தாராசுரம் சக்கராயி அம்மன் கோயில்
பாதாமி அருங்காட்சியகத்தில் உள்ள லஜ்ஜாகௌரி
தஞ்சாவூர் மாவட்டத்தில் தாராசுரம் வட்டம் எலுமிச்சங்காபாளையத்தில் கீழப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளது இந்த அம்மன் கோயில். சக்கராயி அம்மன் என்றும் லஜ்ஜா கௌரி என்றும் அறியப்படுபவள் இந்த பெண் தெய்வம் தலையற்ற நிலையில் பத்மத்தை தலையாகக் கொண்டு குத்த வைத்திருக்கும் அமைப்பில் உள்ள ஒர் தெய்வம்.
சக்கராயி அம்மன் :
பெரும்பாலும் தலை இல்லாமல் காணப்படும் இப்பெண் உருவம் தனது இரு கால்களையும் மடித்து அகற்றி பிறப்புறுப்பை முன்னிலைப்படுத்தும் விதமாக தரையில் உடலை அழுத்தி, குத்திட்டு அமர்ந்திருக்கும் வகையில் முழங் கைகளை முழங்கால்களின் மேல் ஊன்றி, இருகைகளிளும் மலர்ந்த தாமரை மலரை ஏந்தியபடி மேல்நோக்கி உயர்ந்திருக்கின்றன. மார்பகங்கள் பெரிதாகவுள்ள அவ்வுருவம் அமைந்துள்ளது. தலை இருக்கவேண்டிய இடத்தில் அளவில் பெரிய மலர்ந்த தாமரை பொருத்தப்பட்டுள்ளது.
பிள்ளைப்பேறு இல்லாத பெண்களால் மகவு வேண்டித் தொழப்படுகிற தெய்வம் சக்கராயி அம்மன்.பிள்ளைப்பேறு வேண்டி மட்டும் இன்றி, மழையின்மையால் தோன்றும் வரட்சி நீங்கவும், பயிர்கள் செழிக்கவும் கூட மக்கள் சக்கராயி அம்மனை வழிபடுகின்றனர். இவ்வகை உருவச் சிலைகள் பெரும்பாலும் நீர்ச்சுனை, அருவி, கிணறு போன்ற நீர் சார்ந்த பகுதிகளிலேயே அமையப்பெற்றுள்ளன. இன்றளவும் வழிபடும் முறை மாற்றமில்லாமல் பரவலாக மக்களிடையே உள்ளது.
தமிழகத்தில் உள்ள இந்த கோவிலும் ஒர் குளத்தின் அருகில் அமைந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநில பகுதிகளில் இத்தெய்வத்தை வழிபாடு பரவலாக உள்ளது. இன்றும் இந்தியாவில் பல ஊர்களில் இந்த தெய்வத்துக்கு ஆலயங்கள் உள்ளன. தமிழகத்தில் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள தாராசுரத்தில் இருந்து எலுமிச்சாப் பாளையம் செல்லும் வழியில் இக்கோவில் அமைந்துள்ளது. இங்கும் மேற்கூறிய அமைப்பில் தான் வழிபடப்படுகின்றனர் ஆனால் சேலைகள், மாலை, ஆபரணங்கள் சாற்றியும். கீழ்பகுதியில் ஒரு சுதையில் செய்த தலையையும் வைத்து வழிபடுகின்றனர்.
கோவில் அமைப்பு :
இக்கோயில் தற்கால கட்டுமானத்தில் முகமண்டபம், கருவறை, விமானம் போன்ற அமைப்புகளுடன் காணப்படுகிறது. சன்னதியின் வலப்புறம் நந்தன விநாயகர், பைரவர், தட்சிணாமூர்த்தி, திருமுகலட்சுமி ஆகியோர் உள்ளனர். மகாவிஷ்ணுபாதமும் திரிசூலமும் இங்கு காணப்படுகின்றன. இடது புறம் மாரியம்மன், விநாயகர், அய்யனார், நந்தனகாளி, வீரபத்திரர் காணப்படுகின்றனர்.
இங்கு மூலவராக சக்கராயி அம்மன் உள்ளார். வாயிலின் வலது மற்றும் இடதுபுறம் தற்கால அமைப்பில் பச்சைக்காளி பவளக்காளியர் நின்ற கோலத்தில் அருளுகிறார்கள். மூலவர் திருமேனி அமைப்பு சக்தி வழிபாட்டில் உயரிய தாய்மையின் வடிவமாகப் போற்றப்படும் அமைப்பாகும். தமிழகத்தில் இவ்வகை அமைப்பிலான வழிபாட்டை காண்பது அரிதாகும். இங்கு கோவிலின் வாயில் அருகே ஒர் கல்வெட்டும் அருகில் சிறிய துண்டாக வாயுதேவரின் புடைப்பு சிறப்பமாக அமைந்துள்ளது.
இக்கோயில் தாரசுரத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் எலுமிச்சங்கா பாளையத்தில் அமைந்துள்ளது.
Lajja Gauri is a lotus-headed Hindu Goddess associated with abundance , fertility and sexuality, sometimes euphemistically described as Lajja ("modesty"). She is sometimes shown in abirthing posture, but without outward signs of pregnancy.
This Goddess have been still worshipped around the Tribal areas of Central India, Andhra Pradesh, Karnataka, Gujarat and Maharashtra. We can see this form deity at town of Badami, known for the Badami Cave Temples, has a sculpture of the deity preserved at the local Archeological Museum, originally found in Naganatha Temple, Naganathakolla, Bijapur District. In Tamilnadu near darasuram region lajja gauri is worshiped in the charayii Amman. I hope this is the only place were lajja gauri worship is still exist in Tamil nadu.
---Ramu. Rm.N
No comments:
Post a Comment