Friday 14 November 2014

என்னுல்லம் கவர்ந்த மலர்கள் 1

                 

                சிலநாட்களும் முன் மருவத்தூர் , விக்கிரவாண்டி  ஆகிய பகுதிகளில் பயணத்தின் போது வழியில் இந்த மலர்களை காண முடிந்தது.  இந்த மலர் பொதுவாக மலைபகுதிகளில் காட்டுப்பகுதியில் வளரும் ஆனால்  இந்த மலரை சமவெளியில் புல் மண்டிய பகுதியில் இந்த செடியை கண்டதும் அதிசயித்தே.
 அதுஒரு கொடிவகை தாவரம் . அதுதான் செங்காந்தள் . செங்காந்தள் என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கும் வருவது ஈழத்தின் தேசியமலர் என்று . இந்த செங்காந்தள் மலர் நம் தமிழகத்தின் மாநில மலரும் கூட . இந்த தாவரம் மலையும் மலைசார்ந்த பகுதிகளில் அதிகம் காணப்படும் . இந்த தாவரவகை செம்மண் பாங்கான நிலங்களிலும் வளரும் தன்மைகொண்டது. இந்த மலர் இலங்கை, இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், சிங்கபூர் ,அயனமண்டல ஆபிரிக்கா முதலான பகுதிகளிலும்காணப்படும்.மற்றும் இந்த மலர் ஜிம்பாபே நாட்டின் தேசியமலர்.



செங்காந்தள் மலரின் வேறு பெயர்கள் :        
            
           செங்காந்தள் மலருக்கும் வழங்கப்படும் சில பெயர்கள் தமிழகத்தில் இந்த  மலரை கார்த்திகை மலர் என்று  சங்ககாலத்தில் வழங்கப்பட்டதன் காரணம்  இந்த மலர் கார்த்திகை திங்களில் அதிகம் மலரும் அதனால் இவற்றுக்கும்  இப்பெயர் வந்தது .கார்த்திகைச் செடியானது வேலிகளிலும்,  பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் சுடர்கள் போலவும் காணப்படும். இதன் பூ தீச்சுவாலை போலக் காணப்படுவதால் அக்கினிசலம் என அழைக்கப்படுகிறது.பூவின் நிறம் இருவேறாக மாறுபடுவதால் இதனை வெண்காந்தள் அல்லது செங்காந்தள் என்ற இரு வேறு வகைகளாக வருணிப்பார்கள். இந்த மலரை போற்றி கவிதை பாடாத புலவர்களே இல்லை. காந்தள் மலர்களை புலவர்கள் பெண்களின் விரல்களுக்கு உவமையாக கூறுவர். இத்தாவரம் வளைந்து பற்றுவதால் கோடல், கோடை என்றும் அழைக்கப்படும். நாட்டு மருத்துவத்திலே இதனை வெண்தோண்டி எனவும் அழைப்பர்.பூவின் நிறம் இருவேறாக மாறுபடுவதால் இதனை வெண்காந்தள், செங்காந்தள் என்ற இரு வேறு வகைகளாக வருணிப்பார்கள். கிழங்கு பிரிந்து கணுக்கள் உள்ளதை ஆண்காந்தள் என்றும் கணுக்களில்லாததைப் பெண்காந்தள் என்றும் குறிப்பிடுவர்.



தாவரத்தின் தோற்றம் (அமைப்பு ):
               
     இந்த தாவரத்தின்  அமைப்பானது  இது ஒரு கொடிவகை தாவரம் பசுமையானது வலுவில்லாதது இந்த தாவரம் மற்ற செடிகளின் மீதும் மற்றும் வேலிகளின் மீது புதர்கள் மீது படர்ந்து வளரும் தன்மை கொண்டது .இந்ததாவரம் 1௦ முதல் 2௦ அடி உயரம் வளரும் தாவரம் .இந்த தாவரம் கிளைவிட்டு வளரும் வகை இது ஒரு கிழங்கு வைக்கும் தாவரம் , இதன் கிழங்கு கலப்பை போன்ற அமைப்பில் இருக்கும் .இத்தாவரத்தின்  இலைகளுக்கு காம்புகள் இல்லை
பூவின் அமைப்பு சற்று வேறுபட்டு இருக்கும் . இதன் பூ இலைக்கக்கத்தில் தனியாக இருக்கும். அல்லது கிளைகளின் நுனியில் இலைகள் நெருங்கியிருப்பதால் சமதள மஞ்சரி போலத் தோன்றும். அகல் விளக்குப் போன்ற, ஆறு இதழ் கொண்ட இப்பெரிய பூக்கள் செப்டம்பர் தொடக்கம் முதல் ஜனவரிவரியிலும் , மற்றும் மார்ச் மாதத்திலும் மலர்கின்றன. இதன் இதழ்கள் குறுகி நீண்டு ஓரங்கள் அலைபோல நெளிந்திருக்கும். தளை அவிழ்ந்த மலர் ஏழு நாட்கள் வாடாமல் இருக்கும். இதழ்களில் நிறம் முதலில் பச்சை, பிறகு வெண்மை கலந்த மஞ்சள். பிறகு மஞ்சள், பிறகு செம்மஞ்சள், பிறகு துலக்கமான சிவப்பு (Scarlet) நீலம் கலந்த சிவப்பாக மாறிக்கொண்டு போகும்.
இதழ்கள் விரிந்து அகன்றோ, பின்னுக்கு மடங்கிக் கொண்டோ இருக்கும்.





மருத்துவகுணம் :

இந்த தாவரம் இந்திய சித்தமருத்துவத்திலும் யுனானி மருத்துவத்திலும்  முக்கியமாக பயன்படுத்தபடுகிறது . இந்த தாவரத்தின் கிழங்கு சற்று விஷத்தன்மை கொண்டதாகும் இதை நேரடியாக உட்கொள்ள கூடாது  .  இத்தாவரத்தில் சுபர்பின் மற்றும் கோல்சிசின் ஆகிய மருந்துப் பொருட்கள் இதில்கிடைக்கின்றன .இந்த கிழங்கில் உள்ள நஞ்சு ஆங்கிலமருத்துவத்திலும் பயன்படுத்தபடுகிறது.
          வாதம், மூட்டுவலி, தொழுநோய் குணமாக்கப் பயன்படுவதுடன் பேதி, பால்வினை நோய் வெண்குட்டம் ஆகியவற்றிக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. பிரசவ வலியைத் தூண்டும் மருந்தாகவும், ஆற்றலூட்டும் குடிப்பானாகவும் இருப்பதுடன், தலையில் வரும் பேன்களை ஒழிக்கவும் பயன்படுகிறது. குடற்புழுக்கள், வயிற்று உபாதைகள் மற்றும் தேள், பாம்புக்கடிகளுக்கு நல்லதொரு மருந்து. இக்கொடியினைக் காட்டிலும் விதைகளில் தான் அதிக அளவு கோல்சிசின் மருந்து காணப்படுவதால் விதைகள் மிகுதியான உள்ளன. அதனால் இந்த தாவரத்தை பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கின்றனர் .முன்பு இந்த தாவரத்தை நம் சித்தவைத்தியத்தில் பயன்பாடு அதிகம் இருந்தது .இதன் இலை மற்றும் தண்டு நம்மேல் பட்டால் தோலில் அரிப்பு உண்டாகும்

தற்போது இந்த தாவரம் அழிந்து வரும் இனங்களில் சேர்கப்பட்டுள்ளது . இந்த தாவரத்தை பாதுகாக்க வேண்டியது நம் கடமையே . முடிந்தவரை இந்த தாவரத்தை நாமும் நம் வீட்டில் வளர்ப்போம் .இன்று இந்த தாரவரத்தை மலைபகுதிகள் வனப்பகுதியில் காணலாம் . 


எங்கள் தமிழ் தாயின்  கை விரல்கள் இந்த செங்காந்தள் மலர்களின் இதழ்கள் போன்று அழகுடன் அவள் கையில் இட்டு மருதாணி சிவந்து காணப்படுவது இந்த மலரை ஒத்து இப்படி ஒரு கோவை பழம்போல் இப்படிதான் சிவந்து இருந்திருக்கும் போலும்
மலைபகுதில் காடுகளில் பூத்துக் குலுங்கிய மலரில் இந்த பூக்கள் தற்போது நகரங்களில் சாலையோரங்களில் பூத்து குலுங்குகின்றன . இதை காணும போது  மனதில் தமிழனுக்கும் இத்தனை ஆண்டுகள் இழைக்கப்பட்ட அநீதியானது தற்போது மங்கி மறைந்து மீண்டும் நம் தமிழீழம் புத்துயிர் பெறும் மற்றும் வந்தேறிய அன்னியர் கையில் சிக்கிக் தவிக்கும் தமிழர் வாழ்வும் மீண்டும் புத்துயிர் பெரும் என்ற நம்பிக்கை மேலோங்கியது
வாழ்க தமிழர்  !!!                                                             வாழ்க தமிழினம் !!!
                    தமிழன்னையின் புகழ் பாரெங்கும் ஓங்கி பரவட்டும் 

                                                      - ஆ.தெக்கூர் காண.இராம.நா.இராமநாதன்


No comments: