Saturday 11 April 2020

கம்பராமாயணமும் நாகேசுவரன் கோவில் குறுஞ்சிற்பமும் 10

இராமன் போர் செய்யத் தொடங்குதல் (39,40)இராமனின் அம்பு சுபாகுவைக் கொன்று, மாரீசனைக் கடலில் சேர்த்தல்(41,42)பிற போர்க்கள நிகழ்ச்சிகள் (43)தேவர்கள் இராமனை வாழ்த்துதல்(44,45)வேள்வியை இனிது முடித்த முனிவன் இராமனைப் பாராட்டுதல்(46)
 
#கம்பராமாயணம் #பால_காண்டம்
 #வேள்விப்_படலம்

நஞ்சு அட எழுதலும் நடுங்கி, நாள்மதிச்
செஞ் சடைக் கடவுளை அடையும் தேவர்போல்,
வஞ்சனை அரக்கரை வெருவி, மா தவர்,
'அஞ்சனவண்ண! நின் அபயம் யாம்' என்றார். 39

தவித்தனன் கரதலம்; 'கலங்கலீர்' என,
செவித்தலம் நிறுத்தினன், சிலையின் தெய்வ நாண்;
புவித்தலம் குருதியின் புணரி ஆக்கினன்;
குவித்தனன், அரக்கர்தம் சிரத்தின் குன்றமே. 40

திருமகள் நாயகன் தெய்வ வாளிதான்,
வெருவரு தாடகை பயந்த வீரர்கள்
இருவரில் ஒருவனைக் கடலில் இட்டது; அங்கு
ஒருவனை அந்தகபுரத்தின் உய்த்ததே. 41

இறவாது எஞ்சிய அரக்கர்கள் அஞ்சி ஓடுதல்
துணர்த்த பூந் தொடையலான் பகழி தூவினான்;
கணத்திடை விசும்பினைக் கவித்துத் தூர்த்தலால்,
'பிணத்திடை நடந்து இவர் பிடிப்பர் ஈண்டு' எனா
உணர்த்தினர், ஒருவர்முன் ஒருவர் ஓடினார். 42

ஓடின அரக்கரை உருமின் வெங் கணை
கூடின; குறைத் தலை மிறைத்துக் கூத்து நின்று
ஆடின; அலகையும், ஐயன் கீர்த்தியைப்
பாடின; பரந்தன, பறவைப் பந்தரே. 43

பந்தரைக் கிழித்தன, பரந்த பூ மழை;
அந்தர துந்துமி முகிலின் ஆர்த்தன;
இந்திரன் முதலிய அமரர் ஈண்டினார்;
சுந்தர வில்லியைத் தொழுது வாழ்த்தினார். 44


புனித மா தவர் ஆசியின் பூ மழை பொழிந்தார்;
அனைய கானத்து மரங்களும் அலர் மழை சொரிந்த;
முனியும், அவ் வழி வேள்வியை முறைமையின் முற்றி,
இனிய சிந்தையன், இராமனுக்கு இனையன இசைத்தான்; 45

'பாக்கியம் எனக்கு உளது என நினைவுறும் பான்மை
போக்கி, நிற்கு இது பொருள் என உணர்கிலென் - புவனம்
ஆக்கி, மற்றவை அனைத்தையும் அணி வயிற்று அடக்கி,
காக்கும் நீ, ஒரு வேள்வி காத்தனை எனும் கருத்தே.' 46

The young princes safeguarded the ritual for six days and nights. On the sixth day of Yajna, Marich and Subahu again came there with a large number of their followers. They were determined to desecrate the holy site of Yajna.Rama and Lakshmana were standing alert to guard the place. Rama drew his bow and instantly Subahu was killed and Maricha was hit by the arrow which took and threw him and instantly Marich was hit by the arrow which took and threw him in the ocean a hundred miles away. The Yajna was completed without any further disturbance. 

#Chola_miniatures  #panels #Ramayana #kamba_ramayana #nageswaran_temple #kumbakonam

--Ramu.RmN

No comments: