிதோங்கச் செய்ததில் நகரத்தார்களின் பங்கு அதிகம் உள்ளது. நகரத்தார்களின் திருமண பதிவு ஆவணமாகிய இசைப் பிடிமானத்தில் மணப்பெண் அணியும் சில அணிமணிகள் பற்றிய குறிப்பு காணப்படுகின்றன அவை பூஷணம், மோதிரம்,பொன்வளையல் என்பவை இதில் இடம் பெறுபவை இவற்றுல் பூஷணம் என்பது கழுத்துருவை குறிக்கும் என்று சில தமிழ் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
இன்று இந்தியாவில் வைர நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களில் 40% செட்டிநாடு பகுதியை சார்ந்தவர்கள் . பொதுவாக 5 சென்ட் வைரங்களை சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர் போன்ற பல்வேறு பகுதி மக்கள் வாங்குகின்றனர் ஆனால் செட்டிநாடு பகுதி மக்கள் குறைந்தபட்ச 25 சென்டுகள் வைரைத்தை அணிய பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடதக்கது. ஆனால் முற்காலத்தில் நகரத்தார்கள் மாணிக்கம் கற்களையே தங்களின் வாழ்வியலில் பயன்படுத்தியுள்ளர். தாய்லாந்து, கம்போடியா,பர்மா போன்ற நாடுகளில் மாணிக்கங்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் உள்ளன இலங்கையிலும்  மாணிக்கத்தை காட்டிலும் நீலம் அதிகளவில் கிடைக்கிறது இவற்றையே நகரத்தார்கள் தங்கள் வணிகத் தொடர்பின் காரணமாக பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும் இத்தோடு முத்து, மரகதத்தின் பயன்பாடும் நகரத்தார்கள் மத்தியில் அதிகளவில் இருந்துள்ளதை  நம்மால் காணமுடிகிறது. செட்டிநாட்டு நகைகள் என்பதனை இரண்டாக பிரிக்கலாம் சடங்குக்கான நகைகள் மற்றும்  ஆபரணவகைகள் என்று வேற்றுமை படுத்திபார்க்க முடியும்.சடங்குசார் நகைகள் என்று பார்த்தால் கழுத்திரு மற்றும் கவுரிசங்கம் போன்றவை விஷேச தினங்களில் பயன்படுத்தும் ஆபரணங்களாகவும் தனித்துவமான ஒன்றாகவும் பார்க்கமுடியும்.

திருச்சோடிப்பு என்ற கழுத்திரு :
 நகரத்தார்களின் தனித்துவமான அடையாளங்களில் ஒன்று கழுத்திரு என்ற திருமங்கலநாண். இதனை திருச்சோடிப்பு ,கழுத்துரு அல்லது கழுத்திரு என அழைக்கப்படுகின்றனது. 
திருவானவள் அழகுற பெண்ணின் கழுத்தில் நின்று அலங்கரிக்கின்றாள் எனவும் மணமகளின் கழுத்தில் உருக்கொண்டிருப்பதால் கழுத்துரு எனவும் மணமகளின் கழுத்தில் திருவாக இருப்பதால்  கழுத்திரு  எனவும் சொல்லப்படுகின்றது. கழுத்திருவாகிய திருமங்கல நாணில் மொத்தம் 34 உருப்படிகள் கொண்டவை அவை திருஏத்தனம் -1 ,ஏத்தனம் -4, திருமங்கலம் -1, உரு - 19 ,சரிமணி -4,கடைமணி -2 , துவாளை -1,குச்சி -1,தும்பு -1 . குச்சி,தும்பு,துவாளை ஆகிய மூன்று உறுப்புகள் திருப்பூட்டுதலின் போது கழுத்துருவில் இணைக்காமல் மணமகன் மூன்று முடிச்சை போடுகிறார்,,பின்னர் இம் மூன்றும் இணைக்கப்படுகிறது.

நகரத்தார் திருமணத்தில் திருப்பூட்டுதல் என்றே சொல்லும் வழமை இன்றுவரை உள்ளது அதன் காரணம் மணமகளின் கழுத்தில் மணமகன் திருவாகிய திருமங்கலநாணை, கடைமணிகளில்   இருந்து வரும் புற அக  நாண்களின்  இருமுனையையும் குச்சி, தும்பு  இடை, துவாளை இட்டு  பூட்டுவதால் திருப்பூட்டுதல் என்று அழைக்கப்படுகிறது. அதுபோல்  பூண் என்பது நகை குறிக்கும் ஒர் தமிழ்சொல்லாகவும் உள்ளது. பூணைப் பூட்டுதல் என்பதே சரியான தொடர் ஆதலால் திருப்பூட்டுதல் என்பது நல்ல இலக்கிய வழக்கு இதனை இன்றுவரை நகரத்தார் மட்டுமே வழங்குகின்றனர். கழுத்திருவின் புறநாண் என்பது மணமகனின் கடமையையும் அகனாண் மணமகளின் கடமையும்  கழுத்துருவில் அகம் புறப் பணிகள் யார் யாருடையதென தெளிவு படுத்தப்பட்டதுடன் -புறத்தில் ஆண் நாண் அகத்தில் பெண் நாண் என்பதனை சுட்டுவதாகவே அமைக்கப்பட்டுள்ளது.
வணிகனின் இல்வாழ்க்கையில், வணிகம் சார்ந்த புற பணிகளை வணிகனான  மணமகன்,  திருஏத்தனம்  துணையை  மனதில் உரு ஏற்றி, பல உருவாக தன் இரு கைகள் எனும் ஏத்தனத்தால் அறவழியில் செய்து திருவை ஈட்டுதலையும் மணமகள் கணவன் ஈட்டிய திருவை தன் இருகை ஏத்தனம் கொண்டு சிந்தாமல் சிதறாமல் பெற்று அதை பல உரு ஆக்கி திருமகளாய் அகத்தில் என்றென்றும் கொலு வீற்றிருப்பதனையும் ஆண், பெண் இருபாலர் குறியீடாக கழுத்துரு  இருப்பது வெளிப்படுத்துகின்றது. பண்டைய காலங்களில், கடற்கரை நகரமான பூம்புகார் போன்ற இடங்களில் வாழ்ந்தபோது இயற்கை பொருட்களான,நண்டின் கால்களை பதப்படுத்தியும், முத்து, பவளம் சேர்த்தும் செய்ததாகவும் பின்னர் உலோகங்களான வெள்ளீயம், பித்தளை, வெள்ளிக்குமாறி தற்போது சில நூற்றாண்டுகளுக்கு  மேலாக தங்கத்தில் செய்துவருவதாகவும் நம்பப்படுகிறது. 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து கிடைக்கு கழுத்திருக்கள் அளவில் மிகப்பெரியதாகவும் அதாவது  300 விராகன் எடை கழுத்திரு கிட்டத்தட்ட 1 கிலோ என்ற அளவில் நேர்த்தியாகவும் செய்தி பயன்படுத்தும் வழக்கு இருந்துள்ளது.அதன் பின் மெல்ல கழுத்திரு அளவு குறைந்து கொண்டே வந்து தற்சமயம் 11 பவன் எடையில் செய்யப்படுகின்றன.  கழுத்துருவை திருமணத்திற்கு பின்னர் மணிவிழா பிறை ஆயிரம் கண்ட பெருவிழா ஆகியவற்றின் விழா நாயகியாக உள்ள மகளிர் அணிந்து கொள்வது வழக்கமாக உள்ளது. மேல்பத்தூர், மேல வட்டகை போன்ற பகுதிகளில் திருமணத்தன்றும்  மணமகனின் தாய், சகோதரி ஆகியோர் கழுத்தில் அணியும் பழக்கம் இன்றுவரை உள்ளது. அதுபோல் துக்கன நிகழ்வுகளின் போது கழுத்திரு கட்டும் வழக்கம் இப்பகுயினரிடம் உள்ளது.

திருவாதிரை கழுத்திரு

திருவாதிரை புதுமையின் என்பது நகரத்தார் குமுகாயத்தில் பத்து வயது முதல் பதினோரு வயசுப் பெண்களுக்கு திருவாதிரைப் புதுமை செய்வார்கள்அக்காலத்தில் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று பெண்ணுக்கு செய்யப்படும் ஒருவகை சடங்கு இதனை அரைக்கல்யாணம் என்று அழைக்கப்படும் இதன் மூலம் எங்க வீட்டுல கல்யாணத்துக்கு பெண் இருக்கின்றாள் என்பதனை அறிவிக்கிற சடங்காவும் இது நிகழ்த்தப்பட்டது. அப்போது  இந்த புதுமைகழுத்திரு என்ற அணிகலன் பெண்ணுக்கு அணிவிக்கப்படும். புதுமை  கழுத்திரு என்பது மொத்தம் 5 உருப்படிகள் கொண்டு  அவை திருஏத்தனம் -1 ,ஏத்தனம் -2,  உரு -2 கொண்டு திருமங்கல நாணில் இணைத்து பூட்டப்படும் அத்துடன் சூரியபிறை, சந்திரபிறை ஜடைநாகம், மாங்காய் மாலை, பவுன் மாலை , காசுமாலை கையில குடங்கை ஒட்டியாணம் என்றுப் வைரம்,மரகதம் மற்றும் மாணிக்கம் கற்கள் கொண்டு செய்யப்பட்ட நகைகள் கொண்டு அலங்கரித்து சிவாலயத்திற்கோ பிள்ளையார் கோவிலுக்கோ சென்றுவருவதை ஒரு சடங்காக நிகழ்த்தப்படும். இவ்விழா தற்காலத்தில் வழக்கொழிந்துவிட்டது. 

"காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்" 

மணிவாசகரின் மார்கழி நீராடல்  என்ற 14 வது திருவென்பாவை பாடலை
ஆதாரமாக வைத்து தலை முதல் கால்  வரை வைரநகை அணிவித்து தங்கள் பெண்டுகளுக்கு  மார்கழித்  திருவாதிரைப் புதுமை விழாவை  செய்து மகிழ்ந்துள்ளனர் இதன் மூலம் நகரத்தார்கள் சைவத்தின் மீதும் சைவசிந்தாந்ததின் மீதும் கொண்ட ஈடுப்பாட்டை நம்மால் நன்கு உணரமுடிகிறது. 

கௌரிசங்கம் என்ற சிவகண்டி

கௌரிசங்கம் என்பது தற்கால பேச்சுவழக்கில் சொல்லப்படும் ஐந்து முக உருத்திராட்சம் கொண்டு செய்யப்பட்ட மாலையாகும். இது உண்மையில் கவுரிசங்கம் என்பது இரண்டு முக உருத்ராட்சத்தை சுட்டு ஒர் சொல். நகரத்தார்கள் சைவர்கள் என்பதால் திருமணத்திற்கு முன்பு தங்கள் குருபீடங்களில் உபதேசம் கேட்பது தங்களின் தலையாய கடமையாக கொண்டிருந்தனர் அப்போது ஆண்கள் அணியும் முக்கிய அணிகளில் இதுவும் ஒன்று. அதன் பின் சாந்தி கலியாணத்தின் போதும்  தாய் தந்தையாரின் இறப்பின் போது அதுசார்ந்த சடங்கின் போதும் அணிந்து கொள்ளும் வழமையான அன்று நகரத்தார்கள் கொண்டிருந்தனர். கவுரி+சங்கரர் அதாவது அர்த்தநாரீஸ்வர தத்துவம் சிவன் மற்றும் சக்தியின் சேர்க்கையை சுட்டும் சொல். சிவசக்தியின் சேக்கையே உலகின் இயக்கமாக சைவர்கள் நம்புகிறார்கள் மேலும் இதன் அடிப்படையில் இவ்வகை உருத்ராட்சம் சக மனிதர்களுடனான உறவுகளை மேம்படுத்தும் திறன் மற்றும் இல்வாழ்க்கையினை மேம்பபடுத்தும் போன்ற நம்பிக்கைகள் உண்டு. இதன் காரணமாக நகரத்தார்கள் உருத்திராட்ச மாலையின் மையப்பகுதியில் சிவசக்தியின் உருவங்களை காட்ட முற்பட்டனர். 
கௌரிசங்கரம் என்பதே இதன் சரியான சொல்லாடல் இதனை சிவகண்டி என்றே அன்று நகரத்தார்கள் அழைத்து வந்துள்ளனர் காலபோக்கில் இச்சொல்லாடல் வழக்கொழிந்துவிட்டது. இந்த கௌரிசங்கத்தில்  உருத்திராட்சங்களை ஒன்றுடன் ஒன்றாக இணைக்கும் இணைப்புகள், தொங்கட்டான் மற்றும் கழுத்துபகுதியில் ஒரு தொங்கட்டான் போன்றவை தங்கத்தில் அமைக்கப்படுகிறது. தற்காலத்தில் வெள்ளியில் செய்து தங்க உலாம் பூசி பயன்படுத்துகின்றனர் இந்தத் தொங்கட்டானில்  முன்பகுதியில் பெரும்பாலும் இடபாருடர் எனும் இடப வாகனத்தில் சிவசக்தி சமேதராக அமர்ந்திருக்கும் வடிவம் பொறிக்கப்பட்டிருக்கும் அதன் கீழ்புறம் உள்ள குழியில் இருமுக உருத்திராட்சம் வைக்கப்பட்டு இருக்கும்.இதன் பின்புறம் நடராசர் சிவகாமி மற்றும் பிள்ளையார் முருகனின் உருவங்களை செதுக்கியிருப்பர்.ஆனால் முற்காலத்தில் பயன்பாடில் இருந்த கவுரிசங்கங்கள் முழுக்க முழுக்க இருமுக உருத்திராட்சம் கொண்டு செய்து அதில்  அம்ம்பாள் சிவபூசை , நடராசர் சிவகாமி , பாலமுருகன் , சண்முகர் போன்ற உருவங்களும் முன்பகுதியில் காட்டப்படும் வழக்கம் இருந்துள்ளது. இந்த கவரிசங்கத்தில் காணப்படும் நுண்ணிய வேலைப்பாடு செட்டிநாட்டு கம்மாளர்களின்  கலைத்திறனுக்கு ஒர் சிறந்த சான்றாகும்.

 நகரத்தார் குமுகாயத்தினர் பயன்படுத்தும் ஆபரணங்கள் என்று பார்த்தால் இதனை மூன்றாகப் பிரிக்கலாம் அவை பெண்டிர் அணிமனிகள், ஆடவர் அணிமணி, குழந்தைகள் அணிமணி.
ஆண்கள் அணி மணிகள் என்று எடுத்துக் கொண்டோமானால் முற்காலத்தில் கவுடு (கழுத்திலணிவதும் பொற்குவளையில் பூட்டிய உருத்திராட்சமணி்), கழுத்துச் சங்கிலி, குருமாத்து என்ற கைச்சங்கிலி, தங்கச்சங்கிலி, வைர மோதிரம் தங்க மோதிரம், அரும்புதடை, ரத்தினமோதிரங்கள், நவரத்தின மோதிரம், உருத்ராட்ச மாலை, நவகண்டி மாலை, மகரகண்டியும், தங்க அரைஞான் கயிறு, ரத்தினகடுக்கன், முடிச்சுகடுக்கன் போன்றவை அணிகளை பயன்படுத்தி இருக்கின்றனர். நகரத்தார் ஆண்கள் கார்த்திகைபுதுமை, உபதேசம்கேட்டல், திருமணம் போன்ற சுப நிகழ்வுகளில் கட்டாயம் பயன்படுத்தும் அணிகளாக அன்று இருந்தவை மயூராகண்டி, மகரகண்டி,முத்து மாலை, புலிநகம் போன்றவற்றை அணிந்துள்ளனர் மேலும் அக்காலத்தில் தலைப்பாகை அணியும் வழக்கம் நகரத்தார் மத்தியில் இருந்துள்ளது தலைப்பாகையை விசேஷ காலங்களில் நன்கு அலங்கரித்து பயன்படுத்தியுள்ளனர் அந்த தலைப்பாகையில் வடநாட்டு நகைகளாக கருதப்படும் கலிங்க துராயையும் பயன்படுத்தியுள்ளனர் இவற்றை ரத்தினக் கற்கள், மரகதம் மட்டும் அல்லாது பட்டை தீட்டப்படாத வைரம்  போன்ற கற்கள் கொண்டு செய்தும் பயன்படுத்தி உள்ளனர். இவற்றை ஆடவர்கள் மட்டும் இல்லாது பெரியவர்களும் தங்களின் விழாக்களில் உபயோகித்துள்ளனர் இவையும் மாணிக்கம் மரகதம் வைரம் போன்ற நவரத்தின கற்களை கொண்டு நேர்த்தியான வடிவமைத்து பயன்படுத்தியுள்ளனர். தற்கால வழக்கத்தில் மகரகண்டி, மயூரகண்டி, தாழிபதக்கம், தங்க அரைஞாண் கயிறு போன்றவையின் பயன்பாடு இல்லை. தற்காலத்தில் மகரகண்டி, மயூரகண்டி என்பது மயில் பதக்கம் என்ற பெயரில் பயன்படுத்துகின்றனர் இந்த பதக்கத்தின் மையப்பகுதியில் தோகை விரித்த மயில் உருவம் காட்டப்பட்டுள்ளது இதனையே திருமணத்தின்போது ஆடவர்கள் அணிகின்றனர் அதுபோல் தற்காலத்தில் பெரியவர்கள் தங்களது மணி விழாக்களில் கவுரிசங்கம் மட்டுமே அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 நகரத்தார் ஆச்சிகள் பயன்படுத்திய அணிகள் என்று சற்று விரிவாக காதில் அணிந்தவை என்று பார்த்தால்  சந்திரபாணி, தொங்கட்டான், குச்சி, கொப்பு போன்றவை பயன்பாட்டில் இருந்துள்ளன. சந்திரபாணி என்பது காதோலையை ஓத்த ஒருவகையான காதணி. சற்று சிறிய அளவில் தங்கத்தால் காதோலை செய்து அதன் மையப்பகுதியில் ரத்தினக் கற்களை கொண்டு நிரப்பி காதில் அணியப்பட்டது. இதுவே பின்னாளில்  13 கல் 11 தோடாக உருகொண்டது இதனோடு மாட்டலும் பின் பயன்பாட்டுக்கு வந்தது மாட்டல்கள் ரத்தின கற்கள் பதித்தும் தங்கத்தால் செய்தும் அக்காலத்தில் பயன்படுத்தியுள்ளனர். 
காலவெள்ளத்தில் இன்று தோடு தொங்கட்டான் மாட்டல் மட்டுமே பயன்பாடில் உள்ளது வெகுசிலரிடம் மட்டுமே கொப்பு போடும் பழக்கம் இன்று உள்ளது. மூக்கினில் அணி பூட்டுவது என்பது  நகரத்தார்கள் மத்தியில் குறைவாகவே அக்காலத்தில் இருந்துள்ளது பெரும்பாலும் மூக்கின் இரு பகுதியிலும் வைர மூக்குத்தி அணிவது வழக்கில் இருந்துள்ளது இந்த  வழக்கம் பெரும்பாலும் நாயக்கர்களின் தாக்கத்தால் நகரத்தார் மத்தியில் ஏற்பட்டிருக்க வேண்டும்.

 நகரத்தார் பெண்களின் பயன்பாட்டில் இருந்த கழுத்தணி வகைகளாக சவுடு ( தங்கத்தால் செய்த ஒரு வகை கழுத்தை நெருக்கி அணியப்படும் இதன் மையத்தில் சிறு மாணிக்கபதக்கம் மட்டும் கொண்டிருக்கும் பிற சமூகத்தினர் இதனை அட்டிகை என்று அழைப்பர் ), மணிக்கோவை/ நெல்லிக்காய் மாலை(தங்க மணியும் பவளமும் இணைத்து கோர்க்கப்பட்ட அணிகலன்), கை கட்டை(சிறிய அளவிலான தங்கம் மணிகளும் பவளமும் சேர்த்த செய்யப்பட்ட ஒரு வகை அணி), வெள்ளியால் செய்த இடைச்சூரி/காரி(வெள்ளியால் செய்த மணிகளை இடையில் கோர்த்து கழுத்தில் அணியும் ஒரு வகை வளையம்), கண்டசரம்(கண்டத்தை ஒட்டி அணியும் ஒரு வகை அணி மாணிக்கம்/ வைர கற்கள் கொண்டு சற்றும் பட்டையாய அணியப்படும்), பூச்சரம் ( இதுவும் மரகதம்/மாணிக்கம்/வைர கற்கள் கொண்டு சற்றும் சற்று பெரிய அளவில் பட்டையாய செய்யப்பட்டு அதில் அரும்புகள், பூக்கள், கொடிகள் என்று மிக நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட அணிகள் ) மங்களசரம் (வைரத்தாலியும் அதன் துணை உறுப்புகளாக தாயத்து, பொட்டு மற்றும் சங்கிலிப்பகுதியையும் மாணிக்கம் / வைர கற்கள் கொண்டு செய்து அணியப்படும் அணிகலன்) இவற்றுள் சவுடு, இடைச்சூரி,கைக்கடை போன்றவை அன்றைய காலகட்டத்தில் தினமும் பயன்படுத்தும் கழுத்தணிகளாக இருந்து வந்துள்ளன.திருமணமான பெண்கள் தங்களின் தாலியில் காசுகள், ரத்தினம் தாயத்துகள், பவளங்கள், பவளமணிகள் போன்றவற்றை தங்களது தாலியோடு சங்கிலியுடன் இணைத்து அணிந்து வந்துள்ளனர். மற்ற சமூகத்தவர்களை போல அக்காலக்கட்டத்தில் ஆச்சிகள் மத்தியிலும் காசுமாலை, மோகனமாலை, நவரத்தினமாலை, மாங்காய்மாலை, முத்துமாலை, பாசிமாலை போன்ற கழுத்தணிகள் புழக்கத்தில் இருந்துள்ளது. தற்காலத்தில் சவுடு,  மணிக்கோவை/ நெல்லிக்காய் மாலை, கை கட்டை,இடைச்சூரி/காரி போன்றவை வழக்கில் இல்லை. நகரத்தார் சமூகத்தில் தங்கச் சங்கிலியில் தாலியை கோர்த்து அணியும் பழக்கம்  உள்ளது திருமணத்தின்போது பெரிய தாலி  சின்ன தாலி என்று  இரண்டு தங்கத்தாலி அணிவிக்கப்படும் இதில் ஒன்றை மட்டுமே அன்றாட வாழ்வியல் அணிந்து கொள்ளும் வழக்கம் இன்றுவரை உள்ளது. நகரத்தார் தாலி என்பது பிற சமூகத்தைவிட சற்று  வேறுபட்டு  நடுவில் வீடு போன்ற அமைப்பும் இருபுறமும் மகாலட்சுமி பொட்டும் உடையதாக காணப்படுகின்றது. 

கையில் அணியும் அணிகளாக அன்று பயன்பாட்டில் இருந்தவை திருகுகாப்பு, கங்கணம்காப்பு, தங்ககாப்பு, ரத்தினகாப்பு, தங்கத்தாலான தோள்வளை தின பயன்பாட்டிற்கான வெள்ளியாலான தோள்வளை மற்றும் அரும்புதடை, வங்கிமோதிரங்கள், ரத்தினமோதிரங்கள், வெள்ளி அரும்புதடை போன்றவை இருந்துள்ளன. அக்காலகட்டத்தில் நகரத்தார் பெண்கள் தலையணியாக பயன்படுத்தியவை நெத்திச்சுட்டி, சூரியசந்திர பிறை, சடைநாகம், ராக்கொடி, குஞ்சும் போன்றவை சிறு வயதினர் பயன்படுத்திய தலையணிகளாகும்.  குறிப்பிடத்தக்கவை தலையணி என்றுபார்த்தால் பிறைசிதேவி என்னும் ஒருவகை தலையணி அக்கால பயன்பாட்டில்  இருந்து வந்துள்ளது. இது ராக்கொடியை ஒத்த ஒருவகை அணியாகும் இது இப்பகுதியில் மட்டுமே புழக்கத்தில் இருந்து வந்துள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது. தற்காலத்தில் இவ்வையான தலையணிகள் நகரத்தார் மத்தியில் பயன்பாடில் இல்லை.

நகரத்தார் ஆச்சிமார்கள் மத்தியில் காலில் அணியப்படும் அணிகலன் என்று பார்த்தோமானால்  திருமணத்திற்கு முன்பு பெண்கள் தண்டை, கொலுசு போன்ற அணிகலன்களை பயன்படுத்தியுள்ளனர் திருமணத்திற்குப்பின் ஆச்சிமார்கள் தண்டை, கொலுசு போன்ற அணிகலன்கள் அணிவது கிடையாது திருமணத்தின் அடையாளமாக காலில் வெள்ளி மிஞ்சிகளை மட்டுமே அணியும் வழக்கம் இருந்துள்ளது அதற்கான காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தோமானால் சிலப்பதிகார காப்பிய நாயகியான கண்ணகியின் நினைவாக காலில் தண்டை, சிலம்பு, கொலு போன்றவற்றை தவிர்ததாக கூறுகின்றனர். சிலம்புச் செல்வர் ஐயா மா.பொ.சி, வா.சுப மாணிக்கனார், சோம.லே போன்ற தமிழ் அறிஞர்கள் கூற்றுப்படி நகரத்தார்கள் கண்ணகியின் வழிவந்தவர்கள் என்றும் காப்பியத்தில் சொல்லப்பட்ட  கோவலன் கண்ணகியின் வாழ்வியல் முறைகளில் சுட்டப்பட்ட பல நிகழ்வுகள் தற்காலத்திலும் நகரத்தார் மத்தியில் காணமுடிகின்றது என்றும் நகரத்தார்கள் பூம்புகார் நகரை பூர்வீகமாகக் கொண்டதையும் கொண்டுஇதனோடு  ஒப்புமைப்படுத்தி  கூறியுள்ளனர். ஆனால் தற்காலத்தில் காலில் கொலுசு அணியும் வழக்கம் திருமணத்திற்குப் பின்பு பல ஆச்சிமார்கள் மத்தியில் உள்ளது  வெகுசிலரே தொன்மை மாறாது இந்த வழமையை பின்பற்றி வருகின்றனர். அது போல் உச்சித்திலகம் (தலைவகுட்டில் குங்குமம்) இடுதல் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான குமுகாயத்தில் முற்காலத்தில்  இல்லாத வழக்கமாக இருந்துள்ளது. நகரத்தார் குமுகாய பெரிய பெண்கள் மற்றும்  அவர்களின் பழைய புகைப்படங்கள் போன்றவை உற்று நோக்கும் போது இந்த உச்சித்திலகம் இடும் வழக்கம் இவர்கள் மத்தியிலும் இல்லை.

 இங்கு குறிப்பிடப்பட்ட பல நகைகள் தற்காலத்தில் வழக்கொழிந்து  பயன்பாட்டில் இல்லையென்றாலும் இவற்றை நம்மால் இன்றும் சில படைப்புகளில் நம்மால் காண முடிகின்றன எடுத்துக்காட்டாக கொத்தமங்கலம் ராசாத்தாள் படைப்பு வீட்டில் இன்றும் பிறை சிதேவி,மணிக்கோவை/ நெல்லிக்காய் மாலை, தோள்வளை, சிவகண்டி போன்ற தொன்மையான நகைகள் இன்றும் காணமுடிகிறது.
  நகரத்தார் குமுகாயத்தில் குழந்தைகளுக்கு தங்கதோடு / வைரதோடு, சங்கிலி, காப்பு, மோதிரம், தங்க அரைஞாண் கயிறு, தங்கத்தண்டை, ஐம்பொன் தண்டை போன்ற அணிகலன்களையும் அத்தோடு முற்காலத்தில் குழந்தைகளுக்கு கழுத்தில் ஐம்படைத் தாலியும் அணிவிக்கப்பட்டது அதில் சங்கு, சக்கரம், கதை, வில், வாள்  இடம் பெற்றிருக்கும். பின்னாளில் தங்க அரைஞான் கயிற்றில் இதனை இணைத்து பயன்படுத்தப்பட்டது. திருமூர்த்திகளில் காத்தல் கடவுளாகிய திருமாலின் ஆயுதங்கள் எனவே குழந்தைகளை வைக்கும் என்ற நம்பிக்கை தற்காலத்தில் இந்த ஐம்படைதாலியை பிள்ளைகளுக்கு அணிவிக்கும் வழக்கம் வெகு சிலரிடமே உள்ளது. பிள்ளை பிறந்த 16 நாட்களுக்குள் காது குத்தி பிள்ளைக்கு பொன் நகைகள் அணிவித்து தூக்கும் பழக்கம் இன்றுவரை வழக்கத்தில் இருந்து வருகிறது.
 நகரத்தார்கள் அக்காலத்தில் பயன்படுத்திய அணிகலன்கள் பெரும்பாலும் நவரத்தினகற்கள் கொண்டு செய்யப்பட்டவை குறிப்பாக மாணிக்கம், மரகதம், பவளம், முத்து இவற்றையே பெரும்பாலும் அதிகம்  பயன்பாட்டில் இருந்துள்ளன. வைரத்தின் பயன்பாடு அணிகலன்களில் மிகக்குறைவாகவே காணமுடிகிறது. இவை நகரத்தார்கள்  கிழக்காசிய நாடுகளில் நகரத்தார்கள் செய்த வணிகமே இதற்கு மிகப் பெரும் வித்தாக அமைந்தது அங்கு கிடைத்த மிகவும் உயர்ந்த ரக தராத மாணிக்கம் பவளம் மரகதகற்களையே பயன்படுத்தினர் முதலாம்  உலகப்போரின் காரணமாகவும் அதற்கு பின் சில பத்தாண்டுகளில் வணிகத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியாலும்   நகரத்தார்களுக்கும் தெற்காசிய நாடுகளுக்குமான தொடர்பு மெல்ல துண்டிக்கப்படும் போது நகரத்தார் மத்தியில் இந்த மாணிக்க கற்கள் மரகத கற்களின் பயன்பாடு சற்று குறைய தொடங்கி வைரக்கற்களை பயன்படுத்தும் வழக்கம் வந்தது இது தற்போது வரை நகரத்தார்கள் மத்தியில் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. இன்று நகரத்தார்கள் மத்தியில் மாணிக்க கற்கள் கொண்டு செய்த நகைகளை காண்பதே அரிதாகிவிட்டது.
 மேலும் இந்த மாணிக்கக் கற்களின் பயன்பாடு நகரத்தார் மத்தியில் அதிகம் இருந்ததற்கான சான்றாக  இருப்பவை நகரத்தார் திருப்பணி செய்த பெரும்பாலான கோயில்களை உற்று நோக்கும்போது இதனை நம்மால் நன்கு உணர முடியும். நகரத்தார் திருப்பணி செய்யும் போது அங்குறையும் இறைவனுக்கு வைரநகைகளை காட்டிலும் மாணிக்க கற்கள் பதித்த நகைகளையே அதிகம் செய்து அர்ப்பணித்துள்ளனர். எடுத்துக்காட்டாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நகரத்தார்களின் திருப்பணிக்கு மிகச் சிறந்த சான்றாகும் இங்கு அண்ணாமலையாருக்கு அணிவிக்கப்படும் ரத்தின கிரீடம், கர்ண பத்திரம், மகரகண்டி, தாளிப்பதக்கம் போன்றவை நகரத்தார்களின் கொடைகளே அது மட்டுமல்லாது திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில், சிக்கல் சிங்காரவேலவர் கோவில் போன்றவை நகரத்தார்களின் திருப்பணியே அங்கும் இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நகை வகைகளில் அதிகம் மாணிக்ககற்கள் கொண்ட நகைகளையே நம்மால் காண முடிகிறது. 
மேலும் செட்டிநாட்டில் உள்ள பல திருக்கோயில்களில் நகரத்தார்கள் மாணிக்க கற்கள் கொண்ட நகைகளையே இறைவனுக்கு சமர்ப்பித்துள்ளனர். செட்டிநாட்டு பகுதிகளில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் உ.சிறுவயல் பொன்னழகி அம்மன் கோயில்  அம்மனுக்கு நகரத்தார்கள் செய்து வைத்த ஜுவாலை கிரீடம், கண்டனூர் சிவாலயத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு நகரத்தார்கள் செய்துவைத்த பெரும்பான்மையான நகைகள் மாணிக்க நகைகளே இறைவனுக்குத் தான் சமர்ப்பிக்கிறோம் என்று போகின்ற  போக்கில் கடமைக்கு என்று செய்யாமால் நகரத்தார்கள் தாங்கள்  கொண்டிருந்த பக்தியில் சமரசமும் செய்யாமல் விலை உயர்ந்த நல்ல உயர்ந்த மாணிக்கம் மற்றும் மரகத கற்களால் செய்த நகைகளையே இறைவனுக்கு சமர்ப்பித்திருந்துள்ளனர். அணிகலன்களின் பெயர்களை குறிப்பிடும் போது நகரத்தார்கள் சில தனித்துவமான தமிழ் சொல்லாடல்களை இன்றுவரை பயன்படுத்துகின்றனர்.தங்க வளையல், மெட்டி, உத்திராட்சம் போன்றவற்றை நகரத்தார்கள் காப்பு, மிஞ்சி, கவுடு  என்று அழைக்கும் வழக்கம் உள்ளது அதுபோல் கழுத்துரு, மங்களச்சரம், பூச்சரம், கண்டசரம், வைரக்காப்பு  போன்ற நகைகளை பெரிய நகைகள் என்று குறிக்கும் வழக்கமும் உள்ளது. 

வேணும் மலையாளத தொட்டியத்து கருப்பர் துணை
 --தெக்கூர்.இராம.நா.இராமு இராமநாதன் 

புகைப்படங்கள் : தேவகோட்டை.திரு.வள்ளியப்பன் இராமநாதன் அண்ணன்

Tuesday 11 August 2020

Maratha style phetas

#Marathas_pheta #comparison #ornaments 


#Turbans a #headgear which is draped by males , mosly made up from a single piece of long  cloth which is wrapped around the head in a wide variety of styles.among that #pheta a Traditional turbans which is used in the #Maharastra region is called In the earlier days , wearing a Pheta was considered a mandatory part of clothing in Marathas tradition.there exist a three different styles of draping this turban which predominantly decided by the region where it is used , Mawal style pagadi is mostly used by the #Tanjore_marata kings  actually that is unique style of Mawals Marata warriors of Mawal region.during the rule of Maratas #Tanjore kingdom have a inspiration over that pagadi head gear so that has been utilised in temple to adorn gods head gear quite similar to the pagadi turban , here in this comparison shown below shows the marata head gear used in the major chola region that is tanjore and adjescent districts Saiva Vaisnava temples , like #Swamimalai  Swaminatha swami temple #Mannargudi SrividyaRaja gopala swami temple, #pandhanallur temple ,and #rameswaram ramanathaswami temple have a unique pagadi made out of sea water pearls and also #Trichy #Malaikottai Thayumana swami temple ,  these turbans were made out of gold adorn to the lord during their annular processions and a painting also incorporated in this image which is a Thanjavur Maratha King Shivaji II (ruled Thanjavur from 1832-1855 A.D) and King #Serfoji II (ruled Thanjavur from 1798- 1832 A.D) exisit in the  Maharajah Serfoji II Memorial Hall Museum, #Sadar_Mahal Palace, Thanjavur is shownn on which a Kings adorned with a similar magnificent Mawali style headgears (pagadi) from these pictures we could understand the usage of pagadi for the deities was got influenced from maratha kings and its still in exist in temple tradition with historic imapacts.

---Ramu.Rm.N

Sunday 2 August 2020

Spadika_kundalam

  

#Comparison  #kundalam  #tribes #deities #ornament #jewelry #cholas #pallavas #Cambodia #earrings #iconography

An ornamental comparison of Hindu deities ear rings with Sarawak tribes and dayak tribes is presented here  , The Sarwak tribes who were living the in the Malaysia island called boreno  and also the people called as Dayak who are  living in the Kalimantan region of Indonesia  used  to wear a  pair of ear ornaments .which is made out of a solid brass metal  created  in the shape of an acorn with a double row of petal like crenulations towards their top, which gives a overall appearance is quite  similar to a large flower and this this pendent used in the ears to elongate the ear lobes upto the shoulder as part of their culture as sign of beauty.


 We could see the similar type of ear rings in the eighth century sculpture of Lord Vishnu from the #Cambodia region and also it has been used in the #kowleswarar sculpture belongs to chola period , in this comparision sculpture of Vishnu belongs to later pallava period in the #Tiruthani Veertanswarar temple and Brahma bronze icon from the Chennai museum is shown this comparison  a debatable thing is with this ear rings it also called as #spadika_kundalam as per text so it could be made of even spadikam

---Ramu.Rm.N



Saturday 1 August 2020

பொன்னியின் வருகை

பொன்னியின் வருகை


#புதுவெள்ளமென நீரினிலே-நாம்
ஆடி வந்து மகிழ..
#பொன்னியின் வரவால் வளமுடைய
காலமும் இன்று கனிந்ததே..
கழனி போல எங்கள் வாழ்வும்
கதிர்விட்டு #செழுமை சேர்திடுவாய்..
கரைமருங்கில் கழியெல்லாம் பொன்
கொழிக்க செய்திடுவாய் !
#காவிரித்தாய் மடியினிலே மனக்
கவலையெல்லாம் மறப்போம்..
களிப்புடனே நின்மடியில் ஆடிப்பாடி
காதல் கூடச் செய்வோம்..
நிலவரிக்கும் வேலையிலே #குடமலைபாவையோடு 
முழுமனதாய் அமர்திடுவோம்..
முப்பொழுதும் அருசுவையுண்டு -பழங்
கதைகள்பேசி மகிழ்வோம்..
#தந்தமிழ்ப்_பாவை நின்வரவாலெங்கள்
வாழ்வில் நற்பேறுதந்திடுவாயே
மனங்களில் வேற்றுமையைக் களைந்தெறிந்து
ஒற்றுமையில் திளைத்திடசெய்க..
பல்லுயிர்ஓம்புப் செய்திடும் பொன்ரிசே
நீ என்றென்றும் வாழி ! வாழியவே !! 

பாவாக்கம் : று.நா.இராமு