#கோசலை வயிற்றில் #திருமால் அவதரித்தல் #கம்பராமாயணம் #பால_காண்டம்
#திருஅவதாரப்_படலம்
ஆயிடை, பருவம் வந்து அடைந்த எல்லையின்,
மா இரு மண்மகள் மகிழ்வின் ஓங்கிட,
வேய் புனர்பூசமும், விண்ணுளோர்களும்,
தூய கற்கடகமும், எழுந்து துள்ளவே, 99
சித்தரும், இயக்கரும், தெரிவைமார்களும்,
வித்தக முனிவரும், விண்ணுளோர்களும்,
நித்தமும், முறை முறை நெருங்கி ஆர்ப்புற,
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே. 100
ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து,
அரு மறைக்கு உணர்வு அரும் அவனை, அஞ்சனக்
கரு முகிற் கொழுந்து எழில் காட்டும் சோதியை,
திரு உறப் பயந்தனள் - திறம் கொள் #கோசலை. 101
#Kausalya / kosalai was the mother of Lord Rama the eldest queen of #Ayodhya and the eldest consort of King Dasharatha among his three wives. In this panel where Kausalya feeds baby Rama she is reclining on a cot, holding the baby so that it does not fall off.The foreshortening of her limbs to fit into the panel
#Chola_miniatures #panels #Ramayana
#kamba_ramayana #nageswaran_temple #kumbakonam
---Ramu.RmN
No comments:
Post a Comment