Saturday 4 April 2020

கம்பராமாயணமும் நாகேசுவரன் கோவில் குறுஞ்சிற்பமும் 5


தயரதன் அரியணையில் வீற்றிருக்க, விசுவாமித்திர முனிவனின் வருகை ( 3 ,4 ) தயரதன் கை கூப்பித் தொழுது, 'யான் செய்வது அருளுக!' என வேண்டுதல் (10)வேள்வி காக்க தயரதனிடம் கரிய செம்மலை முனிவன் வேண்டல்(11) தயரதன் இராம இலக்குவரை முனிவனிடம் ஒப்புவித்தல் ( 17, 18 )

 #கம்பராமாயணம் #பால_காண்டம்
#கையடைப்_படலம்

தூய மெல் அரியணைப் பொலிந்து தோன்றினான்;
சேய் இரு விசும்பிடைத் திரியும் சாரணர்,
'நாயகன் இவன்கொல்?' என்று அயிர்த்து, நாட்டம் ஓர்
ஆயிரம் இல்லை என்று ஐயம் நீங்கினார். 3

மடங்கல்போல் மொய்ம்பினான் முன்னர், 'மன்னுயிர்
அடங்கலும் உலகும் வேறு அமைத்து, தேவரோடு
இடம் கொள் நான்முகனையும் படைப்பென் ஈண்டு' எனாத்
தொடங்கிய, துனி உறு, முனிவன் தோன்றினான். 4

உரைசெய்யும் அளவில், அவன் முகம் நோக்கி, உள்ளத்துள் ஒருவராலும்
கரை செய்ய அரியது ஒரு பேர் உவகைக் கடல் பெருக, கரங்கள் கூப்பி,
'அரைசு எய்தி இருந்த பயன் எய்தினென்; மற்று, இனிச் செய்வது அருளுக!' என்று,
முரைசு எய்து கடைத்தலையான் முன் மொழிய, பின் மொழியும் முனிவன், ஆங்கே: 10

'தரு வனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு இடையூறு, தவம் செய்வோர்கள்
வெருவரச் சென்று அடை காம வெகுளி என, நிருதர் இடை விலக்கா வண்ணம்,
"செருமுகத்துக் காத்தி" என, நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி' என, உயிர் இரக்கும் கொடுங் கூற்றின், உளையச் சொன்னான்.11

குருவின் வாசகம் கொண்டு, கொற்றவன்,
'திருவின் கேள்வனைக் கொணர்மின், சென்று' என,-
'வருக என்றனன்' என்னலோடும், வந்து
அருகு சார்ந்தனன், அறிவின் உம்பரான். 17

வந்த நம்பியைத் தம்பிதன்னொடும்
முந்தை நான்மறை முனிக்குக் காட்டி, 'நல்
தந்தை நீ, தனித் தாயும் நீ, இவர்க்கு;
எந்தை! தந்தனென்; இயைந்த செய்க!' என்றான். 18
#Chola_miniatures  #panels #Ramayana 
#kamba_ramayana #nageswaran_temple #kumbakonam

When #Rama was about 16 years old, sage #Vishwamitra came to visit #Dasharatha in search of help against #rakshsas (demons), who were disturbing his #Vedic_rituals . He asked King Dasharatha to send Rama for protection against two powerful demons called #Maareecha and #Subaahu. Considering Rama’s age, King Dasharatha became very upset at the sage’s request and refused to send him. Sage Vishwamitra became very angry but was finally pacified by the intervention of Vasishtha. He convinced Dasharatha to send Rama with Vishwamitra, ensuring him that Vishwamitra’s powers and Rama’s own capabilities would make him successful. Finally, Dasharatha agreed, and Rama and #Lakshmana were dispatched with Vishwamitra.

No comments: