நினைக்க முக்தி தரும்பரமக்ஷேத்திரமாகிய திருவண்ணாமலை என்பது தன்னையே நினைத்தாலே முக்தி தருவதாகக் தலபுராணங்கள் கூறும் இறையருள் நிறைந்த செம்மையான தலம். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னித் தத்துவத்தை வடிக்கின்ற அண்ணமலையார் கோயில், பக்தர்களின் பக்திச் சுவடுகளோடு, சமுகத்தாரின் அற்பணிப்பையும், குறிப்பாக நகரத்தாரின் திருப்பணி மரபையும் பெருமையோடு தாங்கி நிற்கிறது.
திருவண்ணாமலையில் நகரத்தாருக்கென நிர்வகிக்கப்பட்ட ஓயாமடம், சாதுக்கள் மடம், கோட்டையூர் மடம், காரைக்குடியார் மடம் உள்ளிட்ட ஐந்து மடங்கள் நீண்ட காலமாகச் சேவை செய்து வருகின்றன. ஆங்கிலேயர் ஆட்சி செறிவடைந்து, மன்னர் ஆட்சி ஓய்ந்து கொண்டிருந்த 18ம் நூற்றாண்டு பின் நகரத்தார்கள் பெருஞ்செல்வர்களாக உருவெடுத்து திருப்பணிகளில் முன்னணியில் செயல்படத் தொடங்கின
நகரத்தார்கள், உண்டியல் முதல் நகைகள் வரை அணா, பைசா கூட கணக்கோடு,
சிக்கனமாகவும் செம்மையாகவும்
இருந்து, தேவஸ்தானச் செலவுகளை மனவுறுதிகொண்டு மேற்கொண்டனர். வீண் விரயத்தைத் தவிர்க்கும் அவர்களின் நிர்வாகத் திறமை கோயில் வளர்ச்சிக்கு அடித்தளமாயிற்று.
1933ல் அச்சிடப்பட்ட ஒரு ஆவணத்தில் அந்தகால விலைகள் சுவாரஸ்யமாகக் குறிப்படப்பட்டுள்ளது:
ஒரு பவுன் – ரூ. 13
வெள்ளி 100 தோலா – ரூ. 5.40
வைரம் ஒரு காரட் – ரூ. 150
இந்த ஆவணங்கள் 1933ல் அச்சானாலும், திருப்பணிகள் செய்யப்பட்ட காலம் பெரும்பாலும் 1900ம் ஆண்டு சுற்றுப்பகுதி. அந்த நேரத்தில் விலைகள் மேலும் குறைவாக இருந்தன.
கோயில் கட்டிட திருப்பணிகள்
நகரத்தாரால் திருவண்ணாமலையில் மேற்கொள்ளப்பட்ட சில முக்கிய கட்டிடப் பணிகள்:
அண்ணமலையார் மற்றும் அம்பாள் சன்னதிகள்
சிவபெருமான் சன்னதி
அம்பாள் சன்னதி
விநாயகர் சன்னதி
கொடிமர மண்டபம்
துர்கையம்மன் கோயில்
கொலு மண்டபம்
அணியோட்டிகால் பிராகாரங்கள்
இவற்றை கோட்டையூர் அ. க. குடும்பத்தார் மற்றும் நகரத்தார்கள் இணைந்து ரூ. 12,35,00 செலவில் மேற்கொண்டனர்.
ராஜமண்டபம் – ரூ. 50,000
(கடியாபட்டி தீ. சொ. நா., தீ. அ. குடும்பத்தார்)
பிரம்ம தீர்த்தகுளம் – ரூ. 75,000
(கானாடுகாத்தான் ராஜ அண்ணாமலை செட்டியார்)
சிவகங்கை தீர்த்தம் – ரூ. 1,75,000
(கோட்டையூர் க. வீ. அழ. குடும்பத்தார்)
பிராகார தலவரிசைகள் – ரூ. 20,000
(கோட்டையூர் அ. க. அ. மெ. குடும்பத்தார்)
தாமிரத்தகடால் செய்யப்பட்ட கலியாண கொட்டகம் – ரூ. 35,000
(செட்டிநாட்டு பாணியில்; கோட்டையூர் ராம. பெ. நாராயணன் செட்டியார்)
திருவாபரணங்கள் மற்றும் நகைகள்
வைகாசி 30, 1903 அன்று நடைபெற்ற திருக்குடமுழுக்கு பெருவிழாவுக்காக நகரத்தார் பெரும் அளவில் நகைகள் மற்றும் உபகரணங்களை ஈந்தனர் இதில் சில:
கிரீடங்கள் & நகைகள் சிலவற்றின் தொகுப்பு
இரத்தின கிரீடம் – அரிமளம் செ. சித. சிதம்பரம் செட்டியார்
அம்மனுக்கான தனி இரத்தின கிரீடம் – கானாடுகாத்தான் வெ. வீர. வெ. அரு. நாகப்ப செட்டியார்
தங்க நாகாபரணம் – கோட்டையூர் அ. க. அ. மெ. வ. குடும்பத்தார்
வைர நெற்றிப்பட்டம் – கொத்தமங்கலம் ராம. அரு. வெ. பெத்தாச்சி செட்டியார்
சோமாஸ்கந்தருக்கு வைர அபயஹஸ்தம் – கோட்டையூர் பெ. க. அ. சித. வீரப்ப செட்டியார்
தங்கக் கவசங்கள் சிலவற்றின் தொகுப்பு
மூலஸ்தான அம்மனுக்கு – சா. அ. அண்ணாமலை செட்டியார் (கானாடுகாத்தான்)
உற்சவ விநாயகருக்கு – சி. அ. சி. ராம. இராமன் செட்டியார் (கொத்தமங்கலம்)
கம்பத்திளையனார் – தேவகோட்டை எ. பெரிய கரு. சித. சிதம்பரம்
96 தலைகள் கொண்ட பிரம்ம சரக்கபால மாலை தங்கத்தில் உருவாக்கப்பட்டு, தில்லையைத் தவிர வேறு எங்கும் இல்லாத அபூர்வ வடிவில் திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டது.
பெரிய வெள்ளி வாகனங்கள் – நகரத்தாரின் பெருமை
நகரத்தார் செய்த வெள்ளிவாகனங்கள் திருவண்ணாமலை கோயில் வரலாற்றின் பொற்காலத்தை பிரதிபலிக்கின்றன இங்கு இதர செலவுகள் குறிப்பிடபடவில்லை சுருக்கமாகவே சிலவற்றை மட்டும் எடுத்து காட்டபட்டுள்ளது.கோட்டையூர் நகரத்தார் தொண்டு அலப்பறியது.
வெள்ளி இந்திர விமானம் – ரூ. 35,000
(பெ. க. அ. சித. வீரப்ப செட்டியார் M.B.E.)
அம்மனுக்கு வெள்ளி சின்ன இந்திர விமானம் – ரூ. 15,000
(அவரது தமக்கை ஸ்ரீமதி வெள்ளியம்மை ஆச்சி)
வாகன கட்டிடம் – ரூ. 7,000
கார்த்திகை உற்சவத்திற்கான வெள்ளி காமதேனு & கற்பகவிருட்ச வாகனங்கள் – ரூ. 60,000
(காரைக்குடி. ஸ்ரீ, முத்து, அரு. வகையறாக்கள்)
வாகன கட்டிடம் – ரூ. 10,000
எலக்ட்ரிக் இஞ்சின் – ரூ. 2,000
வெள்ளி ரிஷப வாகனம் – ரூ. 35,000
(அ. க. அ. மெ. வகையறா; கோட்டையூர்)
வெள்ளி ரதம் – ரூ. 1,25,000
(இராமச்சந்திரபுரம் நீ. சொ. ராமசாமி செட்டியார் முதலியோர்)
வாகன கட்டிடம் – ரூ. 10,000
குதிரை வாகனம் – ரூ. 15,000
(இராவ்பஹதூர் பெ. க. அ. சித. வீரப்ப செட்டியார் முயற்சி)
தங்க மேக்குபோட்ட கிரிவாகனம் – காரைக்குடி சா. நா. சாத்தப்ப செட்டியார்
செட்டிநாடு நகரத்தாரின் ஒற்றை நோக்கம் இந்த அனைத்து நற்பணிகளும் சிதம்பரம், மதுரை, ராமேஸ்வரம் போன்ற பிரமாண்ட ஸ்தலங்களில் செய்ததற்குச் சமமாக திருவண்ணாமலையிலும் நகரத்தார் தங்கள் பங்களிப்பை மகத்தான அளவில் வழங்கியதை காட்டுகின்றன. மொத்தம் தோராயமாக ரூ. 2,53,000 செலவில் பல நகரத்தார் குடும்பங்கள் இணைந்து வெள்ளி வாகனங்கள், மரத்தேர்களின் புதுப்பிப்புகள், நவரத்தின அபரணங்கள், வெள்ளிக் கவசங்கள், அண்டாக்கள், பூசைப் பொருட்கள், எல்லாம் அற்பணிப்பாக வழங்கினர். இங்கு இதில் மரவாகனங்கள், மஞ்சம், வெள்ளி பொருட்கள், பாடசாலை, அபிஷேகம் கட்டளை, பசுமடம், நந்தவனம் பற்றிய தகவல்கள் இணைக்கப்படவில்லை.
இந்த பதிவின் நோக்கம்
நகரத்தார் செய்த பெரும் திருப்பணிகள், இன்றைய இளைய தலைமுறைக்கு மறக்கமறக்க நினைவூட்டப்பட வேண்டும் என்பதே.அன்றைய நகரத்தார்களின் பக்தி, பொறுப்பு, தாராள மனம், மற்றும் ஆலய வளர்ச்சியில் செய்த பங்களிப்புகள் திருவண்ணாமலையின் ஒளியில் என்றென்றும் பிரகாசிக்கும்.
– Ramu.Rm.N
No comments:
Post a Comment