முனிவன் பணித்தபடி, தயரதன் தம் மனைவியர் மூவர்க்கும் பிண்டத்தைப் பகிர்ந்து அளித்தல் (86,87,88)பிதிர்ந்து வீழ்ந்ததையும் தயரதன் சுமித்திரைக்கு அளித்தல் (89)
மா முனி பணித்திட, மன்னர் மன்னவன்,
தூம மென் சுரி குழல் தொண்டைத் தூய வாய்க்
காமரு கோசலை கரத்தில், ஓர் பகிர்,
தாம் உற அளித்தனன், சங்கம் ஆர்த்து எழ. 86
கைகயன் தனையைதன் கரத்தும், அம் முறைச்
செய்கையின் அளித்தனன், தேவர் ஆர்த்து எழ-
பொய்கையும், நதிகளும், பொழிலும், ஓதிமம்
வைகுறு கோசல மன்னர் மன்னனே. 87
நமித்திரர் நடுக்குறு நலம் கொள் மொய்ம்புடை
நிமித் திரு மரபுளான், முன்னர், நீர்மையின்
சுமித்திரைக்கு அளித்தனன் - சுரர்க்கு வேந்து, 'இனிச்
சமித்தது என் பகை' என, தமரொடு ஆர்ப்பவே. 88
பின்னும், அப் பெருந்தகை, பிதிர்ந்து வீழ்ந்தது-
தன்னையும், சுமித்திரைதனக்கு நல்கினான் -
ஒன்னலர்க்கு இடமும், வேறு உலகின் ஓங்கிய
மன்னுயிர்தமக்கு நீள் வலமும், துள்ளவே. 89
#கம்பராமாயணம் #பால_காண்டம்
#திருஅவதாரப்_படலம்
Dasharatha gives the porridge (kheer) to his three queens Kaushalya ate half the porridge ( kheer ) Sumitra ate a quarter of it. Kaikeyi ate some and passes back to Sumitra who consumed for the second time. Thus the princes were conceived after the consumption of the porridge (kheer). Since Kaushalya had consumed the largest portion she gave birth to Rama. Kaikeyi gave birth to Bharata. Sumitra gave birth to Lakshmana and Shatrughna.
#nageswaran_temple #kumbakonam
#Chola_miniatures #panels #Ramayana
#kamba_ramayana
-- Ramu.RmN
No comments:
Post a Comment