சில நாட்களுக்கும் முன்பு ஒரு பதிவை முகநூல் வலைத்தளத்தில் காண நேர்ந்தது . சோழர்கள் காலத்தில் பொங்கல் திருநாள் என்பதை கொண்டாமல் அவர்கள் இந்திர விழாவை தான் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது . சோழர்கள் உழவர் திருநாள் என்று வெகு விமர்சையாக கொண்டாடி விவசாயிகளை பெருமை படுத்தாமல் விட்டுவிட்டனர் . ஆனால் நாயக்க மன்னர்கள் தான் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி ஊக்குவிக்கும் வகையில் அமைத்தனர் என்றும் சோழர்களை இகழ்த்திடும் வகையில் இருத்தது அதனால் இந்த பதிவு தோன்றிட வழிவகை செய்தது .
சோழர்கள் ஆண்ட சோழதேசம் மருத நிலம் . தமிழன் தங்கள் வாழ்ந்த பகுதியை ஐந்தாகப் பிரித்து வாழ்ந்தான் அதுமட்டுமா அந்த ஐந்து நிலத்திற்கும் கடவுள்கள் , தொழில் , இசை என்று எல்லாம் பிரித்து வாழ்ந்தனர் . அதன்படி சோழதேசம் மருத நிலமும் நெய்தல் நிலமும் சார்ந்த பகுதியாக விளங்கியது . அதனால் சோழர்கள் தங்கள் நிலத்தின் தெய்வமான இந்திரனையும் , நீரின் தெய்வமான வருணனையும் போற்றி வழிபாடு செய்வதே தமிழர் விழா . இதை சோழன் மட்டும் செய்யவில்லை இது மதுரையிலும் பாண்டியர்கள் நிகழ்த்தினர் . இந்த விழா சோழதேசத்தில் வெகு சிறப்பாக சித்திரை மாதத்தில் 28 நாட்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள் . தமிழர்க்கு சித்திரை மாதமே முதல் மாதம் வருடப்பிறப்பும் ஆகும் . இன்றும் இந்த சித்திரையை தமிழ் வருடப்பிறப்பு இல்லை என்று புரியாத மூடர்கள் பொய்யுரை செய்து மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டனர் . இந்த இந்திரவிழா தமிழர்கள் மழைக்கடவுளான இந்திரனையும் வருணனையும் வழிபட்டு தங்களுக்கு பிறந்திருக்கும் இந்த வருடத்தில் சிறப்பாகவும் போதிய மழை தங்கள் விவசாயத்திற்கும் வேண்டி வழிபாடு செய்வது வழக்கமாக கொண்டு வாழ்ந்துவந்தனர் . இந்திர விழாவில் இந்திரனையும் வருணனை மட்டும் வழிபாடு செய்யாது . கொற்றவை தங்கள் ஊர் காவல் தெய்வங்கள் போன்ற எல்லாத் தெய்வங்களையும் அரசு சார்பாகவும் தங்கள் அவரவர் விருப்பு வெறுப்பு இன்றி அனைவரும் ஒன்றாக இணைந்து பொங்கல் வைத்து சிறப்பாக பலி கொடுத்ததும் வழிபட்டனர் . இறுதியாக இந்திராணியும் வருணனையும் போற்றி வழிபாடுகள் செய்தும் இந்திரனை போற்றி ஆடியும் பாடியும் பட்டிமன்றங்கள் போன்றவைகள் சிறப்பாக நிகழ்த்தி வழிபாடுகள் செய்தனர் . இந்த விழாக்களை சான்று கூறும் வகையில் சிலம்பு மணிமேகலை, தொல்காப்பியம் போன்ற நூல்கள் கூறுகின்றனர் .
முன்பும் தை மாதத்தில் அறுவடைத் திருநாள் விழாவும் நிகழ்ந்தது, இந்த விழாவையும் கொண்டாடினர் . தமிழர் தங்கள் நிலத்தின் தெய்வத்தை போற்றியே வழிபட்டனர் . சூரியன் பொதுத் தெய்வம் . அவனையும் போற்றித்தான் வழிபட்டனர் .
ஆரியர்களும் விஜயநகர அரசர்களும் வந்தேறிய பின் ஐந்து நிலத்தின் அமைப்பும் பல குழப்பங்களும் உட்பட்டு பல மாற்றங்கள் ஏற்பட்டது . ஆசுவிகக் கொள்கையில் வாழ்ந்தவர்கள் நம் தமிழர்கள் . இதில் இருந்து தான் திரிந்தது சமணம். சோழதேசத்தில் சமணம் , ஆசுவிகம் , சைவம் போன்ற மதங்கள் இருந்தன . ஆரியர் வந்த பின் பல மாற்றங்கள் நிகழ்ந்தது . நாம் இன்று செய்யும் எல்லை தெய்வ வழிபாட்டில் உள்ள ஐயனார், கருப்பர் போன்ற தெய்வங்கள் இந்திரன் பெயர் திரிவே ஐந்திரன் ஆனது பின் அது ஐயனார் ஆனது . நாம் செய்யும் கருப்பர் வழிபாடுஇவ்வாறு கூறுகின்றனர்
சிலப்பதிகாரத்தில் வரும் “தேவர் கோமான் ஏவலிற் போந்த காவற் பூதத்துக் கடைகெழு பீடிகை” எனக் குறிக்கப்பட்டிருப்பது யாரை? அநேகமாக கருப்பண்ணசாமியைக் குறிக்கலாம் என்றே தெரிகின்றது. அந்த பூதம் இந்திரனின் ஏவலால் பூமிக்கு வந்ததாகவும், நிணத்துடன் பொங்கல் முதலிய படையல்களை ஏற்றுக் கொள்வதாகவும் சிலம்பு கூறுகின்றது. மேலும் மறக்குலத்தினர் அந்த பூதத்திற்கு அவரை, துவரை போன்ற பயிர்வகைகளையும் படைத்து, மலர் தூவி, புகை எழுப்பி வாழ்த்தினர் எனக் குறிப்பிடுகின்றது. சாம்பிராணிப் புகையும், பலியும் கருப்பண்ணசாமிக்கே சிறப்பாக உரித்தானதாகும் (அவரைப் போன்ற சில சிறுதெய்வங்களுக்கும் உண்டு). மேலும் வீரர்கள், வில், வேல், வாள், ஈட்டி போன்றவற்றை அந்த பூதம் முன் வைத்து வெற்றி வேண்டி வழிபட்டதாகவும் சிலப்பதிகாரம் கூறுகின்றது. இப்பொழுதும் கருப்பண்ணசாமி வில், வேல், வாள், ஈட்டி பலவேறு ஆயுதங்களைத் தாங்கியவராகத் தான் காட்சி அளிக்கின்றார். அதே போன்று சாம்பிராணி தூபம் போட்டே வழிபாடுகள் நடக்கின்றது.
மேற்கொண்ட தகவல்களை எல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது அந்தப் பூதம் தான் பிற்காலத்தில் கருப்பண்ணசாமியாக மாறி இருக்க வேண்டும் என்றும் அந்த பூதத்தை ஏவலாகக் கொண்ட, யானை வாகனம் உடைய இந்திரன் தான் பிற்காலத்தில் ஐய்யனார் ஆனார் . இந்த வழிபாடு தற்போதும் இந்த வழிபாடு தற்போதும் திருச்சி ,புதுகோட்டை , சிவகங்கை , விருதுநகர் , மதுரை போன்ற பகுதிகளில் எல்லைத் தெய்வங்களுக்கும் மதுக்குடம் எடுப்பு , புரவிஎடுப்பு ( குதிரை , காளை) போன்ற மண் பொம்மைகளை கொண்டு சென்று காணிக்கையாக செலுத்தப்படும் இந்த விழா வைகாசி மற்றும் ஆணி மாதத்தில் இன்றும் நம் தென்மாவட்டங்களில் நிகழ்கிறது .
மேலும் ஒரு தவறான கருத்து நம் தமிழர்களிடம் நிலவுகிறது .ஐயனார் வழிபாடு என்பது சாஸ்தா வழிபாட்டில் இருந்து மருவியதே என்று கூறுகின்றனர் . இது முற்றிலும் ஏற்கத்தக்க வகையில் உள்ளது அல்ல . இது நம் தமிழர் வழிபாடே . எப்படி எணில் மலையாளம் தமிழில் இருந்து திரிந்ததே . ஆரியர்கள் அதிகம் அரேபியக் பெருங்கடல் பகுதில் ஆதிகம் குடியேறிய பின் தமிழும் சம்ஸ்க்ருதமும் கலப்பே மலையாளம் . நாம் செய்த இந்திர வழிபாடுதான் இன்று ஐய்யனார் வழிபாடு அதை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் . சாஸ்தா வழிபாடும் ஐய்யனார் வழிபாடும் ஒன்றுதான் . அதற்காக மலையாள தேசத்தில் இருந்துதான் ஐய்யனார் மற்றும் கருப்பர் வழிபாடு அங்குகிருந்து தான் வந்தது என்பது ஏற்புடையது அல்ல . நாம் நம் வரலாற்றை தெளிவாக ஆராய்ந்து தெரிந்து கொள்ளவேண்டும் .
இன்று இந்திர விழா இல்லாமல் வழக்கொழிந்து விட்டது . இன்று இந்த விழா சில சிவாலயங்களில் நிகழ்கிறது . புதன் ஸ்தலம் என்று அழைக்கப்படும் திருவெண்காடு மற்றும் சாயவனம் போன்ற சில தலங்களில் நிகழ்கிறது .
இந்திரவிழாவின் திரிவாக தென்மாவட்டங்களில் இன்று ( நம் செட்டிநாட்டில் ) வைகாசி ஆணி மாதத்தில் எல்லை தெய்வாமாக உள்ள ஐய்யனார் மற்றும் கருப்பர் போன்ற தெய்வங்களுக்கும் பொங்கல் வைத்தும் புரவிகளை கொண்டு சென்று விட்டுவிட்டும் ஐயனார் ( இந்திரனுக்கும் ) சைவப் படையல் இட்டும் கருப்பருக்கும் புள்ளி ( பலி காணிக்கை ) கொடுத்ததும் வழிபாடுகள் இன்றும் இவை நிகழ்கிறது. இந்த விழாவின் நோக்கம் நல்ல மழை வேண்டும் என்றும் பிறந்துள்ள புத்தாண்டில் எல்லாம் நன்றாகா அமையவேண்டும் . விவசாயம் நல்ல முறையில் அமோகமாக நிகழ வேண்டும் என்பதேயாகும் .
வாழ்க தமிழர் !!!! வாழ்க தமிழர் !!!!
- ஆ.தெக்கூர் . கண. இராம. நா.இராமநாதன்
No comments:
Post a Comment