Tuesday, 28 April 2020
சின்ன சாலி ஆச்சி..
ashtabhuja Vishnu
Hair ornamental comparison
Thursday, 23 April 2020
கம்பராமாயணமும் நாகேசுவரன் கோவில் குறுஞ்சிற்பமும் 11
Monday, 13 April 2020
சித்திரை திங்கள்
Saturday, 11 April 2020
கம்பராமாயணமும் நாகேசுவரன் கோவில் குறுஞ்சிற்பமும் 10
Wednesday, 8 April 2020
கம்பராமாயணமும் நாகேசுவரன் கோவில் குறுஞ்சிற்பமும் 9
விசுவாமித்திரர் இராமனுக்குப் படைக்கலம் வழங்குதல் (1 ,2) இராமன் ஏவலுக்கு படைகள் அமைந்து நிற்றல் (3)
#கம்பராமாயணம் #பால_காண்டம்
#வேள்விப்_படலம்
விண்ணவர் போய பின்றை, விரிந்த பூமழையினாலே
தண்ணெனும் கானம் நீங்கி, தாங்க அருந் தவத்தின் மிக்கோன்,
மண்ணவர் வறுமை நோய்க்கு மருந்து அன சடையன் வெண்ணெய்
அண்ணல்தன் சொல்லே அன்ன, படைக்கலம் அருளினானே. 1
ஆறிய அறிவன் கூறி அளித்தலும், அண்ணல்தன்பால்,
ஊறிய உவகையோடும், உம்பர்தம் படைகள் எல்லாம்,
தேறிய மனத்தான் செய்த நல்வினைப் பயன்கள் எல்லாம்
மாறிய பிறப்பில் தேடி வருவபோல், வந்த அன்றே. 2
'மேவினம்; பிரிதல் ஆற்றேம்; வீர! நீ விதியின் எம்மை
ஏவின செய்து நிற்றும், இளையவன் போல' என்று
தேவர்தம் படைகள் செப்ப, 'செவ்விது' என்று அவனும் நேர,
பூவைபோல் நிறத்தினாற்குப் புறத்தொழில் புரிந்த அன்றே. 3
Rama Lakshmana and Vishwamitra finally, reached the place where Vishwamitra planed to perform his sacred ritual. The young princes safe guarded the ritual for six days and nights.
#Chola_miniatures #panels #Ramayana #kamba_ramayana #nageswaran_temple #kumbakonam
--Ramu.RmN
Monday, 6 April 2020
கம்பராமாயணமும் நாகேசுவரன் கோவில் குறுஞ்சிற்பமும் 8
தாடகை கல் மழை பொழிய, இராமன் அம்பு மழையால் தடுத்தல் ( 48 ) இராம பாணம் தாடகையின் நெஞ்சில் ஊடுருவ, அவள் மாய்ந்து மண்ணில் வீழ்தல் ( 49,50,51,52,53 )
#கம்பராமாயணம் #பால_காண்டம்
#தாடகை_வதைப்_படலம்
அல்லின் மாரி அனைய நிறத்தவள்,
சொல்லும் மாத்திரையின், கடல் தூர்ப்பது ஓர்
கல்லின் மாரியைக் கைவகுத்தாள்; அது
வில்லின் மாரியின், வீரன் விலக்கினான்
மின்னொடும் அசனியோடும் வீழ்வதே போல-வீழ்ந்தாள். 48
சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம், கரிய செம்மல்,
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும், வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது, அப்புறம் கழன்று, கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என, போயிற்று அன்றே! 49
பொன் நெடுங் குன்றம் அன்னான், புகர் முகப் பகழி என்னும்
மன் நெடுங் கால வன் காற்று அடித்தலும், -இடித்து, வானில்
கல் நெடு மாரி பெய்யக் கடையுகத்து எழுந்த மேகம்,
மின்னொடும் அசனியோடும் வீழ்வதே போல-வீழ்ந்தாள். 50
பொடியுடைக் கானம் எங்கும் குருதிநீர் பொங்க வீழ்ந்த
தடியுடை எயிற்றுப் பேழ் வாய்த் தாடகை, தலைகள்தோறும்
முடியுடை அரக்கற்கு, அந் நாள், முந்தி உற்பாதம் ஆக,
படியிடை அற்று வீழ்ந்த வெற்றி அம் பதாகை ஒத்தாள். 51
கான் திரிந்து ஆழி ஆகத் தாடகை கடின மார்பத்து
ஊன்றிய பகழி வாயூடு ஒழிகிய குருதி வெள்ளம்
ஆன்ற அக் கானம் எல்லாம் பரந்ததால்-அந்தி மாலைத்
தோன்றிய செக்கர் வானம் தொடக்கு அற்று வீழ்ந்தது ஒத்தே! 52
வாச நாள் மலரோன் அன்ன மா முனி பணி மறாத,
காசு உலாம் கனகப் பைம் பூண், காகுத்தன் கன்னிப் போரில்,
கூசி, வாள் அரக்கர்தங்கள் குலத்து உயிர் குடிக்க அஞ்சி,
ஆசையால் உழலும் கூற்றும், சுவை சிறிது அறிந்தது அன்றே. 53
#Chola_miniatures #panels #Ramayana #kamba_ramayana #nageswaran_temple #kumbakonam
Ram was ready for this a fierce battle ensued between the huge Rakshasi tadaga and Rama. Finally, Rama pierced her heart with a deadly arrow current of hot blood flowed from her chest. Without giving any more chance for attack to her, Ram left another arrow which rooted into her chest. Suffering from dizziness Tadaka crashed down to the earth. A Seeing fighting skills of Ram and death of Tadka Viswamitr was pleased.
--Ramu.RmN
Sunday, 5 April 2020
கம்பராமாயணமும் நாகேசுவரன் கோவில் குறுஞ்சிற்பமும் 7
#தாடகையின் தோற்றம் ( 29,30,31 )இராமன் கருத்தறிந்த முனிவன், 'இவள் பெண் அல்லள்; கொல்லுதி' எனல்( 40,41,42,43)
முனிவனின் ஏவலுக்கு இராமன் இசைந்து கூறுதல்(44) தாடகை சூலப் படையை ஏவ, இராமன் அம்பால் அதனைத் துணித்தல் (45,46,47)
#கம்பராமாயணம் #பால_காண்டம்
#தாடகை_வதைப்_படலம்
சிலம்புகள் சிலம்பிடை செறித்த கழலோடும்
நிலம் புக மிதித்தனள்; நெளித்த குழி வேலைச்
சலம் புக, அனல் தறுகண் அந்தகனும் அஞ்சிப்
பிலம் புக, நிலக் கிரிகள் பின் தொடர, வந்தாள் 29
இறைக்கடை துடித்த புருவத்தள், எயிறு என்னும்
பிறைக் கடை பிறக்கிட மடித்த பில வாயள்,
மறைக் கடை அரக்கி, வடவைக் கனல் இரண்டு ஆய்
நிறைக் கடல் முளைத்தென, நெருப்பு எழ விழித்தாள். 30
கடம் கலுழ் தடங் களிறு கையொடு கை தெற்றா,
வடம் கொள, நுடங்கும் இடையாள், மறுகி வானோர்
இடங்களும், நெடுந் திசையும், ஏழ் உலகும், யாவும்,
அடங்கலும் நடுங்க, உரும் அஞ்ச, நனி ஆர்த்தாள். 31
'கறங்கு அடல் திகிரிப் படி காத்தவர்
பிறங்கடைப் பெரியோய்! பெரியோரொடும்
மறம்கொடு, இத் தரை மன்னுயிர் மாய்த்து, நின்று,
அறம் கெடுத்தவட்கு ஆண்மையும் வேண்டுமோ? 40
'சாற்றும் நாள் அற்றது எண்ணி, தருமம் பார்த்து,
ஏற்றும் விண் என்பது அன்றி, இவளைப் போல்,
நாற்றம் கேட்டலும் தின்ன நயப்பது ஓர்
கூற்றும் உண்டுகொல்?-கூற்று உறழ் வேலினாய்! 41
'மன்னும் பல் உயிர் வாரி, தன் வாய்ப் பெய்து
தின்னும் புன்மையின் தீமையது ஏது? -ஐய!-
"பின்னும் தாழ் குழல் பேதைமைப் பெண் இவள்
என்னும் தன்மை, எளிமையின் பாலதே! 42
'ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன்; இவட்
சீறி நின்று இது செப்புகின்றேன் அலேன்;
ஆறி நின்றது அருள் அன்று; அரக்கியைக்
கோறி' என்று, எதிர் அந்தணன் கூறினான். 43
ஐயன் அங்கு அது கேட்டு, 'அறன் அல்லவும்
எய்தினால், "அது செய்க!" என்று ஏவினால்,
மெய்ய! நின் உரை வேதம் எனக் கொடு
செய்கை அன்றோ! அறம் செயும் ஆறு' என்றான். 44
கங்கைத் தீம் புனல் நாடன் கருத்தை, அம்
மங்கைத் தீ அனையாளும் மனக்கொளா,
செங் கைச் சூல வெந் தீயினை, தீய தன்
வெங் கண் தீயொடு மேற்செல வீசினாள். 45
புதிய கூற்று அனையாள் புகைந்து ஏவிய
கதிர் கொள் மூஇலைக் கால வெந் தீ, முனி
விதியை மேற்கொண்டு நின்றவன்மேல், உவா
மதியின்மேல் வரும் கோள் என, வந்ததே. 46
மாலும், அக் கணம் வாளியைத் தொட்டதும்,
கோல வில் கால் குனித்ததும், கண்டிலர்;
காலனைப் பறித்து அக் கடியாள் விட்ட
சூலம் அற்று வீழ் துண்டங்கள் கண்டனர். 47
#Chola_miniatures #panels #Ramayana #kamba_ramayana #nageswaran_temple #kumbakonam
Vishwamitra and the two princes came to Tataka's forest and the sage ordered Rama to kill the demoness to free the area from her terror. Rama was hesitant to kill her as she was a woman and initially maimed her, chopping off her hands so that she could not attack him further. Using her demonic powers, she changed form, disappeared and continued to attack them .
In this story Tataka is described as a huge ogre, who sports a string of elephants as her girdle. So, to show her size the sculptor allocates to her half the panel to tataka Rama, Lakshmana and Viswamitra are in the remaining space.
--- Ramu.RmN
Saturday, 4 April 2020
கம்பராமாயணமும் நாகேசுவரன் கோவில் குறுஞ்சிற்பமும் 6
கம்பராமாயணத்தில் தடகையை வதைக்கும் முன் கீழ் காணும் பாக்களின் மூலம் இராமனுக்கு விசுவாமித்திரர் மந்திரங்களை தான் உபதேசிக்கின்றதாக கம்பர் குறிப்பிடுகின்றார் ஆனால் நமது நாகேசுவரன் கோவில் சிறப்ப தொகுப்பிலோ வில்வித்தையின் நுணுக்கத்தை பயிற்றுவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
வெம்மையை தாங்கும் ஆற்றல் பெற இராம இலக்குவருக்கு இரண்டு மந்திரங்களை முனிவன் உபதேசித்தல்
#கம்பராமாயணம் #பால_காண்டம்
#தாடகை_வதைப்_படலம்
எரிந்து எழு கொடுஞ் சுரம் இனையது எய்தலும்,
அருந் தவன், 'இவர், பெரிது அளவு இல் ஆற்றலைப்
பொருந்தினர் ஆயினும், பூவின் மெல்லியர்;
வருந்துவர் சிறிது' என மனத்தின் நோக்கினான். 17
நோக்கினன் அவர் முகம்; நோக்க, நோக்குடைக்
கோக் குமரரும் அடி குறுக, நான்முகன்
ஆக்கின விஞ்சைகள் இரண்டும் அவ் வழி
ஊக்கினன்; அவை அவர் உள்ளத்து உள்ளினார். 18
#Chola_miniatures #panels #Ramayana #kamba_ramayana #nageswaran_temple #kumbakonam
In their course of travel Sage #Vishvamitra gives the knowledge of the #Devastras or celestial weaponry [bala and adi bala] to #Rama and #Lakshmana he trains them in advanced religion and guides them to kill powerful demons.
In this miniature panel sculptor had shown beautifully how Sage Viswamitra giving Rama some additional training in wielding the bow
-- Ramu.RmN
கம்பராமாயணமும் நாகேசுவரன் கோவில் குறுஞ்சிற்பமும் 5
Friday, 3 April 2020
கடகம் அன்றும் இன்றும்
கடகம் / கடகப்பெட்டி /காடாப்பெட்டி
என்பது, பனையோலையால் செய்யப்படும் அளவில் பெரிய ஒரு வகைப் பெட்டி. இது தானியங்கள், பல வகையான பொருட்களை சேகரிக்கவும் நீண்ட நாட்கள் வைத்திருக்கவும் பயன்படுத்துவர். குறிப்பாக, பயறுவகைகள், வெல்லம், புளி, மிளகாய், கறிக்காய்கள் போன்ற பொருட்களை இட்டு வைப்பதற்கும், ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்திற்கு எடுத்துச் செல்வதற்கும் தென்மாவட்டங்களிலும் யாழ்பாணத்திலும் பயன்படுத்தப்படுகின்றன பனையோலையால் செய்யப்ப ஒருவித காதற்ற கூடை .
படம்1 : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரம் கால் மாண்டபத்தில் உள்ள நாயக்கர் கால தூண் சிற்பம். இந்தப் பெண் சிற்பத்தில் மூன்று குழந்தைகளை தாங்கி கொண்டு ஒரு குழந்தையை தான் தோள்பட்டையில் சுமந்து கொண்டும் மற்றொரு கைகுழந்தையை நெஞ்சில் தன் துணியால் தொட்டில் போன்று கட்டி பாதுகாப்பாக வைத்துக்கொண்டு கையில் ஒரு பிள்ளையை அழைத்துக்கொண்டு சந்தைக்க நடந்து செல்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு இடையில் அவள் கையில் பனை ஓலையில் முடையப்பட்ட கடகம் வைத்துள்ளாள். அதில் பனைஓலையின் வடிவம் மிக நுணுக்கமாகவும் அப்படி ஒரு தத்துருவமாக வடித்துள்ளார்.
படம் 2: புதுச்சேரி ஆரோவில்லில் வசிக்கும் ராஜ்குமார் ஸ்தபதி அவர்கள் 2007/2008 களில் வரைந்த நீர்வண்ண ஓவியம். கடகத்தில் கறிக்காய்கள் கொண்டுவரும் பெண்கள். இந்த காட்சியை பல தென்மாவட்டங்களில் கூடும் வார சந்தைகளில் நம்மால் இன்றும் காணமுடியும் சற்றும் குறைந்த எண்ணிக்கையில்.
படம்3: கடகம் சென்னை MRC நகரில் உள்ள மஞ்சள் அறக்கட்டளையில் விற்பனைக்கு காட்சிபடுத்தப்பட்டிருந்த கடகம்.தென் மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பனை மரங்கள் அதிகம் உள்ளன. இப்பகுதிகளில் பனையோலைகளில் பெட்டி, கூடை, கொட்டான், அஞ்சறைப் பெட்டி, மிட்டாய் பெட்டி, பர்ஸ், விசிறி, முறம், தட்டு, கிலுகிலுப்பை, தொப்பி என விதம்விதமான கைவினைப் பொருட்கள் செய்யப்பட்டுவந்தன இவ்விடங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் பனையோலையால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இதெல்லாம் இருந்தாலும், நாகரிக மோகம் காரணமாகப் பனையோலைக் கைவினைப் பொருட்கள் தற்போது மோசமான பின்னடைவைச் சந்தித்து வருகின்றன. பாரம்பரியமாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தனை சேர்ந்த திருமதி. விசாலாட்சி ராமசாமி ஆச்சி அவர்களால் 20 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட மஞ்சள் அறக்கட்டளை ( M.Rm.M culture foundation ) என்ற பெயரில் சிவகங்கை மாவட்டம் செட்டிநாட்டு பகுதி பெண்களை கொண்டு அப்பகுதியில் புழக்கத்தில் இருந்த கொட்டான், கடகம் , தடுக்கு ,கூடை போன்ற பனையால் செய்த பொருட்களை தற்காலத்திற்கு ஏற்ற வகையில் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் சென்னையில் உள்ள இவரது( M.Rm.M culture foundation MRC Nagar Main Road, No. 70, MRC Nagar 1st Ln, MRC Nagar, Raja Annamalai Puram, Chennai, Tamil Nadu 600028 https://chettinadculture.wixsite.com/mrmrmcf ) நிறுவனத்தில் விற்பனையும் செய்கின்றார்கள். இந்த நிறுவனத்திற்கு 2012 ஆண்டு தெற்காசிய நாடுகளுக்காக UNESCO நடத்திய கைவினைப்பொருட்களுக்கான நிகழ்ச்சியில் சிறந்த கைவினைப்பொருளுக்கான விருதினை இந்நிறுவனத்தினர் பெற்றுள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது
--று.நா.இராமு